கோழி கிறுக்கல்

கோழி கிறுக்கல்

சந்தியா வந்தனம் அத்தியாயம் : 6 / Sandhiya vandhanam Episode :6

             


சந்தியா வந்தனம்  அத்தியாயம் : 6 

 Sandhiya vandhanam Episode :6




        இன்னும் ஒரு லக்கேஜ் காரில் இருந்தாலும், அதை காவல் காப்பதற்கெல்லாம் சந்தியா காரின் அருகே நிற்கவில்லை. ஆதித்யன் வந்தால் தனியாக பேசி கொண்டே போலாமே என்றும் நினைக்கவில்லை. மாறாக ஆதித்யன் வந்து அடுத்து என்னவெல்லாம் நடக்குமோ என்ற apprehension சற்று அதிகமாகவே இருந்தது. அதனால் அந்த moment வராதவரை status quo நீடீக்கட்டும் என தோன்றியது சந்தியாவிற்கு. முக்கியமாகவர்ஷாவுக்கு உரிமை இருப்பதால் தானே அவள் வேகமாக அபார்ட்மெண்ட் நோக்கி செல்ல முடிந்தது. அது இல்லாததால் தானே தான் இங்கு தயங்கி நிற்கிறோம் என்ற சிந்தனை அவளது Discomfort- அதிகரித்தது. இப்படி யோசித்தவாறே சந்தியா மெல்ல நடந்து lift அருகில் வந்து lift button அழுத்தினாள்.  Instead of staying here, Why can’t I simply go to my own place? Atleast that’s my place. May be Varsha will feel better. இங்கே இருந்து மேலும் misunderstanding வருவதற்கு பதில் நம்ம ரூமுக்கு போயிடலாம். ஆட்டோ பிடிச்சிக்கலாம். Two Wheeler அப்புறம் எடுத்துக்கலாம். ஆதித்யனுக்கு Message அனுப்புவோம் என பிளான் பண்ணி முடிக்க லிப்ட் கதவு திறந்தது. சந்தியாவால் உள்ளே தான் போக முடியவில்லை. லிஃப்டில் நின்று கொண்டிருந்தது ஆதித்யன்


             அங்கே நின்று கொண்டிருந்த சந்தியாவைநீ இன்னுமா பார்க்கிங்கில் இருக்க?என்ற அர்த்தத்தில் பார்த்த ஆதித்யன் வேறெதுவும் சொல்லாமல் மற்றுமோர் லக்கேஜை எடுக்க கார் நோக்கி நடந்தார். இப்போ இன்னும் அதிகம் குழம்பினாள் சந்தியா. So what. I can still tell him and leave. He will understand என முடிவெடுத்தாள் சந்தியா


kozhi kirukkal, suppan, sandhiya vandhanam, tamil kadhaikal,tamil love stories for reading, tamil kadhal kathaigal, tamil kadhal siru kathaigal, தமிழ் காதல் கதைகள்
சந்தியா வந்தனம்  அத்தியாயம் : 6 



          Lift பட்டன் அழுத்தி அவள் வெயிட் பண்ண ஆதித்யன் அங்கு வந்து சேர்ந்தார். அவர்களுக்கு இடையே ஒரு செயற்கையான இடைவெளி இருந்தது. காரின் மௌனம் தொடர்ந்தது. எப்பொழுது வெளிவருவது என அவளின்  கண்ணீர்  துளிகள் Waiting -ல் இருந்தது. Lift வந்து கதவு திறக்க இருவரும் ஏறி கதவு மூடியதுமே ஆதித்யன் சந்தியாவை பற்றி இழுத்து தன்னோடு சேர்த்து தன் இதழை அவள் இதழ் மீது அழுத்த, இதை சற்றும் எதிர்பாராத சந்தியா சற்று திக்குமுக்காடி தான் போனாள்சில விநாடிகளில் ஆதித்யனின் முழு அரவணைப்பிற்கு சந்தியாவும் ஈடு கொடுக்க waiting-ல் இருந்த கண்ணீர் ஆனந்த கண்ணீராக சந்தியாவின் கன்னத்தில் துள்ளி குதித்தது. மௌன ராகம் பாடி கொண்டிருந்த ஆதித்யன் திடீரென சந்தியா சற்றும் எதிர்பாராமல் பாடிய சந்தியா ராகம்  ‘மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே,..என சந்தியாவின் இதயத்தில் ஒலித்தது. இந்த டைமிங் டூயட் எல்லாம் சில விநாடிகளே!! Eigth floor-ல் lift நிற்பதற்கு 1/4 நொடிக்கு முன் சந்தியாவை Release செய்த ஆதித்யன் relax ஆனார். சந்தியா தான் balance செய்து நிற்க கொஞ்சம்  சிரமப்பட்டாள். ‘ You கள்ளா !என செல்லமாக மனதில் திட்டியவாறே கொஞ்சினாள்( அல்லது கொஞ்சியவாறே திட்டினாள்). 


       Lift-ன் கதவு திறந்தவுடன் சந்தியாவின் வாழ்க்கை பாதையும் நல்ல வெளிச்சமாகவே தெரிந்தது அவளுக்கு. ஒரு அரை நிமிடத்துக்கு முன் தன் ரூமுக்கே போவது பற்றி சந்தியா யோசித்தது உங்களுக்கு வேண்டுமானால் ஞாபகம் இருக்கலாம். சந்தியாவுக்கு அதெல்லாம் இப்போது சுத்தமாக  ஞாபகமே இல்லைஆதித்யனை பொறுத்தவரை சந்தியா விஷயத்தில் அவருக்கு குழப்பமே இல்லை. சந்தியாவின் மனநிலையை ஓரளவு யூகித்த ஆதித்யன்  தன் வாழ்க்கையில் அவள் நிரந்தரமானவள் என்பதை தெளிவுபடுத்த சரியான தருணத்திற்கே காத்திருந்தார். சந்தியாவின் இதழை மென்று அவர் உதிர்த்த ‘Munch Dialogue’ செம impactful என்றே தோன்றுகிறது.



            Lift -ல் இருந்து ஆதித்யனும் சந்தியாவும் வெளியேறியதை பார்த்த அங்கே நடந்து போய் கொண்டிருந்த, retired ஆகி இருபது வருடங்கள் ஆன ஒரு பெரியவர் ஆதித்யனிடம் , ‘ Mr. Aathithyan , Was that Varsha who entered your house? ‘ என கேட்கஆதித்யனும் சற்று பெருமையாக ‘ Yes. Varsha is here for vacation’ என கூறினார். பெரியவரும் சளைக்காமல் ‘ Who is this girl ?’ என சந்தியாவை பார்த்து  கேட்கதன்னை ஒரு 11th std பொண்ணு ரேஞ்சுக்கு கேட்ட பெரியவரை சந்தியா சற்றே முறைக்க, ஆதித்யன் கூலாக சந்தியாவின் தோளில்  கைபோட்டு ‘She is my wife Sandhiya ‘ என தயங்காமல் கூறினார். சந்தியா இப்போ கொஞ்சம் கெத்தாக ‘ Hello. I’m Mrs. Sandhiya Aathithyan.’ என Introduce செய்து கொண்டாள். சந்தியாவின் இளமை தோற்றத்தை பார்த்து ஷாக்கான பெரியவர் ‘Then Varsha ?! ’ என சற்றே சங்கோஜத்தோடு சந்தேகமாக கேட்க, ‘She is my daughter of course ’ என தெளிவாகவே பதில் சொன்னாள் சந்தியா. ‘Oh I see’ என ரொம்பவே Confuse ஆகி  நம்ம கண்ணில் தான் கோளாறா இல்லைனா நிஜமாவே சோப்பு விளம்பரத்தில் வருவது மாதிரியா என புரியாமல் நகர்ந்தார் பெரியவர்


                                  *****


      வர்ஷா மூன்று வருடங்களுக்கு பிறகு இந்த வீட்டிற்குள் நுழையும் போதுஇங்க வராமலேயே இருந்திருக்கலாம்என்ற மனநிலையோடு தான் நுழைந்தாள். தன் அம்மா வித்யா ஆதித்யனின் நினைவுகள் அவளை சூழ்ந்தன. அங்கே இருந்த ஒவ்வொரு பொருளிலும் அவளது அம்மாவின் ஏதாவது ஒரு நினைவு எழுதப்பட்டிருந்தது. இந்த நினைவுகளின் வலியில் இருந்து விடுபட தானா தன் தந்தை ஆதித்யன் சந்தியாவை நாடினார்? என்ற கேள்வி தானாக வந்து விழுந்தது. தன் தாயின் நினைவு வந்த அடுத்த நொடி சந்தியாவும் நினைவில் வருவது அவளுக்கு எரிச்சலூட்டியது. அவள் வீட்டில் நுழைந்ததுமே Shoe Rack-ல் சில ஜோடி Female Sandals and Slippers இருந்தது. அருகில் இருந்த Cushion மீது கொஞ்சம் சின்ன Size helmet -ம், அதனுள் Head Scarf Bandana-வும் இருந்தது. இதெல்லாம் யாருடைது என guess செய்வது சுலபம் தான் வர்ஷாவிற்கு.  Dining table chair -ல் இருந்த Laptop bag (மற்றும் Laptop) தான் சந்தியாவிற்கு Gift ஆக கொடுத்தது தான் என உடனே வர்ஷா லிங்க் செய்தாள். சந்தியா Work from Home கூட இங்கே இருந்து தான் போல என நினைத்தாள். தனது Puller- இழுத்து கொண்டு தனது அறைக்கு போவதற்கு முன் Balcony அவள் கண்ணை பறித்தது.அங்கே சந்தியாவின் ஆடைகளும் ஆதித்யனின் ஆடைகளும் ரொம்பவே நெருக்கமாக உரசி கொண்டு Sun Dry ஆகி கொண்டிருந்தன. இவங்க Working Together from Home போல இருக்கு என தெளிவாகவே புரிந்தது வர்ஷாவிற்கு. இருந்தாலும் வர்ஷாவின் மூளையில், ஏதாவது ஒரு மூலையில் இவர்கள் எதையும் மறைக்க முயற்சிக்கவில்லை என்பது தோன்றாமலா இருந்திருக்கும்??


kozhi kirukkal, suppan, sandhiya vandhanam, tamil kadhaikal,tamil love stories for reading, tamil kadhal kathaigal, tamil kadhal siru kathaigal, தமிழ் காதல் கதைகள்
சந்தியா வந்தனம்  அத்தியாயம் : 6 



           வீட்டு வேலை, சமையல் வேலை, Car cleaning என எதற்கும் ஆள் வைக்காமல் தன் கையே தனக்குதவி என்ற ஏழாங்கிளாஸ் பாடத்தை ரொம்பவே கெட்டியாக கடைபிடிப்பவர் ஆதித்யன். அவரது அந்த Reputation-  ரொம்பவே பெருமையாக நினைப்பாள் வர்ஷா. இப்போழுது கூட வீடு அப்பழுக்கில்லாமல் Clean and neat ஆகவே இருந்தது. ஆனால் இப்போது ஆதித்யனுக்குகை கொடுக்கும் கையாகசந்தியாவும் அங்கேயே இருப்பது அவரது அந்த ரெக்கார்டில்  ஒரு கீறலாக வர்ஷாவிற்கு பட்டதுஎப்படியோ தனது அறையில் நுழைந்து கதவை சாத்தினாள் வர்ஷா.

        

           அவள் மூன்று வருடங்களாக தங்காத அந்த அறை எப்படி இருந்தது? இரண்டு வாரங்களுக்கு  முன் ஆதித்யனே தன் கையால் அதை பச்சை நிறத்தில் repaint செய்திருந்தார். புது Bedspread நீட்டாக bed-ன் மேல் போர்த்தப்பட்டிருந்தது. அவளது புத்தகங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததன. ஒரு Shelf -ல் அவளுக்கு தேவையான Toiletries மற்றும் Cosmetics அத்தனையும் இருந்தன. இந்த Toiletries எல்லாம் சில நாட்களுக்கு முன் ஆதித்யன் Shelf இல் அடுக்கி வைத்து கொண்டிருந்த போது வேடிக்கை பார்த்து கொண்டருந்த சந்தியா, ‘ நல்ல வேளைப்பா. பொண்ணுக்கு Sanitary napkin எல்லாம் வாங்கி வெச்சு ஓவரா Scene போடாம அடக்கி வாசிச்சீங்களே. சந்தோஷம்என வேடிக்கையாக சலித்து கொண்டாள். இன்னொரு Shelf -ல் புதிய Co-Optex Towelகள் அரை டஜன் இருந்தது. அதற்கு அருகில் டிஸைன் டிஸைனாக புதிய bed spread மற்றும் blankets சிலதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததன. கீழ் shelf -ல் ஒரு டஜன் Bottled water இருந்தது. Bed lamp அருகில் புது Battery போடப்பட்ட Air Conditioner remote இருந்தது. அதன் அருகில் புதிய Thermos water bottle இருந்தது.  ‘உங்க பொண்ணு என்ன புதுசா ஸ்கூலுக்கா போகப்போறா இப்படி புது Water bottle எல்லாம் வாங்கறதுக்கு?. ஏன் School bag, Pencil box வாங்கறது தானேஎன இரண்டு நாட்களுக்கு முன் கடையில் சந்தியா ஆதித்யனிடம் கிண்டலாக கேட்டாள். அந்த ரூமில் வர்ஷாவின் கட்டளைகளை நிறைவேற்ற ஆதித்யனின் பிரதிநிதியாக அந்த Bedlamp டேபிளின் மூலையில் காதுகளை தீட்டி கொண்டு தயாராக இருந்தது Alexa Echo Device. இதை பார்த்து tension ஆன சந்தியா  ‘ Alexa வேறயா!! ரொம்ப தான். முடியலைப்பாஎன சொல்ல, அதை கேட்டு ‘ I don’t understand வேறயா!! ரொம்ப தான். முடியலைப்பாஎன கறாராக பதிலளித்தது Alexa-வின் பெண் குரல். ‘ Including Alexa you have to listen to three women in this house Mr. Aathithyan ‘ என பரிதாபப்பட்டாள் சந்தியா.

                         

                    இப்படி ஆசை ஆசையாய் எல்லாம் வாங்கி வர்ஷாவின் ரூமை  ஒரு ஸ்டார் ஹோட்டல் ரூம் போல் பக்காவாக செட் செய்திருந்தார் தாயும் ஆனவரான ஆதித்யன். தமிழில் உள்ள இந்ததாயுமானவர்என்ற சொல்லுக்கு இணையான ஆழமான சொல் நமக்கு தெரிந்து ஆங்கிலத்தில் இல்லை. Single Dad , Motherly என shallow வாக தான் சொல்ல முடியும். வர்ஷா ஆதித்யனைதாயும் ஆனவராகபார்த்தாளா அல்லது வெறும் Single Dad ஆக பார்த்தாளா என்பதை காலம் தான் நமக்கு சொல்ல வேண்டும்


      தனது அறையில் எதையும் appreciate செய்யும் மனநிலையில் வர்ஷா இல்லை. அங்கே சுவற்றில்  இருந்த அந்த நான்கு போட்டோக்களை  மட்டும் ஒரு விநாடி பார்த்தாள். மேல் முனையில் வர்ஷா, வித்யா மற்றும் ஆதித்யன். இடது புறத்தில் வித்யா மற்றும் வர்ஷா. வலது புறத்தில் வர்ஷா மற்றும்  ஆதித்யன். கீழே சந்தியாவும் வர்ஷாவும். ஒரு விநாடி இந்த Configuration பெரிதாக மாறவில்லை என பட்டது. மறுவிநாடி அது தலை கீழாக மாறியதாகவும் தோன்றியது. இப்படி மாறி மாறி தோன்றிய அந்த தருணம் Jetlag, Stress, confusion  எல்லாம் கலந்து உறக்கத்தின் விளம்பில் இருந்தாள் வர்ஷா

kozhi kirukkal, suppan, sandhiya vandhanam, tamil kadhaikal,tamil love stories for reading, tamil kadhal kathaigal, tamil kadhal siru kathaigal, தமிழ் காதல் கதைகள்
சந்தியா வந்தனம்  அத்தியாயம் : 6 





         ஆதித்யனும், சந்தியாவும் வீட்டுக்குள் நுழையும் போது வர்ஷா தன் அறையில் இருந்தாள். ஆதித்யன் அவள் அறைக்கு சென்று சாப்பிடறயா என கேட்டதற்கு, ‘ No Dad. I have some energy bars. I will just have them. I’m too stressed out. I really want to sleep’ என bathroom -ல் இருந்து brush செய்தவாறே சொல்லிவிட்டு  நிஐமாகவே உறங்கி போனாள். உறங்கும் முன் அவள் தனக்கு தானே கூறி கொண்டது ‘ I shouldn’t feel weak. I should be mentally and physically strong’ என்பது தான்.


         ஆதித்யனுக்கு தான் சற்று ஏமாற்றமாக இருந்தது. வர்ஷாவின் வருகைக்காக கடந்த ஒரு மாதமாக வீட்டிலும் அவள் ரூமிலும் சிறிதும் பெரிதுமாய் பல பணிகளை செய்திருந்தார். ஆனால் இப்போது வீட்டிற்க்கு வந்ததும் வர்ஷா தன் முகத்தை கூட அவரிடம் காட்ட விரும்பவில்லை. இதை நினைத்து ஆதித்யன் தன் மௌனத்தினிடையே கொஞ்சம் தவித்து தான் போனார்


           ஒருவருக்கு தானாக வலிய வருவதல்ல மௌனம். ஒருவரின் வலியில் வருவதே மௌனம்


                                                                                                                        ( தொடரும்)



இதுவரையான சந்தியா வந்தன அத்தியாயங்களை படிக்க👇

1 ) அத்தியாயம் #1


2 ) அத்தியாயம் #2


3 ) அத்தியாயம் #3


4 ) அத்தியாயம் #4


5) அத்தியாயம் #5 


சந்தியா வந்தனத்தின் அடுத்த அத்தியாயம் படிக்க 👇,

சந்தியா வந்தனம் அத்தியாயம் #7 



Previous
Next Post »