ரொம்பவே சுமாரான எழுதும் திறன், நிறைய வாசிக்கும் பழக்கம், இதை எல்லாம் விட நாம் எழுது’வதை’ பொறுத்து கொண்டு ஓரிருவர் படித்து விட கூடும் என்ற அசாத்திய தன்னம்பிக்கை. இதெல்லாம் சேர்ந்து கொண்டதன் விளைவு இந்த கோழி கிறுக்கல்.
ஒரே ஒரு உறுதி மொழி கண்டிப்பாக கொடுக்க முடியும். எவ்வளவு கிறுக்கினாலும் அது நிச்சயம் ஒரிஜினல் கிறுக்கலாக இருக்கும்.
ஒரு ஆறுதலும் உண்டு. காலப்போக்கில் இந்த சுப்பனை தவிர்த்து வேறு பல திறமையானவர்களை அடையாளம் கண்டு அவர்கள் எழுத்துகளை வெளியிடும் எண்ணமும் உண்டு.
இனி நான் கிறுக்க அதை படிப்பவர்கள் கிறுகிறுக்க நமது உறவு இனிதே தொடங்குகிறது.
இப்படிக்கு,
சுப்பன்
பின்குறிப்பு:
நம் எழுத்துகளை வெளியிட்டு அதற்கு கோழி கிறுக்கல் என பெயரிட்டு கோழிகளை அவமானப்படுத்தும் எண்ணம் துளியும் நமக்கில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்.