சந்தியா வந்தனம் அத்தியாயம்
2
Sandhiya vandhanam Episode :2
சந்தியா வந்தனம் அத்தியாயம் 2-ல்,
காலை மணி 8:00
காலை நேர டிராஃபிக்கில் நிதானமாக காரை ஆதித்யன் ஓட்ட வர்ஷா ஆல்மோஸ்ட் non-stop ஆக பேசிக் கொண்டிருந்தாள். வர்ஷாவும் சந்தியாவும் ஒருவர் கையை இன்னொருவர் பிடித்த படியே அருகருகே பின் seat இல் அமர்ந்திருந்தனர்.
‘ Dad, Is your Move to
Australia confirmed? ‘.
அங்கே காருக்குள் சந்தியா, ஆதித்யன் இருவருக்கும் ஏற்கனவே இருந்த நெருடல் இன்னும் சற்றே அதிகமானது.
‘நீ வேற நாலு வருஷமா யாரையோ Date பண்ணிட்டிருக்க...அவரையும் கூட்டிட்டு வந்து நம்ம apartment லேயே stay பண்ண சொல்லு . வசதியா போயிடும்’. என சற்றே teasing ஆக வர்ஷா சொல்ல சந்தியாவிற்க்கு லேசாக வியர்க்கத் தொடங்கியது. வெளியில் எந்த expression-ம் காட்டாமல் காரை ஓட்டினாலும் ஆதித்யன் மனசுக்குள்ளே யோசிக்கலானார். வர்ஷாவிற்க்கு அரசல் புரசலாக ஏதோ தெரிந்திருக்கிறது. சாதாரணமாக தன்னைப் பற்றிய எந்த தகவலையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத சந்தியாவிடமே துருவி துருவி வர்ஷா எதையோ ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கிறாள்.
![]() |
சந்தியா வந்தனம் அத்தியாயம் : 2 |
அந்த தருணத்தில் சற்று வெளிப்படையாகவே ஆதித்யன் புன்னகை செய்தாலும் அந்த சூழ்நிலையின் விநோதம் சற்று heavy ஆகவே அவருக்குள் இறங்கியது. இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் வர்ஷாவிடம் தான் இந்த உண்மையை சொல்லி அவள் மன நிலையை முற்றிலும் கலைக்க போகிறோம் என்று நினைத்த போது சற்றே பலவீனமாக உணர்ந்தார்.
சந்தியா இப்படி லேசாக கைகளால் முகத்தை மூடிய போது டாலடித்தது நேற்று ஆதித்யன் அவளுக்கு திருமண பரிசாக அளித்த வைர மோதிரம். வர்ஷா முழுதும் சிரித்து முடிக்கும் முன்னரே இதை கவனித்துவிட ‘ என்னப்பா உனக்கு gold jewellery கூட பிடிக்காது. இப்போ டைமண்ட் ரிங்க் போட்டிருக்க. டைமண்ட் தானே அது?. ரொம்ப மாறிட்ட, உன் devil கொடுத்ததா.. ?எங்க என்கிட்ட சொல்லாம கல்யாணம் ஏதும் பண்ணிட்டியா என்ன? ‘ என்று வர்ஷா கொஞ்சம் கிண்டலாக கேட்டதும் சற்றே நிலை குலைந்து போனாள் சந்தியா.
ஏதும் பதில் சொல்லாமல் லேசான புன்னகையோடு மோதிரத்தையே வருட ஆதித்யன் மெல்ல குறுக்கிட்டு , ‘ Varsha, I think you should not make it too uncomfortable for Sandhya’ என்று லேசான புன்னகையை வரவழைத்து சொல்ல உடனே வர்ஷா ‘ Next three weeks இவ கூட தானே இருக்கப் போறேன். Will find out more’ என்று சந்தியாவை teasing பார்வை பார்த்து கூற சந்தியா ஆதித்யன் இருவருக்கும் நெருடல் அதிகரித்தது.
‘Relax-ப்பா.I was just kidding ‘ என வர்ஷா சந்தியாவை சமாதானப்படுத்தினாலும் வர்ஷா சொன்னது உண்மை தான் என்ற குற்ற உணர்வு சுளீர் என சுட்டது. ஆதித்யனுக்கோ குற்ற உணர்வு வேறு வகையில் குடைந்தது. தன் செயல்களில் வர்ஷாவிடம் துளியும் ஒளிவு மறைவு இருந்ததில்லை. வர்ஷா மூன்றாம் ஆண்டு காலேஜ் டூர் முடிந்து வீட்டிற்க்கு வந்த இரவு ‘ எப்படி போச்சுமா டூர்?’ என ஆதித்யன் கேட்க அதுக்கு வர்ஷா ‘ It was fun Dad. We had a good time. And I had sex for a first time ...with my classmate. It is not a serious relationship. Just casual. And we both took all precautions’ என சாதாரணமாக தந்தையிடம் சொன்ன தைரியமும், சமீபத்தில் கலிஃபோர்னியாவில் சந்தித்த போது ‘ I tried weed once Dad. You know it’s legal in California’ என சொன்ன தைரியமும் தன்னிடமிருந்து வந்தது தான். வர்ஷாவும் இதை தன்னடமிருத்து எதிர்பார்ப்பாள் தானே ? தன்னுடைய அந்த தைரியம் எங்கே போனது என்ற குற்ற உணர்வு கலந்த சிந்தனையை கலைத்தது,
‘க்ரீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்’ என்ற கார் டயரின் சத்தம்.
திடீரென
சாலையை கடந்த பூக்கார பெண்மணியை சிந்தனை வயப்பட்டதில் கடைசி நேரத்திலேயே கவனித்த ஆதித்யன் சடால் என பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி லேசாக திசை திருப்பி பெரிய அசம்பாவிதம் ஏதுமின்றி சமாளித்தார். மூவரும் Seat belt அணிந்திருந்ததால்
அதிர்ச்சி மட்டுமே. ‘ உங்களுக்கு ஒண்ணும் ஆகலைல்லபா you’re ok
right?’ என சந்தியா ஆதித்யனின் தோளில் கைவைத்து பதட்டத்தோடு கேட்க உதடு வரை வந்த அக்கறையை உதட்டை கடக்க விடாமல் இக்கரையிலேயே அடக்கிக் கொண்டு கைகளையும் பின்னால் இழுத்துக் கொள்ள, அதற்கு பதில் ‘ Are you fine
dad’ என்ற வர்ஷாவின் குரல் ஒலித்தது. அதற்குள் சுதாரித்திருந்த ஆதித்யன் ‘எனக்கு ஒண்ணுமில்லை. Are you
people ok?’ என கேட்டவாறே காரை முடிந்தவரை ஓரமாக பார்க் செய்து ‘ நீங்க உள்ளேயே இருங்க ‘ என கூறி விட்டு மெல்ல இறங்கி அந்த பெண்மணியை நோக்கி நடந்தார்.
கார் நின்ற அதிர்ச்சியிலும் எழுந்த சத்தத்திலும் பூக்கூடையை தவறவிட்ட பெண்மணியிடம் ஏதும் காயம் ஏற்பட்டதா, hospital செல்ல வேண்டுமா என பலமுறை விசாரித்துவிட்டு , சேதமடைந்த பொருட்களுக்கு உரிய மதிப்பை விட அதிக இழப்பீடு கொடுத்து லேசாக மன்னிப்பும் கேட்டு விட்டு பெரிய கூட்டம் கூடும் முன் மெல்ல வந்து காருக்குள் உட்கார , ‘ அந்த அம்மாவுக்கு ஒண்ணுமில்லை தானே?’ என சந்தியா விசாரிக்க , ‘She is fine’ என சொல்லிக் கொண்டே கார் ஸ்டார்ட் செய்தார்.
சந்தியா குறுக்கிட்டு ‘ May
be we should take a break. பக்கத்துல
எங்கயாவது light
breakfast or coffee சாப்பிட்டு
போலாம்’ என ஆதித்யனின் மனநிலையை புரிந்து கொண்டவாறே சொல்ல வர்ஷாவும் ஆதித்யனும் அதை ஏற்றுக் கொள்ள ஒரு நல்ல உணவகத்தை நோக்கி கார் உருண்டது.
( தொடரும்)