கோழி கிறுக்கல்

கோழி கிறுக்கல்

சந்தியா வந்தனம் அத்தியாயம் : 5 / Sandhiya vandhanam Episode :5

 சந்தியா வந்தனம்  அத்தியாயம் # 5 

       Sandhiya vandhanam Episode # 5


    அதிர்ச்சியிலிருந்து மீளாத சந்தியா ‘எப்படி தெரிஞ்சது? ‘ என ஆதித்யனிடம் கேட்டாள். ஒரளவு சுதாரித்திருந்த ஆதித்யன் நடந்தவற்றை ஒருவாறு ஊகித்திருந்தார். வர்ஷா அமர்ந்திருந்த இடத்தில் டேபிளின் மூலையில் இருந்த அந்த காகிதத்தை சந்தியாவிடம் கண்களாலேயே காண்பித்தார்.

அப்பொழுது தான் அதை கவனித்த சந்தியா அதை பிரித்து பார்க்க அது நேற்று தங்களுக்கு கொடுக்கப்பட்ட Marriage Certificate உடைய photocopy. ஆதித்யன் ஃபோனை வேகமாக உருவி கொண்டே நடந்து போன போது அவர் pocket-ல் இருந்து விழுந்தது இந்த காகிதம். இதை கவனித்த waiter  இதை எடுத்து கொடுப்பதற்கு டேபிள் அருகே வந்த போது அங்கே இருந்தது வர்ஷா மட்டுமே.

கொஞ்சம் embarassment, கொஞ்சம் guilty feeling, கொஞ்சம் தன் மீதே கோபம், அடுத்து என்ன என்ற லேசான குழப்பம் என சில நிமிடங்கள் ஏதும் செய்ய முடியாமல் தவித்தார் ஆதித்யன்.

‘இது வர்ஷாவுக்கு எப்படி கிடைச்சது?’ என அந்த காகிதங்களை பார்த்து சந்தியா கொஞ்சம் puzzled ஆக கேட்க, ‘நான் அவசர அவசரமா ஃபோன் எடுத்து வேகமா நடந்து போனப்போ இது என் pocket-ல் இருந்து விழுந்திருக்கு. நான் notice பண்ணல. யாராவது பார்த்து வர்ஷாகிட்ட கொடுத்திருப்பாங்க I guess’.

 ‘இது எப்படி உங்க shorts pocket -ல் வந்தது?’.

 ‘நான் தான் எடுத்துட்டு வந்தேன். வர்ஷாகிட்ட எல்லா விஷயத்தையும் முழுசா சொல்லிடனும். அப்போ இந்த marriage certificate-ம் காமிக்கனும்னு எடுத்துட்டு வந்தேன்’.

‘Evidence எல்லாம் submit பண்ண இது என்ன கோர்ட்டாப்பா. ஏன் ஒரு file போட்டு கொண்டு வரவேண்டியதுதானே?‘ என மனைவியின் ஒருபுறத்தலிருந்து ஒரு விநாடி கடிந்து கொண்டாலும், அடுத்த விநாடியே மனைவியின் மறுபுறத்திலிருந்து சோர்ந்திருக்கும் தனது ஐம்பது வயது குழந்தையின் தோளில் கை வைத்து ‘Sorry ப்பா. நான் உங்க மேல தேவை இல்லாம கோப படறேன். நானும் ரிங்டோன் மாத்தி complicate பண்ணிட்டேன். You’re going through all this on my account only’ என ஆதித்யன் தோள் மீது தன் நெற்றியை பதித்து கண்களை இறுக்கினாள்.

மெல்ல எழுந்து bill settle செய்து காரை நோக்கி நடந்து வந்தனர். காரின் அருகில் கண்ணீர் துளிர் விட நின்று கொண்டிருந்த வர்ஷாவுக்கு அந்தக் கண்ணீர் துளிகளின் வழியே இவர்கள் இருவரும் ரொம்ப  மங்கலாகவே தெரிந்தனர். ரிமோட்டாக கார் டோர் லாக்கை ஆதித்யன் ஓபன் செய்த அடுத்த நொடி வர்ஷா காரின் பின் சீட்டின் ஓரத்தில் தன்னை அடைத்துக் கொண்டு ஜன்னல் வழியே பார்வையை பதித்துக் கொண்டாள். பின் Seat-ன் மறு ஓரத்தில் சந்தியா சாதாரணமாக அமர்ந்து அடிக்கடி வர்ஷாவின் மீது பார்வையை வீசிக் கொண்டே வந்தாள். வர்ஷா தப்பி தவறி கூட சந்தியா பக்கம் பார்வையை திருப்பவில்லை.

 ‘வர்ஷா, It wasn’t intentional from my side all these days. Just that’ என சந்தியா சொல்லிக் கொண்டிருக்கும் போதே கையசைத்து நிறுத்திய வர்ஷா, ‘ Hiding, not sharing, not feeling guilty, breaking someone’s trust. It’s all so easy for you. Let me go through this alone.Please ‘ என முடிக்க சந்தியா அமைதியானாள்.  வர்ஷாவின் கோபம் நியாயமானதே என சந்தியா  நினைத்தாலும் அவள்  வார்த்தையில் இருந்த கடுமை ஏனோ அவளை அதிகம் Disturb செய்தது. ‘ஆதித்யனை திருமணம் செய்ததினால் கோபமா அல்லது சொல்லாமல் திருமணம் செய்ததினால் கோபமா ?’ என யோசித்தவாறே சந்தியா இருந்தாள். ஒரு understanding and doting Dad,  ஒரு loving daughter இடையில் இருந்த அந்த Balanced equation இப்பொழுது தன்னால் முறிந்ததை உணர்ந்தாள். அவள் இத்தனை ஆண்டுகளாக இவர்களுடன் இருந்தாலும் இப்பொழுது தான் இந்த equation-க்குள் official ஆக வந்திருக்கிறாள். அது முறிந்து புது equation ஆக மாறும் வரை இந்த மூவர் இடையிலான chemical reaction முடியாது. அதன் final outcome எப்படியிருக்கும் என்றும் எளிதாக guess செய்ய முடியாது.

    இந்த தருணத்தில் இத்தனை குழப்பங்களுக்கும் மூல காரணமாக ஆதித்யன் தன்னை நினைத்து ஒதுக்கி விடுவாரோ என திடீரென தோன்றியது சந்தியாவுக்கு.  What’s this? அப்படி தன்னை வெறும் Use and throw  ஆக நினைப்பவரா ஆதித்யன். No way. But still he can say something atleast to ease the tension right என ஏங்கியது மனம். உடனே ஆதித்யனின் முகத்தை பார்த்தாள். எந்த வித உணர்ச்சியும் இல்லை ஆதித்யன் முகத்தில். இது அவளை மேலும் குழப்பியது. வர்ஷாவிடம் சொல்லியதும் எப்படி handle பண்ண வேண்டும் என பல முறை மனதிற்குள் சந்தியா rehearse செய்திருந்தும் இவ்வளவு தடுமாற்றம். வருடம் முழுதும் public exam-க்கு படித்திருந்தாலும் பரிட்சை அன்று question paper கையில் கிடைத்த அந்த தருணம் ஒரு படபடப்பும் தடுமாற்றமும் ஏற்பட தானே செய்யும்?. இதில் சந்தியா எதிர்பார்க்காத வகையில் வர்ஷாவிற்கு தானாகவே தெரிந்தது   ‘ Out of Syllabus’ வேறு.

    மற்றொரு ஓரத்தில் வர்ஷாவோ தன் கோபம் சந்தியா மீதா அல்லது ஆதித்யன் மீதா அல்லது இருவரும் இத்தனை நாட்களாக மறைத்ததாலா அல்லது தன் Bestie தன் dad-யே date செய்ததா என தன் கோபத்தை define செய்ய முடியாமல் தவித்தாள். இதே காரில் நூறு முறையாவது மூவரும் சேர்ந்து பயணித்திருப்பார்கள். ஆனால் இப்போது அவர்கள் வெறும் மூவர் அல்ல முக்கோனத்தின் மூன்று புள்ளிகள் என வர்ஷாவிற்கு தோன்றியது. Or Am I just a third person here intruding in their lives? என பலமாகவே தன்னை தானே கேட்டு கொண்டாள். அடுத்த முறை சந்தியா காரில் ஆதித்யனோடு முன் சீட்டில் அமர்வாள். Dad will have her for company and I will be left out என சற்று குழந்தைதனமாக இந்த விஷயத்தை மேலும் காம்ப்ளிகேட் செய்தாள் வர்ஷா. இங்கே பிரச்சனை மனிதர்கள் இடமாறுவது அல்ல. இதயங்கள் இடம் மாறியிருப்பது. And Dad doesn’t seem to be bothered about my current state of mind என ஆதித்யனின் மௌனத்தை சாடியது அவள் மனம். வர்ஷா இவ்வளவு insecured ஆக யோசிப்பது நமக்கு சற்று ஆச்சரியமாக தான் இருக்கிறது. My relationship with both of them will never be the same again. Maybe I should go back immediately என முத்தாய்ப்பாக பட்டது வர்ஷாவிற்கு.

    இந்த காட்சியை இயக்குனர் ஷங்கர் படமாக்கியிருந்தால் இப்படி computer graphics-ல் காண்பித்திருப்பார் என தோன்றுகிறது. சந்தியா மற்றும் வர்ஷாவை சுற்றி ஆயிரம் எண்ண ஓட்டங்கள் 360 டிகிரியிலும்,  பல நிறத்திலும் , Chemistry-யும் Maths-ம் கலந்து சுறுசுறுப்பாக இவர்கள் இருவரையும் வலம் வந்தன. இவர்கள் எண்ண ஓட்டம் உரசும் இடங்களில் தீப்பொறி பறந்தன. இந்த எண்ண  ஒட்டம் ஏற்படுத்திய ஆற்றலின் வெப்பம் இந்த இளம் பெண்களின் சிந்தனையில் உஷ்ணத்தை ஏற்றி இவர்களை தன்னிலையற்று செய்தது. இந்த வெப்பமயமாதல் எல்லாம் பின் சீட்டில் மட்டும் தான். முன் சீட்டில் ஆதித்யனிடம் எவ்வித சலனமும் இல்லை.


kozhi kirukkal, suppan, sandhiya vandhanam, tamil kadhaikal,tamil love stories for reading, tamil kadhal kathaigal, tamil kadhal siru kathaigal, தமிழ் காதல் கதைகள்
சந்தியா வந்தனம்  அத்தியாயம் # 5

    சந்தியாவும், வர்ஷாவும் தங்கள் 24 வருட வாழ்க்கையில் சில அனுபவங்களை பெற்றிருந்தாலும் இந்த Tension-ஐ கையாளும் பக்குவம் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. அவர்கள் இருவரின் வயதை கூட்டினாலும் அது ஆதித்யனின் வயதை விட குறைவே. இந்த உறவுகள் தடம் புரண்டதில் ஆதித்யனுக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் இந்த தருணத்தில் ஆதித்யன் காண்பிப்பதோ ஒரு வித Withdrawal syndrome என்று சந்தியாவிற்கும் வர்ஷாவிற்கும் தோன்றியது. அவர் சந்தியா, வர்ஷா இருவருக்கும் எட்டாதவாறு தன் Shell-க்குள் தன்னை அடைத்து கொண்டு விட்டார் என சந்தியா, வர்ஷா போல் நீங்களும் நினைக்கலாம்.

     ஆதித்யன் என்ன தான் நினைக்கிறார்?? பின் சீட்டின் வெப்பத்தை அவர் உணரவே இல்லையா? ஒரு catalyst ஆக இந்த chemical reaction-ஐ ஏன் influence செய்யாமல் இருக்கிறார்?

        இந்த  வெப்பம் ஆதித்யன் எதிர்பார்த்ததுதான். உறவுகளும் உணர்வுகளும் உரசி கொள்ளும் Chemical reaction அனேகமாக exothermic reaction தான். Definitely heat will be generated and released. அதிலும் இது வெறும் தொடக்கமே என்ற தெளிவும் இருந்தது அவரிடம். இருந்துட்டு போகட்டும். அதுக்காக அமைதியா இருந்தா பிரச்சனை தீர்ந்திடுமா? என்று நாம் கேட்கலாம். பெண்கள் ஆண்களிடம் ஆதங்கப்படும் போது பல ஆண்கள் செய்யும் முக்கியமான தவறே உடனடியாக problem solving mode-ற்கு மாறி பிரச்சனையை தீர்க்கிறேன் பேர்வழி என எதையாவது சொல்லி பெண்களை மேலும் எரிச்சல் படுத்துவது தான். இந்த மாதிரி தருணங்களில் ஆண்கள் listen செய்ய வேண்டும் என்பதே பெண்களின் உண்மையான எதிர்பார்ப்பு. ஆதித்யன் ஏதாவது சொல்ல வேண்டும் என சந்தியாவும், வர்ஷாவும் இப்போது நினைக்கலாம்.  ஆனால் இப்போது அவர் என்ன சொன்னாலும் இருவரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமே அது தவறாக படலாம். அதனால் அவர் அங்கு நிலவிய அமைதியை  listen செய்து கொண்டிருந்தார். வீடு போய் சேரும் வரை அந்த அமைதி கொஞ்சம் சத்தமாகவே ஒலித்தது.


காலை 10:45:

    Apartment பார்க்கிங்குள் கார் நுழைந்தது. ஆதித்யன் car trunk-ஐ திறந்து விட்டுவிட்டு மெல்ல எழுந்து வெளியே வருவதற்குள்  வர்ஷா இறங்கினால் போதும் என அதிவேகமாக இறங்கி தனது பெரிய baggage-ஐ கஷ்டப்பட்டு எடுக்க முயற்சி செய்தாள். ஆதித்யன் அங்கே வந்து   மெல்ல அவள் கையை பற்றி நான் இங்கே தான் இருக்கேன். விட்டுட்டு எங்கேயும் போகலை’ என சொல்லாமல்  சொல்வது போல் அழுத்தம்  கலந்த பரிவோடு அவளை ஒரு பார்வை பார்த்தார். இந்த தருணத்தில் வர்ஷா ஆதித்யனின் தோள் மீது சாய்ந்து சுமூகமாகியிருந்தால், நாம் இந்த கதைக்கு முற்றும் போட்டு முடித்திருக்கலாம். ஆனால் வர்ஷாவோ அவர் கையை உதரி விட்டு ஒரு சிறிய Puller-ஐ இழுத்து கொண்டு Lift நோக்கி விருட்டென நடந்தாள்.  ஆதித்யனும் ஒரு பெரிய லக்கேஜை இழுத்து கொண்டு வர்ஷாவிற்கு ஈடு கொடுத்து அவளை வேகமாக பின் தொடர்ந்தார்.

kozhi kirukkal, suppan, sandhiya vandhanam, tamil kadhaikal,tamil love stories for reading, tamil kadhal kathaigal, tamil kadhal siru kathaigal, தமிழ் காதல் கதைகள்
சந்தியா வந்தனம்  அத்தியாயம் : 5


     அப்போதுதான் காரை விட்டிறங்கிய சந்தியாவுக்கு இதை பார்த்து வேதனை அதிகமானது. ஆளுக்கொரு லக்கேஜ் இழுத்து கொண்டு மூவரும் சிரித்து பேசி கொண்டே சந்தியாவும், வர்ஷாவும் கைகோர்த்து கொண்டே நடந்து போக வேண்டியது இப்படி சிதைந்து போனதே என்ற எண்ணம் அவளை மேலும் பலவீனமாக்கியது. இது என்ன இடம்? இந்த இடத்திற்கும் தனக்கும் என்ன தொடர்பு? Where have I come and why did I even come here? என்ற மிகவும் அடிப்படையான கேள்விகள் தன்னை துளைக்க, அந்த நூற்றுகணக்கான கார்களுக்கிடையில் தொலைந்து போனவளாய் தனியாக அங்கு நின்றாள் சந்தியா.


kozhi kirukkal, suppan, sandhiya vandhanam, tamil kadhaikal,tamil love stories for reading, tamil kadhal kathaigal, tamil kadhal siru kathaigal, தமிழ் காதல் கதைகள்
சந்தியா வந்தனம்  அத்தியாயம் # 5

                                                                                                                        ( தொடரும் )


சந்தியா வந்தனத்தின் அடுத்த அத்தியாயம் படிக்க👇,

சந்தியா வந்தனம் அத்தியாயம் #6 


 சந்தியா வந்தனத்தின் முந்தைய  அத்தியாயம் படிக்க👇,

 சந்தியா வந்தனம் அத்தியாயம் #4 


 


 

 


 

 

 

 

Previous
Next Post »

1 comments:

Click here for comments
Unknown
admin
1 September 2020 at 23:13 ×

This episode is quite interesting have to wait for another week to know what will happen next...... But really the way you portrayed it this week is very good.

Thank you So much Unknown :-)
Reply
avatar