கோழி கிறுக்கல்

கோழி கிறுக்கல்

சந்தியா வந்தனம் அத்தியாயம் : 4/ Sandhiya vandhanam Episode :4

 

சந்தியா வந்தனம்  அத்தியாயம் : 4

 Sandhiya vandhanam Episode :4

 

    ஆதித்யன் வேகமாக ரெஸ்டாரண்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். இப்போது ரெஸ்டாரண்டுக்குள் சென்றதும் நேரடியாக வர்ஷாவின் முகத்துக்கு எதிராக உட்கார்ந்து, கண்களை பார்த்து நடந்த எல்லா விஷயங்களையும் தெரிவித்து விடுவது என plan பண்ணியவாறே நடந்து வந்து கொண்டிருந்தார்வீட்டிற்கு போவதற்குள் வர்ஷாவிடம் நடந்ததை சொல்லிவிட்டால் வர்ஷாவுக்கு தன்னிடம் சொல்லாமல் இவர்கள் இருவரும் நீண்ட காலமாக   மறைத்துவிட்டார்கள் என்ற வருத்தம் குறைவாக இருக்கும். அப்படி சொல்வதில் தாமதமானாலோ, அல்லது அவளாகவே கண்டுபிடித்து விட்டாலோ அவளை சமாதானம் செய்வது ரொம்பவே கஷ்டம் என்றெல்லாம் யோசித்தவாறே ரெஸ்டாரண்ட்டிக்குள் நுழைந்து நேராக ரெஸ்ட் ரூம் சென்று refresh செய்து வந்தார்.

அவர் ரெஸ்ட்ரூமிலிருந்து வெளியே வந்ததும் ஐந்தாறு டேபிள்கள் தள்ளி ஒரு டேபிளில் உட்கார்ந்திருந்த வர்ஷாவின் முதுகும், சந்தியாவின் முகமும் தெரிந்தது. தூரத்திலிருந்து ஆதித்யனை பார்த்த சந்தியா முதலில் தன்னைத் தனியே இங்கே விட்டு விட்டு எங்கேயோ போய் லேட்டாக வந்ததற்காக கோபக்கணல் வீசினாள். ஆனால் தான் கோபமாக முகத்தை வைத்திருப்பதையே சரியாக புரிந்து கொள்ளாமல் சிரித்துக் கொண்டே வரும் ஆதித்யனை பார்த்து அவளுக்கும் லேசாக சிரிப்பு வந்தது. நேராக வந்து Plan செய்தது போல் வர்ஷாவை நோக்கி சந்தியாவின் அருகில் அமர்ந்தார். அந்தக் குளிர்ச்சியில் சற்றே வியர்வை குறைந்தது சந்தியாவிற்கு.

 ‘What happened Dad? I was about to call you’ .

‘கொஞ்ச நேரம் முன்னாடி அந்த லேடி cross பண்றப்ப நான் sudden brake போட்டு காரை திருப்பி ஸ்டாப் பண்ணினதுல flat tyre ஆகியிருந்தது. I just changed to spare tyre ‘என்று ஆதாரமாக தன் கைகளை காட்ட அதில்  இன்னும் கொஞ்சம் கருப்பு கிரீஸ் ஒட்டியிருந்தது.

 ‘Did you wash your hands Dad?’

 ‘Yes of course !’ என காஃபியை கலக்க தொடங்கினார்.

 ‘Do You know what we were talking about Dad?’

 மெல்ல தலையை தூக்கி என்ன என்பது போல் ஆதித்யன் தலையாட்ட ’Your  wedding Dad’ என வர்ஷா சொன்னதும் ஆதித்யனுக்கு ஷாக் ஆனது. நாம தானே வர்ஷாகிட்ட சொல்லனும்னு இருந்தோம். அதற்குள் சந்தியா எல்லாத்தையும் சொல்லிட்டாளா என்ற சந்தேகத்தில் வர்ஷாவையும் சந்தியாவையும்  மாறி மாறி பார்க்க, இதை உடனே புரிந்து கொண்ட சந்தியா ‘ She wants you to get married to someone very nice, loving and pretty ofcourse’ என சற்றே கிண்டலாக கூற ஆதித்யன் , வர்ஷா இருவரும் மெல்ல சிரித்தனர்.

Actually நான் கூட இது சம்பந்தமா ஒன்னு உன்கிட்ட சொல்லணும் வர்ஷா ன்னு ஆரம்பிக்க நினைத்து, ஆதித்யன் வாய் திறக்கும் போது, " நீ தானே ! நீ தானே ! என் நெஞ்சை தட்டும் சத்தம் ,..!" என்ற ரிங்க்டோன் சத்தமாக  ஒலிக்க, who is this annoying others so much? என்று மனதிற்குள் நினைத்தவாறே சுற்றும் முற்றும் பார்க்க, சற்று தாமதமாக தான் அது தன்னுடைய மொபைல் என உணர்ந்து, சற்றே அதிர்ச்சியானார். சுற்றி மற்ற டேபிள்களில் இருந்தவர்களும், அதே மைண்ட் வாய்ஸோடு திரும்பி பார்க்க, என்னடா Dad இவ்ளோ ரொமான்டிக் ரிங்க்டோன் வைச்சிருக்காரே என வர்ஷா ஆச்சர்யப்பட, ரொம்பவே embarass ஆனார் ஆதித்யன். உக்கார்ந்து கொண்டே side pocket -ல் இருந்த மொபைல் எடுக்க முயல, சந்தியா அருகிலேயே உக்காந்து இருந்ததால் ஃப்ரீயாக கையை நீட்டி உள்ளே விட சிரமமாக இருந்தது ஆதித்யனுக்கு.ரிங்க்டோன் வேறு சத்தமாக தொடர்ந்து அலறிக்கொண்டே இருந்தது.வேகமாக எழுந்து அங்கிருந்து நகர்ந்தால் போதும் என நடக்க ஆரம்பித்தவாறே side pocket - ல்  இருந்து மொபைலை வேகமாக உருவி எரிச்சலோடு போனை on  செய்து, இந்த ரிங்க்டோன் எப்படி நம்ம போனில் வந்தது என யோசித்தவாறே அந்த இடத்தில் இருந்து அவசரமாக நகர்ந்து சென்றார்.  

kozhi kirukkal சந்தியா வந்தனம்  அத்தியாயம் : 4
சந்தியா வந்தனம்  அத்தியாயம் : 4

    ஆதித்யன் நகர்வதை பார்த்த சந்தியாவுக்கோ சிரிப்பு கொஞ்சம் அதிகமாகவே வர, ஜன்னல் வழி பார்த்து, சிரிப்பை சிறிது மறைத்தாள்.  நேற்று registrar Office-ல் வெயிட் செய்யும் போது ஆதித்யன் மொபைலை நோண்டிக் கொண்டிருந்த சந்தியா ஆதித்யனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து தனக்கு பிடித்த இந்த ரிங்டோனை மாற்றிவிட்டு அதை பற்றி மறந்தே போய் விட்டாள். நேற்று இரவு சந்தியாவுடன் டின்னர் முதல் சரணம், பல்லவி எல்லாம் முடிக்கும் வரை மொபைலை பல மணி நேரம் switch off செய்தே வைத்திருந்தார் ஆதித்யன். காலையும் calls ஏதும் வராததால் இந்த ரிங்டோனை முதன்முதலாக தன் ஃபோனில் கேட்கும் வாய்ப்பு இப்போதே அமைந்தது. சந்தியா நினைத்து போல் ஆதித்யனுக்கு Surprise தான். என்ன அதில் கொஞ்சம் சங்கடமும் கலந்தே இருந்தது. இங்கே இருந்தால் ரொம்பவே சிரிப்போம் என்று நினைத்த சந்தியா , ரெஸ்ட் ரூம் போக முடிவு செய்து  ‘I will be back Varsha’ என சொல்லி சிரித்துக் கொண்டே ரெஸ்ட் ரூம் நோக்கி வேகமாக  நடந்தாள்.

ரெஸ்ட் ரூம் வந்ததும் வாய் விட்டு சிரித்து விட்டு,  refresh செய்து கொண்டு கதவை திறந்து தூரத்தில் இருந்த டேபிளை பார்த்த போது ஆதித்யன் இன்னமும் வரவில்லை என்பதை உணர்ந்து மீண்டும் ரெஸ்ட்ரூமுக்குள் சென்று ஆதித்யனுக்கு call செய்தாள். ஆதித்யனோ அப்பொழுது தான் call முடித்திருந்தார். ஆதித்யன் call on செய்ததும்,

 ‘Sorry ப்பா. நான் தான் நேத்து surprising ஆக இருக்கட்டும்னு ஒரு ரொமாண்டிக் டோனுக்கு மாத்தினேன். But totally forgot about it. Very sorry’ என கெஞ்சலாக பேசினாள்.

‘It’s  ok. It was embarrassing though.  எங்கேயிருந்து பேசற?’

‘From Rest room . சீக்கிரம் போயி வர்ஷாகிட்ட சொல்லிடலாம்ப்பா. எனக்கு discomfort ஜாஸ்தி ஆகிட்டே இருக்கு. Also வர்ஷாவை handle பண்றதும் டெலிகேட்டா இருக்கு.

‘Yes. Next அதான் பேச போறோம். We will share everything before we leave the restaurant. Ok. Let’s go now’ என ஆதித்யன் சொல்லி கட் செய்து டேபிளுக்கு வர almost immediately சந்தியாவும் வர இருவரும் அமர்ந்து சொல்ல தயாரானார்கள்.

ஆதித்யன் தன் கைகளை டேபிள் மேல் நீட்டி வைத்து கொண்டு  வர்ஷா முகத்தை நேரடியாக, குறிப்பாக அவள் கண்களை  ஆழமாக பார்த்தார். அவர் முகத்தில் அமைதியும் நிதானமும் இருந்தது.

‘So my bestie’s devil and darling is my own Dad’ என வர்ஷா படபடவென சொல்ல ஆதித்யன் சந்தியா இருவரும் மொத்தமாக உறைந்து போயினர்.  ‘And you both have been hiding it from me’.

கண்களில் நீர் துளிர்க்க சந்தியாவை  வெறுப்போடு முறைத்து பார்த்த வர்ஷா  ‘ I will wait near the car’ என்று சற்றே தழுதழுக்கும் குரலில் கூறி விட்டு அங்கிருந்து எழுந்து வேகமாக ரெஸ்டாரண்டை விட்டு வெளியேறினாள்.

சற்றே நிலைகுலைந்து தான் போயிருந்தார் ஆதித்யன். இத்தனை நாள் வர்ஷாவிடம் நடந்ததை சொல்லாமல் மறைத்த பாவம் , தான் சொல்ல முடிவு செய்த போதும் தன்னை சொல்ல விடாமல்  தடுத்தது என்று சுளீர் என சுட்டது ஆதித்யனுக்கு.

‘What an irony’ என மெல்ல முணுமுணுத்தார். ‘ என்னப்பா இப்படி ஆயிடுச்சுஎன சொல்லியவாறே சந்தியா அவர் தோளில் முகம் புதைத்தாள்.

 

                                                                                                                            ( தொடரும்)


சந்தியா வந்தனத்தின் அடுத்த அத்தியாயம் படிக்க 👇,

சந்தியா வந்தனம் அத்தியாயம் #5 


சந்தியா வந்தனத்தின் முந்தைய  அத்தியாயம் படிக்க👇,

சந்தியா வந்தனம் அத்தியாயம் #3



 

 


Previous
Next Post »

2 comments

Click here for comments
Sami
admin
13 August 2020 at 02:57 ×

The story is written in a way that we don't get bored of reading.. it's interesting and the image representation of the story is excellent

Reply
avatar
Unknown
admin
13 August 2020 at 03:02 ×

After the first episode only this one felt so interesting..... Now waiting for the next episode

Reply
avatar