சந்தியா வந்தனம் அத்தியாயம் : 3
Sandhiya vandhanam Episode :3
மணி
8:45
ரெஸ்டாரண்ட் பார்க்கிங்-ல் காரை பார்க் செய்து விட்டு ‘ நீங்க உள்ளே போய் ஆர்டர் பண்ணுங்க. எனக்கு காஃபி மட்டும் போதும்’ என சொல்லிக் கொண்டே dash board இல் எதையோ தேடலானார். சந்தியாவும், வர்ஷாவும் ரெஸ்டாரண்ட்டை நோக்கி நடக்க சந்தியா மட்டும் என்னவா இருக்கும் என திரும்பி பார்த்த படியே நடந்தாள்.
உள்ளே கொஞ்சம் விலாசமான இடம். பக்கத்து டேபிளில் விக்கினால் நமக்கு தண்ணீர் குடிக்க தோன்றும் அளவு நெருக்கம் இல்லாமல் ஓரளவு நன்றாகவே இடைவெளி விட்டு டேபிள்கள் போடப்பட்டிருந்தன. ஒரு ஜன்னலோர டேபிளில் இருவரும் எதிர் எதிரே அமர சுற்றி இருந்த டேபிள்கள் காலியாகவே இருந்தன.
ஆதித்யன் ஏன் வரவில்லை என யோசித்துக் கொண்டிருந்த சந்தியாவிடம் ‘ புதுசா என்ன activity பண்ற ‘ என தன் மொபைலை நோண்டிக் கொண்டே வர்ஷா கேட்க சந்தியா அதிகம் யோசிக்காமல் ‘ Started playing Tennis ‘ என்றாள்.
![]() |
சந்தியா வந்தனம் அத்தியாயம் : 3 |
உடனே வர்ஷா ‘ Does your boy friend play tennis?’ என கேட்க சந்தியா ஒரு புன்னகையோடு ஆமாம் என்று தலையாட்டினாள்.
‘ I thought so’ - வர்ஷா.
‘ ஒரு டென்னிஸ் பிளேயருக்கு தான் இன்னொரு டென்னிஸ் பிளேயரோட மனசு புரியும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க. அதான்’ என முகத்தை பாவமாக வைத்து கொண்டு சந்தியா சிரிப்பு கலந்த சீரியஸ்னஸோடு சொல்ல வர்ஷா கொஞ்சம் சிரித்து ‘ That was a good one’ என்றாள். அப்போ அங்க வெயிட்டரிடம் சந்தியா மூன்று காபி மட்டும் சொல்லிவிட்டு தொடர்ந்தாள்.
‘How’s your Russian boy friend doing?’ - சந்தியா.
‘ He is doing good.’ - வர்ஷா.
‘ Six months back அப்பா
கலிஃபோர்னியா வந்தப்போவே நீ உன் boy friend பத்தி அப்பாகிட்ட சொல்லியிருக்கலாம்’ -
சந்தியா.
சந்தியாவிற்கு சப்த நாடியும் அடங்கியது. திருவிளையாடலில் வருவது போல் அசையும் பொருள் எல்லாம் ஒரு கணம் நின்று மீண்டும் அசைய தொடங்கியது போல் இருந்தது அவளுக்கு. அதற்கு மேல் எதுவும் பேச தோன்றவில்லை. ‘ஆதித்யன் சீக்கிரம் வந்தால் தேவலை. அவரையும் காணோம். எங்கே போனார்?’ என மனதுக்குள் புலம்பியவாறே ஜன்னலை நோக்கினாள்.
![]() |
சந்தியா வந்தனம் அத்தியாயம் : 3 |
‘என் கல்யாணத்துக்கு இன்னும் டைம் இருக்குப்பா. But before that I have something important to do’ என்றாள் வர்ஷா. வர்ஷாவே ஏதோ டாபிக் மாற்றியதில் சற்றே நிம்மதி அடைந்த சந்தியா கொஞ்சம் ரிலாக்ஸ்டாக ‘ என்ன பண்ணனும்?’ என கேட்டாள்.
‘நான் experience இல் சொல்றேன். உங்கப்பா கிட்ட எந்த female-ம் எந்த விஷயத்திலும் unsatisfied ஆக இருக்க மாட்டாள். அதான் devil darling ன்னு தெளிவா சொன்னேனே’ , நீங்கள் யூகித்தது போல் சந்தியாவின் mind voice தான் இதுவும். இன்னும் அதிக எரிச்சலுடன்.
‘I don’t buy this பொண்ணு age logic. You know veteran hindi actor Dilip Kumar? அவர் wife சைரா பானு அவரை விட twenty two years younger. They have been happily married for more than 50 years. Famous Oscar award winning actress Sophia Loren க்கும் அவங்க husband Carlos Ponti க்கும் 22 years age difference. They were also happily married for more than 50 years until Carlos Ponti died. இவ்வளவு ஏன்? இப்போ France ஓட President ஆ இருக்காறே Emanuel Macron, அவரோட wife Brigitte அவரைவிட 24 வயசு மூத்தவங்க. அவரோட டீச்சரா இருந்தவங்க. As per your logic அவங்களோட பையன் வயசு அவருக்கு. அவங்க எல்லாம் நிறைவா தானே இருக்காங்க. I find this பொண்ணு வயசு logic totally regressive and unacceptable’ , என பொரிந்து தள்ளியது சந்தியாவின் Mind voice இல்லை. நிஜ வாய்ஸ். தாம் சற்று உணர்ச்சிவச பட்டுவிட்டோம் என்று உணர்ந்த சந்தியா தன்னைத் தானே ஆசுவாச படுத்திக் கொண்டாள். ஒரு வேளை இந்த விஷயத்தை சொல்லும் போது வர்ஷா இந்த பொண்ணு வயசு logic பற்றி பேசினால் அதற்கு பதில் சொல்ல சேகரித்து வைத்திருந்த arguments எல்லாம் இப்படி உணர்ச்சிவசப் பட்டு பொத்தாம் பொதுவாக சொல்லிட்டோமே என தம்மைத் தானே நொந்துக் கொண்டு லேசாக உள்ளூர சிரித்துக் கொண்டாள். அப்போது வெயிட்டர் காஃபி கொண்டு வந்து வைக்க மூன்றாவது காஃபியை எந்த உள்நோக்கமும் இன்றி சந்தியாவின் அருகில் சாதாரணமாக வைக்க ‘ நாம இவ்ளோ பேசினது இந்த waiter க்கு atleast புரிஞ்சதே ‘ என ஆறுதல் பட்டுக் கொண்டாள்.
இதை கேட்ட சந்தியா ‘சரிப்பா, நீ தான் இவ்வளவு பேசறியே நீயே எங்கப்பாவை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு ஒரு கேலி கிண்டலுக்கு கூட கேட்க மாட்டேங்கறாளே. ஒரு வேளை இந்த பொண்ணு வயசு Logic படி என்னையும் அவளை போல அவள் அப்பாவோட இன்னொரு பொண்ணா யோசிக்கறாளோ? அபச்சாரம்! அபச்சாரம்! இதுல funny ன்னு வேற சொல்லிட்டாளே’ என மனதிற்குள்ளேயே சந்தியா ஏகத்துக்கும் குழப்பிக் கொள்ள அதே சமயத்தில் நம்மை இப்படி தனியா சமாளிக்க விட்டுட்டு எங்க காணோம் இந்த மனுஷனை என்ற மனைவிக்கே உரித்தான கோபமும் சேர்ந்து கொள்ள அந்த இளம் வயதில் சந்தியாவின் BP ஏகத்துக்கு எகிறியது.
இங்கே நடந்த விவாதம் பற்றி எந்த விவரமும் தெரியாத ஆதித்யன் மெல்ல ரெஸ்டாரண்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.
(தொடரும்...)
முந்தைய பகுதி படிக்க👇,
சந்தியா வந்தனம் அத்தியாயம் # 2
சந்தியா வந்தனத்தின் அடுத்த அத்தியாயம் படிக்க👇,