கோழி கிறுக்கல்

கோழி கிறுக்கல்

கோழி கிறுக்கல் - நீல சரித்திரம் பகுதி 4 / kozhikirukkal - Neela Sarithiram Episode 4

         கோழி கிறுக்கல் - நீல சரித்திரம் பகுதி 4


 kozhikirukkal - Neela Sarithiram Episode 4 

 

கோழி கிறுக்கல் - நீல சரித்திரம் பகுதி 4, kozhikirukkal , history of jeans, neela sarithiram, jeans denim history , jeans denim history in tamil , kozhi kirukkal , jeans color dye , neela sarithiram , history of jeans pant . Indigo color
கோழி கிறுக்கல் - நீல சரித்திரம் பகுதி 4



    நம்ம Levis தம்பிக்கு எந்த ஊரு? என்ன background ? என்ன விஷயம்னு கேக்கறீங்களா ?. அவர் சொந்த ஊர் தெற்கு ஜெர்மனியி்ல் Bavaria மாநிலத்தில் இருக்கும் Buttenheim என்ற ஊர். இவர் யூதர் இனத்தை சேர்ந்தவர். இவரது இயர் பெயர் Loeb. தந்தை பெயர் Hirsch Strauss. தாயார் Rebekka Strauss. இவரது தந்தையார் மரணத்திற்கு பிறகு Levi-ன் தாயார் Rebekka குடும்பத்தை காப்பாற்ற மறைந்த தன் கணவரின் சகோதரர் Lippman என்பவரை மணந்து கொண்டார். துரதிர்ஷ்டவசமாக அவரும் சில மாதங்களிலேயே இறந்து  விட, வேறு வாழ்வாதாரமின்றி Rebekka தனது வீட்டை விற்று விட்டு  தன் மகன் மற்றும் மகள்களோடு அமெரிக்கா பயணமானார்காரணம் Levi-யின் மூத்த சகோதரர்கள் இருவர் ஏற்கனவே நியுயார்க் நகரில் Wholesale கடை வைத்திருந்தனர். இவர்கள் சொந்த ஊரிலிருந்து புலம்பெயர்வதற்கு முன் அந்த ஊர் அரசாங்கத்திடம் அதற்கான காரணத்தை சொல்ல வேண்டியிருந்தது. அப்பொழுது Levis-ன் தாயார் அரசாங்கத்திடம் கூறியது, “ என் மகன் Loeb( Levi ) ஒரு வேலையும் செய்யாமல் இருக்கிறான். அவனுக்கு இந்த ஊரில் தொழில் கற்று கொள்ளும் ஆர்வமும் இல்லை. அமெரிக்காவில் தொழில் செய்து கொண்டிருக்கும் இவனது மூத்த சகோதரர்களுடன் இருந்தால் இவன் வேலை செய்யவும், என்னை வைத்து காப்பாற்றவும் இயலும் என நம்புகிறேன்என்பதே. இந்த தம்பி ஆரம்பிக்க போகும் கம்பெனி வருங்காலத்தில் ஆண்டொன்றுக்கு சுமார் நாற்பதாயிரம் கோடி ரூபாய்க்கு ஜீன்ஸ் பேண்ட் வியாபாரம் செய்யும் , இவரது பெயரை இடுப்பில் வைத்து கொண்டு உலகமே திரியும் என யாராவது அப்போது இவரிடம் சொல்லியிருந்தால் நிச்சயம் நம்பியிருக்க  மாட்டார் Levi-ன் தாயார்.


          ஜெர்மனியிலிருந்து புலம்பெயர்ந்த Levi , ஜீன்ஸ் பேண்ட் பிரபலம் ஆக காரணம் ஆனது போல் ஜெர்மனியிலிருந்து வந்த வேறு சிலர் அமெரிக்காவில் பிரபலபடுத்தியது தான் ( Lager) Beer. அது வரை அங்கே ஆங்கிலேயர்களின் Ale Beer மட்டுமே ‘புழக்கத்தில்இருந்தது. Lager Beer பெருமளவில் பிரபலமடைய அதோடு  அவற்றை தயாரித்து விற்ற ஜெர்மானியர்களும் புகழடைய தொடங்கினர். அவர்களின் வளர்ச்சிக்கு தடையாக வந்தது 1920-ல் அமெரிக்கா முழுதும் அமுல்படுத்தப்பட்ட மது விலக்கு. இது 1931-ல் நீக்கப்பட்டாலும், பல  ஜெர்மானியர்கள் நடத்தி வந்த Beer நிறுவனங்கள் மூடப்பட்டு அந்த தொழிலில் அவர்களது ஆதிக்கம் குறைந்தது. ஆயினும் இன்று அமெரிக்காவின் Beer மார்க்கெட்டைக்கிரமித்திருப்பது ஜெர்மானியர்கள் அறிமுகப்படுத்திய Lager Beer தான். இதனால் அமெரிக்காவின்குடிமகன்கள்ஜெர்மானியர்களை சற்று வாஞ்சையோடே பார்க்கின்றனர்

            

    ஜெர்மனியில் Beer தான் தேசிய பானம் என்றால் அது மிகையாகாது. இது தண்ணீரை விட விலை குறைவாம் அங்கே. நம்ம Levi பிறந்த Bavaria மாகணத்தின் தலைநகரான Munich நகரில் இன்றும் Beer Hall-கள் பிரபலம். நம்மூர் டீக்கடைகளில் அரசியல் பேசுவது போல் இந்த Munich நகரில் Burgerbraukeller என்ற Beer hall-ல் பேசப்பட்ட அரசியலில் உதயமானது தான் ஹிட்லரின் நாஜி கட்சி. இந்த Munich நகரில் வருடா வருடம் அக்டோபர் மாதத்தில் நடக்கும் Beer Festival தான் Oktoberfest( என்னது? சரக்கடிக்க ஒரு திருவிழாவா? ) . ஒவ்வொரு வருடமும் சுமார் அறுபது லட்சம் பேர் கலந்து கொண்டு இதில் Beer அருந்துகிறார்கள். என்னடா இது. இந்த Munich ஊரு இப்படி விவகாரமா இருக்கேன்னு யோசிக்கறீங்களா? இந்த ஊரில் கெட்டிகாரர்களும் அதிகமாகவே இருக்கின்றனர். இப்படி சிலர் ஒரு நூறு வருஷத்துக்கு முன்னர் Bayerische Motoren Werke என்ற பெயரில் தொடங்கிய நிறுவனத்தின் பெயர் சுருக்கம் தான் BMW. 


           நாம் Levi Strauss யூதர் இனத்தை சேர்ந்தவர் என கூறுவது வரலாற்று ரீதியாக அடையாளப்படுத்த தானே தவிர, மத ரீதீயாக அடையாளப்படுத்த அல்ல. நாம் வரும் அத்தியாயங்களில் அறிமுகப்படுத்த போகும் மற்றொரு கதாநாயகரும் யூதர் சமூகத்தை சேர்ந்தவரே. இரண்டாம் உலகப் போர் முடியும் வரை ஐரோப்பாவில் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட இனத்தவராக தான் யூதர்கள் இருந்தனர். இரண்டாம் உலகப் போர் முடிந்து இஸ்ரேல் என்ற தனி நாடு உருவாக பெருமளவில் உதவி செய்தவர்கள் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்திருந்த யூதர்கள். அவர்களில் பலர் செல்வந்தர்களாகவும், அமெரிக்காவின் அதிகார மையத்தில் முக்கிய பொறுப்புகளிலும் இருந்தனர். இந்த சமூகமும் அமெரிக்காவில் ஒரு முக்கிய Vote Bank ஆக இருந்தது. இஸ்ரேல் என்ற தனி நாடு கோரிக்கைக்கு அமெரிக்க அரசாங்கம் ஆதரவு அளிக்கவும், .நா. சபையில் ஆதரவு திரட்டவும் அங்கே புலம் பெயர்ந்த யூதர் சமூகத்தினர் முக்கிய பங்காற்றினர்.இதையே நாம் இன்று ‘Diaspora Diplomacy’ என்கிறோம். அதாவது புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் பூர்வீக நாட்டின் நலனுக்காக தாங்கள் புலம் பெயர்ந்த நாட்டில் ஏதாவது ஒரு வகையில் உதவுவது. இன்று இந்தியாவும் இந்த Diaspora Diplomacy என்ற கூற்றை ஓரளவு வெற்றிகரமாக கையாளுகிறது என்றே சொல்ல வேண்டும்

            

    சரி. கப்பல் துறைமுகத்தை நெருங்குது. விசாரித்து பார்த்ததில் இது தான் நியுயார்க் நகரமாம். என்னது? நியுயார்க்கா? Statue of Liberty எங்கே காணோம்னு தேட வேண்டாம். அந்த சிலை 1885 -ல் தான் பிரான்ஸில் இருந்து அமெரிக்கா கொண்டு வரப்பட்டு 1886 -ல் தான் முழுதும்  நிறுவப்பட்டது. அது சரி. நியுயார்க்னாலே நல்ல உசரமான கட்டிடம் எல்லாம் இருக்குமே. இங்கே எல்லாம் மொட்டையா இருக்கேன்னு யோசிக்க வேணாம். இந்த Sky scraper எல்லாம் 1870-க்கு மேல தான் கட்ட ஆரம்பிச்சாங்க. இங்க கப்பல் நின்றதும் Immigration check ஏதும் பண்றாங்களான்னு கொஞ்சம் வேடிக்கை பார்ப்போம். எத்தனை பேர் இறங்கறாங்கன்னு கணக்கு எடுக்கறாங்க. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு எந்த கேள்வியும் , எந்த செக்கிங்கும் பெரிதாக இல்லைஇவர்களுக்கு பாஸ்போர்ட்விசாரணைகள் பெரிதாக இல்லை. யாராவது ரொம்பவே உடல் நலம் குன்றியிருந்தால் அவர்களை மட்டும் தனியே மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்கின்றனர். மூன்றாம் வகுப்பு பயணிகளுக்கு தான் விசாரணைகளும், கெடுபடிகளும் கொஞ்சம் அதிகம். 1850-களில் இந்த Immigration முறையை ஒழுங்கு படுத்தி அந்த இடத்திற்கு Castle Garden என்று பெயரும் வைத்தனர். இதுவே 1890-களில் உலகப் புகழ் பெற்ற Ellis Island Immigration Center ஆனது.அந்த காலங்களில். கப்பலில் நியுயார்க் நகரை வந்தடைந்த சுமார் 1.2 கோடி பேர்  முதன்முதலாக அடியெடுத்து வைத்தது இந்த Ellis Island-ல் தான். இப்படி வந்து சேர்ந்தவர்களுக்கு அவர்களது தாய் மொழியிலாவது ஏதும் எழுத, படிக்க தெரிந்திருக்கிறதா போன்ற பரிசோதனைகள் தொடங்கியது முதலாம் உலகப் போர் முடிவடைந்த  பிறகு தான். இன்று இந்த Ellis Island வளாகம் புலம்பெயருதல் பற்றிய மிகப் பெரிய அருங்காட்சியகமாக( Immigration Museum ) மாற்றப்பட்டுள்ளது. இன்றும் தங்கள் குடும்பத்தின், பரம்பரையின் வேர்களை தேடும் பலரும் இங்கிருக்கும் தஸ்தாவேஜுகளை அலசுவதை நேரில் காணலாம்


          அன்றும், இன்றும் அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் நியுயார்க் தான். இந்த நியுயார்க் நகரத்தை நம்ம மும்பையோடு ஒப்பிடலாம். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மும்பைக்கு குடிபெயர்வதை போல் உலகின் பல பகுதிகளிலிருந்தும் நியுயார்கிற்கு புலம் பெயர்ந்தனர். மும்பையின் உள்ளே ஒரு குட்டி தமிழ்நாடு, குட்டி குஜராத், குட்டி பிஹார் இருப்பது போல் நியுயார்க் உள்ளே குட்டி ஜெர்மனி, குட்டி ஐயர்லாந்து, குட்டி இத்தாலி ,குட்டி இந்தியா என பல பகுதிகள் உள்ளன. நியுயார்க் , மும்பை இரண்டுமே முக்கிய துறைமுக நகரங்கள். இரண்டுமே அந்தந்த நாடுகளின் வர்த்தக தலை நகரங்கள். இரண்டு நகரங்களிலும் உள்ளூர் ரயில் போக்குவரத்து நின்று போனால் நகரமே ஸ்தம்பித்து விடும்.( மும்பைக்கு ஒரு வேலு நாயக்கர்னா நியுயார்கிற்கு ஒரு Godfather Don Corleone; மும்பைக்கு பாலிவுட்னா நியுயார்கிற்கு ஹாலிவுட் என்றெல்லாம் தாறுமாறாக யோசிக்காதீங்க பிளீஸ். நியுயார்கில் ஹாலிவுட்டும் இல்லை. நிஜத்தில்  Godfather Don Corleone-ம் இல்லை).  உலகின் மிகப் பெரிய Metro Rail Network ( Subway) உள்ள நகரம் நியுயார்க். கொஞ்சம் லேட்டாக அதாவது 1904 -ல் தான் தொடங்கப்பட்டது.( இது லேட்டா என்கிறீர்களா. லண்டனில் Tube Subway 1863 , ஹங்கேரி தலை நகரான Budapest -ல் 1896, அமெரிக்காவின் Boston நகரில் 1897, பாரிசில் 1900. இதையெல்லாம் பார்த்தால் லேட் தானே? )


          

    “அதெல்லாம் சரி. Levi தம்பி உடைய சொந்த ஊர் பற்றி சொல்லியாச்சு. வந்த ஊர் பத்தி சொல்லியாச்சு. வந்த இடத்துல என்ன பண்ணினாரு? “


நியுயார்க் வந்து சேர்ந்த Loeb  தனது பெயரை Levi என மாற்றி கொண்டார்( அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தவர்களிடையே இது ஒரு வழக்கமாக இருந்தது அந்த காலத்தில்).  ஆங்கிலம் கற்று கொண்டார். தனது சகோதரர்களிடமிருந்து தொழில் கற்று கொண்டார். தனது சகோதரர்கள் கடையில் இருந்து சாமான்களை தோளில் சுமந்து கொண்டு ( சுமார் 40 கிலோ அளவிற்கு) நியுயார்க் நகர தெருக்களில் விற்கலானார். 1850-ல் அமெரிக்காவில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் தன் தொழிலை Peddler என குறிப்பிட்டுள்ளார்


ஓஹோ. இப்படி தெரு தெருவா வித்த தம்பி ஒரு கடை போட்டு , அப்புறம் ஜீன்ஸ் கம்பெனி ஆரம்பிச்சு படிப்படியா பணக்கார தம்பியா மாறி சந்தோசமா இருக்கும். இது தானே நீல சரித்திரம்?. இந்த மொத்த சரித்திரத்தையும் நம்ம தமிழ் சினிமாவுல ஒரு பாட்டுலயே காண்பிச்சுருவாங்களேப்பாஎன்றெல்லாம் நீங்கள் அவசரப்பட்டு யோசித்தால் அது தான் இல்லை. உண்மையில் Levi Strauss நியுயார்க் நகரில் நிறைய கற்று கொண்டார் ஆனால் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. கொஞ்சம் Cinematic ஆக சொல்ல வேண்டுமென்றால் வெகு தூரத்திலிருந்து ஏதோ ஒரு குரல் அவரை அழைத்து கொண்டே இருந்தது. இந்த குரல் மேற்கு திசையிலிருந்து வந்தது


மேற்காலயிருந்து வந்துச்சா? அங்கே என்ன இருக்கு? “


Levi Strauss நியுயார்க் வந்து சேர்ந்த கால கட்டத்தில் அமெரிக்காவிற்கும் அதன் அண்டை நாட்டிற்கும் மேற்கு எல்லையில் ஏற்பட்ட போரில் அமெரிக்கா வெற்றி பெற  ஒரு பெரிய நிலப்பரப்பு அமெரிக்கா வசமானது. அந்த பகுதியில் எதிர்பாராத விதமாக நடந்த சில சம்பவங்களில் அந்த பகுதியின் முக்கியத்துவம் அதிகரிக்க அந்த பகுதியை அமெரிக்காவின் புதிய மாநிலமாக 1850 -ல் அறிவித்தது அமெரிக்க அரசு


Levi Strauss -ன் தலையெழுத்திலும் நம்முடைய தலையெழுத்திலும் ‘ Jeans Pant ‘, ‘ Denim Pant‘ என்ற வார்த்தைகள் அழுத்தமாக எழுதப்பட போவது அந்த இடத்தில் தான்


அந்த இடத்தின் பெயர் California. 


நீல சரித்திரம்  தொடரும் )



நீல சரித்திரத்தின் அடுத்த பகுதி படிக்க 👇,


பகுதி #5 




நீல சரித்திரம் பகுதி 3 படிக்க 👇 ,


 பகுதி #3 

Previous
Next Post »

1 comments:

Click here for comments
karthikeyan
admin
22 December 2020 at 08:37 ×

very nice bro

Thank you So much karthikeyan :-)
Reply
avatar