கோழி கிறுக்கல்

கோழி கிறுக்கல்

கோழி கிறுக்கல் - நீல சரித்திரம் பகுதி 2 / kozhikirukkal - Neela Sarithiram Episode 2


கோழி கிறுக்கல் - நீல சரித்திரம் பகுதி 2

kozhikirukkal - Neela Sarithiram Episode 2  


கோழி கிறுக்கல் - நீல சரித்திரம் பகுதி 2 / kozhikirukkal - Neela Sarithiram Episode 2
நீல சரித்திரம் பகுதி 2 



        நமது வாசகர்கள் நீல சரித்திரத்தின் முதல் பகுதியை சின்சியராக படித்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் முதல் பகுதியை பற்றி உங்களிடம் கேள்விகள் கேட்காமல் தொடருவோம்


அது சரி Mr.சுப்பன்இரண்டாம் பாகம் எழுத இத்தனை நாட்களா? எங்கே ஆளையே காணோம்? “. 


எங்கே யாருமே நம்மை எதிர்பார்க்காமலே இருந்திடுவாங்களோன்னு பயந்தேன். நல்ல வேளை நீங்களாவது ஞாபகம் வெச்சு கேட்டீங்களே! அது ஓண்ணுமில்லை. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, IPL, தீபாவளி, Bigg Boss  இப்படி முக்கிய அலுவல்கள் இருந்ததால் நீல சரித்திரம் வெயிட்டிங்கில் இருந்தது. இனி வேகம் எடுக்கும் என நம்பலாம்


முதல் பாகத்தின் முடிவில் நாம் அமெரிக்காவுக்கு கப்பலேறியது நினைவிருக்கலாம். நாம் அமெரிக்கா சென்று சேர்வதற்குள் மனித நாகரிகத்தின் முக்கியமான ஒரு கூற்றை பற்றி கொஞ்சம் அலசுவோம். இது புரிந்தால் நீல சரித்திரத்தின் முடிச்சும் எளிதில் அவிழும்.


ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் குறுகிய கால பயணமாக Brazil செல்ல வேண்டிய தேவை இருந்தது. சட்ட விதிகளின் படி பிரேசில் மற்றும் சில நாடுகளுக்கு செல்லும் இந்திய குடிமகன் Yellow Fever-க்கான தடுப்பூசி போட்டுக் கொண்டு தான் பயணம் செய்ய வேண்டும். இந்த தடுப்பூசி ஒரு சில பெரிய நகரங்களில் உள்ள குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளில், குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே போடப்படும்சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த தடுப்பூசி போட்டுக் கொள்ள சென்ற போது அங்கே ஒரு நீண்ட வரிசையில் பலர் காத்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சமுதாயத்தின் அடி தட்டில் இருக்கும் கூலித் தொழிலாளர்கள். அவர்களிடம் பேச்சு கொடுத்த போது அவர்கள் மத்திய ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் சுரங்கங்களிலும்  எண்ணெய் கிணறுகளிலும் வேலை செய்யச் செல்கின்றனர் என தெரிந்து சற்றே வியப்பாக இருந்தது. தான் வசிக்கும் நகரின் அசுத்தமான பகுதிக்கே செல்வதை தவிர்த்து தமது comfort zone-ல் மட்டுமே சௌகரியமாக வாழ்ந்து பழகியவர்கள் ஏராளம். ஆனால் இவர்களோ உலகில் நோய்கள் நிறைந்த, வளர்ச்சி குன்றிய ஒரு பகுதிக்கு தன் குடும்பத்தினரை விட்டு சில வருடங்கள் இருக்க, கடினமான வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள்.  H1B , L1 விசாவிற்காக ஒரு தரப்பு ஏக கூச்சல், புலம்பல் என இருந்தால் இன்னொரு தரப்பு ஆரவாரமின்றி ஆப்பிரிக்கா சென்று வியர்வை சிந்த தயாராக உள்ளனர். இந்த இரண்டு தரப்பினரின் அடிப்படை உளவியலும் ஒன்று தான். அது பல்லாயிரம் வருடங்களாக மனித குலத்திற்கு எரிவாயுவாக இருக்கும் உளவியல்


  • தற்போது இருக்கும் நிலையை முழுதும் ஏற்று கொள்ளாமல் அடுத்தது என்ன என்ற தேடல். Challenging The Status Quo. இதை மனித குலத்தின் உந்து சக்தி என  ஜெயகாந்தன் போன்ற சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.
  • இரண்டாவது ஏதோ ஒரு நிர்பந்தம். அது பஞ்சமோ, அடக்குமுறையோ, பிணியோ அல்லது இவற்றை போன்ற கொடுமையிலிருந்து தப்பிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம். 


இந்த கூறு தான் Migration எனப்படும் புலம்பெயருதல். புதிய இடம், புதிய சிந்தனை, புதிய சமூகம் தனது வாழ்வில் ஏற்றத்திற்கு வழி வகுக்கும் என்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கை இன்றும் ஆழமாக மனித குலத்தில் வேறூன்றி இருக்க காரணம் புலம்பெயருதல் என்ற மாற்றம் சிலருக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் பலருக்கு முன்னேற்றத்தை அளித்திருப்பதே!! இந்த புலம்பெயர்தலில் உருவானது தான் பல நதிக்கரை நாகரிகங்கள். இந்த புலம் பெயருதலை சார்ந்த Mobility என்ற கூற்றே ஜீன்ஸ் பேண்டின் நீல சரித்திரத்திற்கு ஒவ்வொரு கட்டத்திலும் புதிய கதவுகளைத் திறந்து விட்டது . 
 


நம்மூரில் தயாரிக்கப்பட்ட Dungaree வகை துணி பயணங்களின் போது கூடாரம் அமைத்து தங்க ( tent, camping ) ஏற்கனவே நம் மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆங்கிலேயர்களுக்கு இது ரொம்பவே பிடித்து போக அதை பாய்மரம் கட்டும் துணியாகவும் பயன்படுத்த துவங்கினர். மெல்ல நம்ம ஊர் Dungaree முதலில் ஐரோப்பாவிற்கு பயணமானது. நாம் ஏதாவது ஒரு சாமானைபழைய இரும்பு சாமான் பேரிச்சம்பழத்திற்குபோட முடிவு செய்தாலும் அதை போடும் முன் ஒரு விநாடி  ‘இதை வேற எதுக்காவது use பண்ணிக்கலாமா ?என நாம் யோசிப்பது இயல்பே. அப்படி இந்த பாய்மரக் கப்பல்கள் பழுதடைந்து பழைய இரும்பு சாமான் பேரிச்சம்பழத்திற்கு போடும் போது  அந்த கப்பல் மாலுமிகள்அட இந்த கப்பல் பழுதடைஞ்சாலும் இந்த பாய்மரம் கட்டும் துணி நல்ல quality ஆக தான் இருக்கு. இதை waste பண்ணுவானேன் ‘ என நமது intuitive recycling உணர்வுபடி அந்த dungaree துணியை ஆடையாக தைத்து போட்டு கொள்ள தொடங்கினர். இந்த கப்பல் மாலுமிகளும், கப்பலும் அட்லாண்டிக் சமுத்திரத்தை கடந்து அமெரிக்கா சென்ற போது Dungaree வகை துணியும் பதினெட்டாம் நூற்றாண்டில் ( 1700s) அமெரிக்காவை அடைந்தது. நாம் முதல் அத்தியாயத்தில் பார்த்த இத்தாலியில் நெசவு செய்யப்பட்ட ஜீன்ஸ் வகை துணியும் , அதோட imitation ஆன France-ல் நெசவு செய்யப்பட்ட denim வகை துணியும் ஏற்கனவே ஐரோப்பாவில் தொழிலாளர்கள் மத்தியில் ஓரளவு பரிச்சயமாகி இருந்தது. இந்த தொழிலாளர்களும் அமெரிக்கா என்ற கனவு தேசத்திற்கு புலம்பெயர்ந்த போது Denim, Jeans துணிகளும் அமெரிக்கா வந்தடைந்தன


இப்படி புலம் பெயர்ந்தவர்கள் இந்த Denim, Jeans , Dungaree துணி வகைகளை ஆடையாக அணிந்தார்கள் என்றதும் ஏதோ இப்பொழுது நாம் அணிந்திருப்பது போன்ற Jeans Pant வடிவத்தில் என்று நினைக்க வேண்டாம் . இந்த வடிவம் வருவதற்கும், Jeans Pant என்ற பெயர் ஏற்படுவதற்கும் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் ஆனது. அப்பொழுது அவர்கள் Denim/Dungaree/Jeans துணிகளை, வேலை செய்யும் போது ஆடை அழுக்கு ஆகாமலும், சேதாரம் ஆகாமலும் இருக்க ஆடையின் மேல் அணியும் ஒரு protective gear போன்று உபயோகித்தார்கள். இவை பாதி வயிற்றின் மேல் நிற்கும். இவைகளை இடுப்பில் நிற்கவைக்க இவற்றை தோளோடு இணைக்கும் Suspenders பயன்படுத்தினர் ( தோழர்களே, அப்போது பெல்ட்டின் பயன்பாடு பெரியளவில் இல்லை.) இதை Waist High Overalls என்பர். இன்னொரு விதமாக கழுத்து முதல் பாதம் வரை ஒரு single piece-ல் தொளதொள என உடலில் ஒட்டாமல் தொங்கும் வடிவத்தில் இருந்தது. இவை வெறும் Overalls என அழைக்கப்பட்டன. தமிழ் சமுதாயத்திற்கு easy ஆக புரியற மாதிரி சொல்லனும்னா வாலி படத்தில்ஏப்ரல் மாதத்தில்பாட்டுல தலயும் ,  Friends படத்துலருக்கு ருக்கு ரூப்புக்யாபாடலில் தளபதியும் போட்டிருப்பாங்களே. அது தான் Overalls. அதுவே தொளதொளன்னு தொங்கலாக இருந்தால் அதுதான் அந்த காலத்து ‘Overalls’. அனேகமாக ஆண்கள் மட்டுமே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை இதை அணிந்திருந்தனர்


பத்தொன்பதாம் நூற்றாண்டின் பேண்ட்களில் Zip எல்லாம் இல்லை. தற்போது இருக்கும் Zip-களின் முதல் Version 1850-களில் வெளிவந்தாலும் 1893-ல் Chicago நகரில் தான் முறையாக அறிமுகப்படுத்த பட்டது. ஆனாலும் யாரும் கண்டு கொள்ளவில்லை. பின்னர் அந்த டிஸைன் இம்புரூவ் செய்யப்பட்டு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஷூக்களிலும் , புகையிலை பாக்கெட் மூடுவதற்கும்( நெசமாத்தான்) பயன் படுத்தப்பட்டது. 1925-ல் தான் துணிகளில் அவை பயன் படுத்த தொடங்கினர். 1937 ஆம் ஆண்டு பிரபல ‘Esquire’ பத்திரிக்கை Battle of the fly என்ற தலைப்பில் Zip vs Button போட்டி ஒன்றை நடத்தியது( இதுவும் நெசமாத்தான்) . அதில்பட்டன் அணியும் இடத்தில் ஆடைக்கு தற்செயலான, தர்மசங்கடமான சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் Zip-ல் இந்த பிரச்சனை இல்லைஎன கூறி Zip ஜெயித்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது( என்ன ஒரு ஆராய்ச்சி !! ).  இதன் பின்னர் Zip-ன் பயன்பாடு அதிகரித்து எனலாம். ஆனால் நான் படிக்கும் காலத்தில் எட்டாம் வகுப்பு வரை பள்ளியிலும் வீட்டிலும் டவுசர் தான். டவுசருக்கு Button தான். ஒன்பதாம் வகுப்பு முதலே கால்களுக்கு Zip வைத்த பேண்ட் முளைத்தது, முகத்திலே மீசை முளைத்தது, இந்த இரண்டும் சேர்ந்து லேசாக மனதில் ஆசை முளைத்தது. இந்த காலத்தில் இது எல்லாமே ரொம்ப early ஆக முளைக்கிறது


சரி. ஜீன்ஸ் துணி அமெரிக்கா போயாச்சு. அதை ஒரு மாதிரியா சிலர் போட்டுக்க தொடங்கியாச்சு. அவ்வளவு தானே சரித்திரம். வேற என்ன இருக்கு  ?‘ என நீங்கள் யோசித்தால் அதற்கான காலம் அவ்வளவு எளிதில் கனியவில்லை என்பதே உண்மை. பத்தொண்பதாம் நூற்றாண்டின் முதல் பாதி வரை இந்த Overalls போன்ற ஆடை கப்பல் மாலுமிகள், சிப்பாய்கள், சில தொழிலாளர்கள் , மாடு மேய்க்கும் Cowboys என மிக குறுகிய வட்டத்திலே பரிச்சயமாகியிருந்தது. இந்த துணிக்கு என்று எந்த ஒரு மரியாதையும், அதன் மீது ஆர்வமும் பொது மக்களிடம் ஏற்படவில்லை. இந்த பேண்டை மக்கள் அப்போது சத்தியமாக ஸ்டைலாகவோ ரொம்ப ஸீரியசாகவோ எடுத்து கொள்ளவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.அந்த காலகட்டத்தில் இதை அணிந்ததும் இருந்த கௌரவமும் சற்று குறைந்தது என்றே சொல்ல வேண்டும். ஆனால் இதையெல்லாம் மாற்றி அமைத்த நிகழ்வு பற்றி பின் வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.


அனேகமாக அடுத்த அத்தியாயத்தில் நம்ம கதையின் இரண்டு ஹீரோக்களில் ஒருவரை உங்களுக்கு அறிமுகப் படுத்தி விடுவோம். நம்ம ஹீரோவுக்குஜீன்ஸ போட வந்தேன்டா ! டான்ஸ் ஆடி வந்தேன்டா,...ரேஞ்சுக்கு Intro குத்துப் பாட்டு எல்லாம் நம் வாசகர்கள் எதிர்பார்க்க மாட்டார்கள் என நம்புகிறோம் .

இந்த குத்துப் பாட்டு எந்த படத்தில் வந்ததுன்னு தேடாதீங்க. அது சும்மா நம்ம கற்பனை. ஹிஹி


( நீல சரித்திரம் தொடரும்...




நீல சரித்திரத்தின் அடுத்த பகுதி படிக்க 👇,

பகுதி#3


நீல சரித்திரம் பகுதி 1 படிக்க 👇 , 

பகுதி 1





Previous
Next Post »

3 comments

Click here for comments
Unknown
admin
4 December 2020 at 16:07 ×

Interesting✌👍

Reply
avatar
karthikeyan
admin
6 December 2020 at 10:13 ×

great, feels like reading crime novel
waiting for the next episode

Reply
avatar