விடியற்காலை 4:00 மணி
“நான் ஏர்போர்ட்க்கு வரலைப்பா.நீங்க மட்டும் போங்க”,
தனது கலைந்த கூந்தலை தூக்கி வாரி கட்டிகோண்டு மெல்ல ஆதித்யனின் மார்பில் கை வைத்து தனது தாடையை தன் கை மேல் வைத்து அவனுடைய கூர்மையான பார்வைக்கு பதில் பார்வை வீசினாள் சந்தியா.
கடந்த நான்காண்டு கால கோர்ட்ஷிப்பில் தனது உள்விவகாரங்களை மறைக்காமல் அவள் உரித்த தோழியாய் அவனுடைய அரவணைப்பில் பல இரவுகள் கழித்திருந்தாலும் இன்று சற்றே வித்தியாசமானது.
கடந்த பதினான்கு மணி நேரமாக ஆதித்யனின் மனைவி அவள்.
தனது ஐம்பதாவது வயதில், முதல் மனைவி மறைந்து ஏழு ஆண்டுகளுக்கு பின் ரேஜிஸ்ட்ரார் முன் நேற்று, Widower என்ற அடையாளத்தை துறந்தார் ஆதித்யன். அந்த நிகழ்வு இன்று ஃப்ளைட்டில் வந்து கொண்டிருக்கும் தனது ஒரே மகளுக்கு இன்னமும் தெரியாது.
சொல்லாமல் மறைக்கும் எண்ணமும் இருவருக்கும் இல்லை.
தனது புருவத்தை உயர்த்தி என்ன யோசனை? என ஜாடையில் கேட்டவாறே, மெல்ல அவனது ‘சால்ட் அண்டு பெப்பர்’ தாடியை தடவினாள்.
‘இன்னிக்கே நியூஸ் ஷேர் பண்ணிடலாமா?’ சந்தியா கேட்க,
‘Definitely!’
என தீர்க்கமாக பதில் வந்தது ஆதித்யனிடமிருத்து.
மெல்ல ஆதித்யனின் உதடுகளை வெற்றிலையை போல் தனது விரல்களில் பிடித்து தன் நாக்கால் சுண்ணாம்பு தடவி தனது உதடுகளை அதன் மேல் அழுத்தி அதை மடித்து மென்று எச்சில் விழுங்கி "கொட்டபாக்கு பாடலை"யே தன் இதழ்களால் பாடிய சந்தியா,
சரணம் முடிந்ததும் பல்லவி தானே ???
என்ற ரீதியில் ஆதித்யனை பார்த்தாள்.
சந்தியாவின் இதழை சுவைத்த ஆதித்யன், அவளது பின்வளைவுகளோடு அவளை அள்ளி எடுத்து தன் மேல் படர விட,
அரைகுறையாக இருந்த அவர்கள் முழுமையானார்கள் .
காலை 6 :00 மணி
ஆதித்யன் தன் மகள் வர்ஷாவை ரிசீவ் செய்ய பலத்த சிந்தனையோடு ஏர்போர்ட் லாபியில் இருந்த காஃபி ஷாப்பில் நின்று கொண்டிருந்தார்.
இம்மிக்ரேக்ஷன் முடிஞ்சிருக்குமா ???
மெஸேஜ் வரலயே? என்ற செயற்கை படபடப்பு ஏதுமின்றி காஃபி வாங்கி கொண்டு நடந்தார்.
அங்கே வெயிட் செய்து கொண்டிருந்த சந்தியாவிடம் ஒரு கப்பை நீட்ட புன்முறுவலோடு வாங்கிய சந்தியாவின் தோளில் கை போட்டவாரே இருவரும் அன்யோன்யமாக காஃபி குடிக்கலானர்.
‘ I’m glad that you finally agreed to come with me’ ஆதித்யன் சொல்ல,
மெல்ல தலையை நிமிர்த்தி,
ஆதித்யன் முகத்தை பார்த்து ‘May be you’re right dear. I should not be avoiding this moment’என்றாள் சந்தியா.
ஆதித்யன் கலியபெருமாள்
வயது : ஐம்பது.
உயரம்: 6 அடி
ஜிம்மிற்க்கு போவதில்லை என்றாலும் வீட்டிலேயே தினமும் உடற்பயிற்சி செய்தும் அடிக்கடி டென்னிஸ் விளையாடியும் சீரான உணவுபழக்கத்தாலும் ஃபிட்டான தேகம்.
குறிப்பாக flat belly.
ட்ரிம் செய்யபட்ட சால்ட் அண்டு பெப்பர் தாடி மீசை.
க்ரீம் கலர் கார்கோ ஷார்டஸ், கருப்பு கலர் ஷார்ட் ஸ்லீவ் போலோ டீ ஷர்ட் , வலது கையில் ஆப்பிள் வாட்ச், சாக்ஸ் போடாத பிராண்டட் ஷூஸ் என இளசுகளுக்கு சவால்விடும் தனி ஸ்டைல்.
கூர்மையான பார்வை,
குறைவான வார்த்தைகள்,
அலட்டிக் கொள்ளாத யதார்த்தம்.
அமெரிக்காவில் வசித்த போது பிறந்த மகள் வர்ஷா.
ஏனோ அங்கே சிட்டிஸன்ஷிப் வாங்கியதும் வர்ஷாவின் பதிமூன்றாவது வயதில் சென்னை திரும்பிய நான்கு வருடத்தில், Breast cancer-க்கு மனைவியை பறிகொடுத்ததும் வாழ்க்கையின் ஒரே அர்த்தம் வர்ஷா என்றானது.
அந்த புரிதலில் புது புது அர்த்தத்தை சேர்த்தது சந்தியாவின் நட்பு.
Immigration has just got over. She is in baggage claim’ என்றாள் சந்தியா.
தனக்கு வராத மெசேஜ் சந்தியாவுக்கு மட்டும் வந்திருப்பதை பொருட்படுத்தாமல் காஃபியிலும், தன் சிந்தனையிலும் மூழ்கினார். ஆதித்யன்.
ஆம்!! வர்ஷாவின் பெஸ்டீ சந்தியா!!! வர்ஷாவிற்க்கு இந்தியாவில் இருந்த போது தாயின் இழப்பை தாங்கிக் கொள்ள ஓரளவு உதவியது சந்தியாவின் நட்பு. பள்ளியில் சக மாணவியாக தொடங்கிய நட்பு, இவர்கள் லெஸ்போவோ என்று சிலர் சந்தேகிக்கும் அளவு இருக்கமான straight நட்பாக தொடர்கிறது. வர்ஷா இன்ஜினியரிங் முடித்து தன் தாய் நாட்டிற்க்கே திரும்பி மேற்படிப்பு முடித்து செட்டில் ஆக முடிவு செய்ய,
சந்தியா இங்கேயே M.A.( Journalism) முடித்து ஒரு ஆங்கில நாளிதழில் staff reporter ஆக பணிபுரிய,
இந்த பயணத்தில் இருவரும் 24 வயதை எட்டி பிடித்துள்ளனர்.
வர்ஷா தந்தையோடு வாரம் இரு முறை வீடியோ கால் செய்வாள் என்றால் சந்தியாவோடு வாரம் பல முறை வீடியோ காலில் பேசுவாள்.
வர்ஷா நிறைய பேசுவாள் என்றால் சந்தியா சளைக்காமல் கேட்டுக் கொண்டிருப்பாள்.
வர்ஷா தான் எடுக்கும் முடிவுகளுக்கு சந்தியாவின் ஒப்புதலை எதிர்பார்க்காவிட்டாலும் அங்கீகாரம் கிடைத்தால் மகிழ்வாள்.
சந்தியாவோ தன் முடிவுகள் பற்றி வர்ஷா உள்பட யாரிடமும் தானாக
விவாதிக்க மாட்டாள்.
வர்ஷாவிற்கு இன்ஜினியரிங் விருப்பம் என்றால்
சந்தியாவிற்கு ஆர்ட்ஸ் அண்டு ஹுமானிட்டீஸ்.
வர்ஷா Tom Clancy போன்று Light Fiction தேடினால்,
சந்தியா Ayn Rand போல் Heavy Fiction இல் மூழ்குவாள்.
Opposite poles definitely attract each other. இந்த இரு துருவங்கள் இப்படி ஒரு முக்கோணத்தில் சிக்கியிருப்பது சற்றே விந்தையானது.
இந்த ஃப்ளாஷ்பேக்கிற்குள் எல்லாம் போகாமல் ஆதித்யன் ஸ்மார்ட் ஃபோனில் சந்தியா சிலநாட்களுக்கு முன் தன் காதலியாக தனக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை மீண்டும் வாசித்துக் கொண்டிருந்தார்.
தான் டென்னிஸ் ஆடி திரும்பும் இடைவேளையில் காத்திருந்த போது அனுப்பிய,
‘காரா! ஆட்டக்காரா! காத்திருக்கேனே 💖 😉 !!!!’
என்ற வரிகளை படித்து உதிர்த்த புன்முறுவலை கலைத்தது "Varsha is here !" என்ற சந்தியாவின் குரல்.
ஆறு மாதத்திற்கு முன் தனது அமெரிக்கா பிஸினஸ் ட்ரிப்பின் போது வர்ஷாவோடு ஒரு வாரம் தங்கியிருந்திருந்தாலும், தன் மகளை பார்த்த மகிழ்ச்சியில் மெல்லிதாக ஒரு Hug செய்து,
‘How was your flight?’ என்றார் ஆதித்யன்.
‘Good Dad. Uneventful’ என்ற பதிலுடன் லக்கேஜ் கார்ட்டை தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு சந்தியாவுடனான உரையாடலில் முழுவதும் கரைந்தாள்.
சந்தியா மெல்ல ஆதித்யனை ஓரக்கண்ணால் பார்க்க
Just Carry on ! என்ற ரீதியில் ஆதித்யன் கண் ஜாடை செய்ய,
வர்ஷாவிடம் எப்படி சொல்வது? என்ற போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டியது.
*****
சந்தியா வந்தனம் ( சீசன் 1 ) அத்தியாயம் # 2:
காலை மணி 8:00
காலை நேர டிராஃபிக்கில் நிதானமாக காரை ஆதித்யன் ஓட்ட வர்ஷா ஆல்மோஸ்ட் non-stop ஆக பேசிக் கொண்டிருந்தாள். வர்ஷாவும் சந்தியாவும் ஒருவர் கையை இன்னொருவர் பிடித்த படியே அருகருகே பின் சீட்டில் அமர்ந்திருந்தனர்.
‘ Dad, Is your Move to Australia confirmed? ‘.
‘என் மெஸேஜ் நீ படிக்கறதே இல்லை’
‘Sorry Dad. Tell me what happened ?’.
‘ Confirm ஆயிடுச்சு. அடுத்த வாரம் விசா க்கு papers submit பண்ணனும்’.
‘Oh ok!. சந்தியா நான் சொல்லிட்டிருந்தேனே last week அதான்’ . கேட்டுவிட்டு மெல்ல தலை அசைத்து acknowledge செய்தாள் சந்தியா. ஆதித்யன் மெல்ல சிந்தனை வயப்பட்டவாறே ஓட்டினார்.
‘ So நம்ம apartment- ஐ என்ன பண்ண போறீங்க?’.
‘ No idea மா . யோசிக்கனும்’.
‘பேசாம சந்தியா நம்ம வீட்டிலேயே வந்து stay பண்ணிடலாம். நீ எதுக்கு ஒரு வீட்டுக்குத் தனியா rent கொடுத்திட்டு இருக்கனும்’.
அங்கே காருக்குள் சந்தியா, ஆதித்யன் இருவருக்கும் ஏற்கனவே இருந்த நெருடல் இன்னும் சற்றே அதிகமானது.
“ இப்பவே Mostly உங்க apartment -ல் தானே நான் இருக்கேன். எதுக்கு தனியா rent தரேன்னு எனக்கும் தெரியலைப்பா “ என்று சொன்ன சந்தியாவின் Mind voice வெளிவராமல் மனதிற்குள்ளேயே நெருடலோடு கரைந்தது.
‘நீ வேற நாலு வருஷமா யாரையோ Date பண்ணிட்டிருக்க...அவரையும் கூட்டிட்டு வந்து நம்ம apartment லேயே stay பண்ண சொல்லு. வசதியா போயிடும்’. என சற்றே teasing ஆக வர்ஷா சொல்ல சந்தியாவிற்கு லேசாக வியர்க்கத் தொடங்கியது. வெளியில் எந்த expression-ம் காட்டாமல் காரை ஓட்டினாலும் ஆதித்யன் மனசுக்குள்ளே யோசிக்கலானார். வர்ஷாவிற்க்கு அரசல் புரசலாக ஏதோ தெரிந்திருக்கிறது. சாதாரணமாக தன்னைப் பற்றிய எந்த தகவலையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத சந்தியாவிடமே துருவி துருவி வர்ஷா எதையோ ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கிறாள்.
‘ Do you know Dad ?, நாலு வருஷமா யாரையோ seriously date பண்ணிட்டு இருக்கா சந்தியா. அடிக்கடி Live in ல வேற இருக்கா with that guy. எவ்வளவு கேட்டாலும் யாருன்னு சொல்லவே மாட்டேங்கறா. நான் ரொம்ப துருவி துருவி how’s that guy ன்னு கேட்டதுக்கு ஒரே ஒரு விஷயம் தான் சொல்லியிருக்கா ‘ என்று வர்ஷா நிறுத்தி சந்தியாவை ஒரு பார்வை பார்க்க, சந்தியா நான் என்ன சொன்னேன் என தன் நாலு வருட conversation history-ஐ மனசுக்குள்ளேயே ஒரு முறை பதட்டத்தோடு search பண்ணி பார்த்துக் கொண்டிருக்கும் போதே வர்ஷா , ‘ He is a devil in bed but darling otherwise ன்னு சொன்னா Dad’ என்று பெரியதாக சிரித்துக் கொண்டே சொல்ல லேசாக முகத்தை ஒரு கையால் மூடிக் கொண்ட சந்தியா வெட்கமும் கூச்சமும் முட்டித் தள்ள "அச்சோ!" என மனதுக்குள் சொன்னபடியே ஓரக் கண்ணால் car dash mirror இல் தெரிந்த ஆதித்யனின் முகத்தை ஒரு குறும்பு புன்னகையோடு பார்த்தாள்.

அந்த தருணத்தில் சற்று வெளிப்படையாகவே ஆதித்யன் புன்னகை செய்தாலும் அந்த சூழ்நிலையின் விநோதம் சற்று heavy ஆகவே அவருக்குள் இறங்கியது. இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் வர்ஷாவிடம் தான் இந்த உண்மையை சொல்லி அவள் மன நிலையை முற்றிலும் கலைக்க போகிறோம் என்று நினைத்த போது சற்றே பலவீனமாக உணர்ந்தார்.
சந்தியா இப்படி லேசாக கைகளால் முகத்தை மூடிய போது டாலடித்தது நேற்று ஆதித்யன் அவளுக்கு திருமண பரிசாக அளித்த வைர மோதிரம். வர்ஷா முழுதும் சிரித்து முடிக்கும் முன்னரே இதை கவனித்துவிட ‘ என்னப்பா உனக்கு gold jewellery கூட பிடிக்காது. இப்போ டைமண்ட் ரிங்க் போட்டிருக்க. டைமண்ட் தானே அது?. ரொம்ப மாறிட்ட, உன் devil கொடுத்ததா.. ?எங்க என்கிட்ட சொல்லாம கல்யாணம் ஏதும் பண்ணிட்டியா என்ன? ‘ என்று வர்ஷா கொஞ்சம் கிண்டலாக கேட்டதும் சற்றே நிலை குலைந்து போனாள் சந்தியா.
ஏதும் பதில் சொல்லாமல் லேசான புன்னகையோடு மோதிரத்தையே வருட ஆதித்யன் மெல்ல குறுக்கிட்டு , ‘ Varsha, I think you should not make it too uncomfortable for Sandhya’ என்று லேசான புன்னகையை வரவழைத்து சொல்ல உடனே வர்ஷா ‘ Next three weeks இவ கூட தானே இருக்கப் போறேன். Will find out more’ என்று சந்தியாவை teasing பார்வை பார்த்து கூற சந்தியா ஆதித்யன் இருவருக்கும் நெருடல் அதிகரித்தது.
‘Relax-ப்பா.I was just kidding ‘ என வர்ஷா சந்தியாவை சமாதானப்படுத்தினாலும் வர்ஷா சொன்னது உண்மை தான் என்ற குற்ற உணர்வு சுளீர் என சுட்டது. ஆதித்யனுக்கோ குற்ற உணர்வு வேறு வகையில் குடைந்தது. தன் செயல்களில் வர்ஷாவிடம் துளியும் ஒளிவு மறைவு இருந்ததில்லை. வர்ஷா மூன்றாம் ஆண்டு காலேஜ் டூர் முடிந்து வீட்டிற்க்கு வந்த இரவு ‘ எப்படி போச்சுமா டூர்?’ என ஆதித்யன் கேட்க அதுக்கு வர்ஷா ‘ It was fun Dad. We had a good time. And I had sex for a first time ...with my classmate. It is not a serious relationship. Just casual. And we both took all precautions’ என சாதாரணமாக தந்தையிடம் சொன்ன தைரியமும், சமீபத்தில் கலிஃபோர்னியாவில் சந்தித்த போது ‘ I tried weed once Dad. You know it’s legal in California’ என சொன்ன தைரியமும் தன்னிடமிருந்து வந்தது தான். வர்ஷாவும் இதை தன்னடமிருத்து எதிர்பார்ப்பாள் தானே ? தன்னுடைய அந்த தைரியம் எங்கே போனது என்ற குற்ற உணர்வு கலந்த சிந்தனையை கலைத்தது,
‘க்ரீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்’ என்ற கார் டயரின் சத்தம்.
திடீரென சாலையை கடந்த பூக்கார பெண்மணியை சிந்தனை வயப்பட்டதில் கடைசி நேரத்திலேயே கவனித்த ஆதித்யன் சடால் என பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி லேசாக திசை திருப்பி பெரிய அசம்பாவிதம் ஏதுமின்றி சமாளித்தார். மூவரும் Seat belt அணிந்திருந்ததால் அதிர்ச்சி மட்டுமே. ‘ உங்களுக்கு ஒண்ணும் ஆகலைல்லபா you’re ok right?’ என சந்தியா ஆதித்யனின் தோளில் கைவைத்து பதட்டத்தோடு கேட்க உதடு வரை வந்த அக்கறையை உதட்டை கடக்க விடாமல் இக்கரையிலேயே அடக்கிக் கொண்டு கைகளையும் பின்னால் இழுத்துக் கொள்ள, அதற்கு பதில் ‘ Are you fine dad’ என்ற வர்ஷாவின் குரல் ஒலித்தது. அதற்குள் சுதாரித்திருந்த ஆதித்யன் ‘எனக்கு ஒண்ணுமில்லை. Are you people ok?’ என கேட்டவாறே காரை முடிந்தவரை ஓரமாக பார்க் செய்து ‘ நீங்க உள்ளேயே இருங்க ‘ என கூறி விட்டு மெல்ல இறங்கி அந்த பெண்மணியை நோக்கி நடந்தார்.

கார் நின்ற அதிர்ச்சியிலும் எழுந்த சத்தத்திலும் பூக்கூடையை தவறவிட்ட பெண்மணியிடம் ஏதும் காயம் ஏற்பட்டதா, hospital செல்ல வேண்டுமா என பலமுறை விசாரித்துவிட்டு , சேதமடைந்த பொருட்களுக்கு உரிய மதிப்பை விட அதிக இழப்பீடு கொடுத்து லேசாக மன்னிப்பும் கேட்டு விட்டு பெரிய கூட்டம் கூடும் முன் மெல்ல வந்து காருக்குள் உட்கார , ‘ அந்த அம்மாவுக்கு ஒண்ணுமில்லை தானே?’ என சந்தியா விசாரிக்க , ‘She is fine’ என சொல்லிக் கொண்டே கார் ஸ்டார்ட் செய்தார்.
சந்தியா குறுக்கிட்டு ‘ May be we should take a break. பக்கத்துல எங்கயாவது light breakfast or coffee சாப்பிட்டு போலாம்’ என ஆதித்யனின் மனநிலையை புரிந்து கொண்டவாறே சொல்ல வர்ஷாவும் ஆதித்யனும் அதை ஏற்றுக் கொள்ள ஒரு நல்ல உணவகத்தை நோக்கி கார் உருண்டது.
*****
சந்தியா வந்தனம் ( சீசன் 1 ) அத்தியாயம் # 3:
மணி 8:45
ரெஸ்டாரண்ட் பார்க்கிங்-ல் காரை பார்க் செய்து விட்டு ‘ நீங்க உள்ளே போய் ஆர்டர் பண்ணுங்க. எனக்கு காஃபி மட்டும் போதும்’ என சொல்லிக் கொண்டே dash board இல் எதையோ தேடலானார். சந்தியாவும், வர்ஷாவும் ரெஸ்டாரண்ட்டை நோக்கி நடக்க சந்தியா மட்டும் என்னவா இருக்கும் என திரும்பி பார்த்த படியே நடந்தாள்.
உள்ளே கொஞ்சம் விலாசமான இடம். பக்கத்து டேபிளில் விக்கினால் நமக்கு தண்ணீர் குடிக்க தோன்றும் அளவு நெருக்கம் இல்லாமல் ஓரளவு நன்றாகவே இடைவெளி விட்டு டேபிள்கள் போடப்பட்டிருந்தன. ஒரு ஜன்னலோர டேபிளில் இருவரும் எதிர் எதிரே அமர சுற்றி இருந்த டேபிள்கள் காலியாகவே இருந்தன.
ஆதித்யன் ஏன் வரவில்லை என யோசித்துக் கொண்டிருந்த சந்தியாவிடம் ‘ புதுசா என்ன activity பண்ற ‘ என தன் மொபைலை நோண்டிக் கொண்டே வர்ஷா கேட்க சந்தியா அதிகம் யோசிக்காமல் ‘ Started playing Tennis ‘ என்றாள்.
உடனே வர்ஷா ‘ Does your boy friend play tennis?’ என கேட்க சந்தியா ஒரு புன்னகையோடு ஆமாம் என்று தலையாட்டினாள்.
‘ I thought so’ - வர்ஷா.
‘ ஒரு டென்னிஸ் பிளேயருக்கு தான் இன்னொரு டென்னிஸ் பிளேயரோட மனசு புரியும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க. அதான்’ என முகத்தை பாவமாக வைத்து கொண்டு சந்தியா சிரிப்பு கலந்த சீரியஸ்னஸோடு சொல்ல வர்ஷா கொஞ்சம் சிரித்து ‘ That was a good one’ என்றாள். அப்போ அங்க வெயிட்டரிடம் சந்தியா மூன்று காபி மட்டும் சொல்லிவிட்டு தொடர்ந்தாள்.
‘How’s your Russian boy friend doing?’ - சந்தியா.
‘ He is doing good.’ - வர்ஷா.
‘ Six months back அப்பா கலிஃபோர்னியா வந்தப்போவே நீ உன் boy friend பத்தி அப்பாகிட்ட சொல்லியிருக்கலாம்’ - சந்தியா.
‘ It had just started. I wasn’t even sure if it was serious’ - வர்ஷா
‘ How’s it going now ? ’ - சந்தியா
‘ Going on ’ என வர்ஷா மொபைலில் கவனத்தை செலுத்தி கொண்டே அலட்டி கொள்ளாமல் சொல்ல சந்தியா மெல்ல வர்ஷா கையை பிடித்து அழுத்தி தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தினாள். வர்ஷா பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. சந்தியாவிற்க்கு தன்னுடைய காதல் விவரங்களை தான் வர்ஷாவிடம் பகிர்ந்து கொள்ளாத்தால் வர்ஷாவும் அதே போக்கை கையாளுவது புரிந்தது. அது சந்தியாவை மேலும் வருத்தமடைய செய்தது. ‘ Be yourself வர்ஷா’ என மனசுக்குள்ளேயே சொல்லி கொண்டாள் சந்தியா.
‘ கல்யாணம் பத்தி யோசிச்சீங்களா? ‘ - சந்தியா
‘No ப்பா’, அது வரை மொபைலை நோண்டிக் கொண்டே பேசிக் கொண்டிருந்த வர்ஷா தன் முழு கவனத்தையும் சந்தியா மீது வீசி, ‘நான் கல்யாணம் பத்தி யோசிச்சாலும் யோசிக்க start பண்ணின next second உன் கிட்ட சொல்லிடுவேன் . அப்புறம் கொஞ்ச நாளிலயே அப்பா கிட்ட சொல்லிடுவேன். Every month வர்ற பீரியர்ட்ஸ் ஸ்டார்ட் ஆனதுமே உன் கிட்ட சொல்லிடறேன். கல்யாணம் பத்தி யோசிச்சா சொல்லாம இருப்பேனா? ‘ .
சந்தியாவிற்கு சப்த நாடியும் அடங்கியது. திருவிளையாடலில் வருவது போல் அசையும் பொருள் எல்லாம் ஒரு கணம் நின்று மீண்டும் அசைய தொடங்கியது போல் இருந்தது அவளுக்கு. அதற்கு மேல் எதுவும் பேச தோன்றவில்லை. ‘ஆதித்யன் சீக்கிரம் வந்தால் தேவலை. அவரையும் காணோம். எங்கே போனார்?’ என மனதுக்குள் புலம்பியவாறே ஜன்னலை நோக்கினாள்.
‘என் கல்யாணத்துக்கு இன்னும் டைம் இருக்குப்பா. But before that I have something important to do’ என்றாள் வர்ஷா. வர்ஷாவே ஏதோ டாபிக் மாற்றியதில் சற்றே நிம்மதி அடைந்த சந்தியா கொஞ்சம் ரிலாக்ஸ்டாக ‘ என்ன பண்ணனும்?’ என கேட்டாள்.
‘ I have already told you. I want my dad to get married again’ . - வர்ஷா.
சந்தியாவிற்கு கொஞ்சம் முகம் மலர்ந்தது. இப்படி வர்ஷா பேசி கொண்டிருக்கும் போதே ஆதித்யன் வந்ததும் நடந்ததை சொல்லிடனும் . அப்போ வர்ஷாவுக்கும் இது சரின்னு தோனும் . ஆனா நம்ம hubby-ஐ தான் இன்னும் காணோம். என்ன வேலை இவருக்கு என மனதிற்குள் அங்கலாய்த்தவாறே வர்ஷா அடுத்து சொல்ல போவதிற்க்கு காத்திருந்தாள்.
‘ I don’t think so Dad is going to date anyone on his own. அவரோட peer க்ரூப்ல யாரும் கிடைப்பாங்களான்னு தெரியலை. Though I would hate to do this, looks like நான் தான் அவருக்காக யாரையாவது தேடி பிடிக்கனும் போலிருக்கு. That’s one of my key objectives in this trip’.
‘ ரொம்ப தேடாதப்பா. நான் தான் கண் முன்னாலையே இருக்கேனே’ வழக்கம் போல் சந்தியாவின் Mind Voice சொன்னது. ஆனாலும் அந்த தருணமே வர்ஷாவிடம் நடந்ததை சொல்லிவிட வேண்டும் என ரொம்பவே டெம்ப்ட் ஆனாலும் ஆதித்யன் தான் நேரடியாக வர்ஷாவின் முகத்தைப் பார்த்து ஒரு தந்தையாக விஷயத்தை சொல்ல வேண்டும் என கூறியிருந்ததால் பொறுமை காத்தாள்.
‘ உனக்கு யாராவது தெரிஞ்ச single female இருந்தா சொல்லேன். Say somebody in their late 40s or even 50s ‘ - வர்ஷா.
‘ Why so old?. She can be of any age right. Just that they have to like each other’. - சந்தியா சற்றே வேகமாக.
‘ Be realistic ப்பா. Why would somebody in 20s and 30s risk their future with a 50 year old guy. அவர் பொண்ணு age ல ஒருத்திய கல்யாணம் பண்ணிட்டா it would be very odd. I don’t want some young female to be unsatisfied with my dad and lead a miserable life’.
‘ நான் experience இல் சொல்றேன். உங்கப்பா கிட்ட எந்த female-ம் எந்த விஷயத்திலும் unsatisfied ஆக இருக்க மாட்டாள். அதான் devil darling ன்னு தெளிவா சொன்னேனே’ , நீங்கள் யூகித்தது போல் சந்தியாவின் mind voice தான் இதுவும். இன்னும் அதிக எரிச்சலுடன்.
‘ I don’t buy this பொண்ணு age logic. You know veteran hindi actor Dilip Kumar? அவர் wife சைரா பானு அவரை விட twenty two years younger. They have been happily married for more than 50 years. Famous Oscar award winning actress Sophia Loren க்கும் அவங்க husband Carlos Ponti க்கும் 22 years age difference. They were also happily married for more than 50 years until Carlos Ponti died. இவ்வளவு ஏன்? இப்போ France ஓட President ஆ இருக்காறே Emanuel Macron, அவரோட wife Brigitte அவரைவிட 24 வயசு மூத்தவங்க. அவரோட டீச்சரா இருந்தவங்க. As per your logic அவங்களோட பையன் வயசு அவருக்கு. அவங்க எல்லாம் நிறைவா தானே இருக்காங்க. I find this பொண்ணு வயசு logic totally regressive and unacceptable’ , என பொரிந்து தள்ளியது சந்தியாவின் Mind voice இல்லை. நிஜ வாய்ஸ். தாம் சற்று உணர்ச்சிவச பட்டுவிட்டோம் என்று உணர்ந்த சந்தியா தன்னைத் தானே ஆசுவாச படுத்திக் கொண்டாள். ஒரு வேளை இந்த விஷயத்தை சொல்லும் போது வர்ஷா இந்த பொண்ணு வயசு logic பற்றி பேசினால் அதற்கு பதில் சொல்ல சேகரித்து வைத்திருந்த arguments எல்லாம் இப்படி உணர்ச்சிவசப் பட்டு பொத்தாம் பொதுவாக சொல்லிட்டோமே என தம்மைத் தானே நொந்துக் கொண்டு லேசாக உள்ளூர சிரித்துக் கொண்டாள். அப்போது வெயிட்டர் காஃபி கொண்டு வந்து வைக்க மூன்றாவது காஃபியை எந்த உள்நோக்கமும் இன்றி சந்தியாவின் அருகில் சாதாரணமாக வைக்க ‘ நாம இவ்ளோ பேசினது இந்த waiter க்கு atleast புரிஞ்சதே ‘ என ஆறுதல் பட்டுக் கொண்டாள்.
இப்போ வர்ஷா மெல்ல ‘ I’m surprised you have all these details in your finger tips. நாம யாரோ young age பொண்ணு அப்பாவை கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்கற மாதிரி இப்படி detailed ஆ பேசிட்டு இருக்கோம். Funny. First let’s start looking’ என சாதாரணமாக சிரித்தவாறே சொல்லி காஃபி மேல் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.
இதை கேட்ட சந்தியா ‘ சரிப்பா, நீ தான் இவ்வளவு பேசறியே நீயே எங்கப்பாவை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு ஒரு கேலி கிண்டலுக்கு கூட கேட்க மாட்டேங்கறாளே. ஒரு வேளை இந்த பொண்ணு வயசு Logic படி என்னையும் அவளை போல அவள் அப்பாவோட இன்னொரு பொண்ணா யோசிக்கறாளோ? அபச்சாரம்! அபச்சாரம்! இதுல funny ன்னு வேற சொல்லிட்டாளே’ என மனதிற்குள்ளேயே சந்தியா ஏகத்துக்கும் குழப்பிக் கொள்ள அதே சமயத்தில் நம்மை இப்படி தனியா சமாளிக்க விட்டுட்டு எங்க காணோம் இந்த மனுஷனை என்ற மனைவிக்கே உரித்தான கோபமும் சேர்ந்து கொள்ள அந்த இளம் வயதில் சந்தியாவின் BP ஏகத்துக்கு எகிறியது.
இங்கே நடந்த விவாதம் பற்றி எந்த விவரமும் தெரியாத ஆதித்யன் மெல்ல ரெஸ்டாரண்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.
*****
சந்தியா வந்தனம் ( சீசன் 1 ) அத்தியாயம் # 4:
ஆதித்யன் வேகமாக ரெஸ்டாரண்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். இப்போது ரெஸ்டாரண்டுக்குள் சென்றதும் நேரடியாக வர்ஷாவின் முகத்துக்கு எதிராக உட்கார்ந்து, கண்களை பார்த்து நடந்த எல்லா விஷயங்களையும் தெரிவித்து விடுவது என plan பண்ணியவாறே நடந்து வந்து கொண்டிருந்தார். வீட்டிற்கு போவதற்குள் வர்ஷாவிடம் நடந்ததை சொல்லிவிட்டால் வர்ஷாவுக்கு தன்னிடம் சொல்லாமல் இவர்கள் இருவரும் நீண்ட காலமாக மறைத்துவிட்டார்கள் என்ற வருத்தம் குறைவாக இருக்கும். அப்படி சொல்வதில் தாமதமானாலோ, அல்லது அவளாகவே கண்டுபிடித்து விட்டாலோ அவளை சமாதானம் செய்வது ரொம்பவே கஷ்டம் என்றெல்லாம் யோசித்தவாறே ரெஸ்டாரண்ட்டிக்குள் நுழைந்து நேராக ரெஸ்ட் ரூம் சென்று refresh செய்து வந்தார்
அவர் ரெஸ்ட்ரூமிலிருந்து வெளியே வந்ததும் ஐந்தாறு டேபிள்கள் தள்ளி ஒரு டேபிளில் உட்கார்ந்திருந்த வர்ஷாவின் முதுகும், சந்தியாவின் முகமும் தெரிந்தது. தூரத்திலிருந்து ஆதித்யனை பார்த்த சந்தியா முதலில் தன்னைத் தனியே இங்கே விட்டு விட்டு எங்கேயோ போய் லேட்டாக வந்ததற்காக கோபக்கணல் வீசினாள். ஆனால் தான் கோபமாக முகத்தை வைத்திருப்பதையே சரியாக புரிந்து கொள்ளாமல் சிரித்துக் கொண்டே வரும் ஆதித்யனை பார்த்து அவளுக்கும் லேசாக சிரிப்பு வந்தது. நேராக வந்து Plan செய்தது போல் வர்ஷாவை நோக்கி சந்தியாவின் அருகில் அமர்ந்தார். அந்த குளிர்ச்சியில் சற்றே வியர்வை குறைந்தது சந்தியாவிற்கு.
‘What happened Dad? I was about to call you’ .
‘கொஞ்ச நேரம் முன்னாடி அந்த லேடி cross பண்றப்ப நான் sudden brake போட்டு காரை திருப்பி ஸ்டாப் பண்ணினதுல flat tyre ஆகியிருந்தது. I just changed to spare tyre ‘என்று ஆதாரமாக தன் கைகளை காட்ட அதில் இன்னும் கொஞ்சம் கருப்பு கிரீஸ் ஒட்டியிருந்தது.
‘Did you wash your hands Dad?’
‘Yes of course !’ என காஃபியை கலக்க தொடங்கினார்.
‘ Do You know what we were talking about Dad?’
மெல்ல தலையை தூக்கி என்ன என்பது போல் ஆதித்யன் தலையாட்ட ’Your wedding Dad’ என வர்ஷா சொன்னதும் ஆதித்யனுக்கு ஷாக் ஆனது. நாம தானே வர்ஷாகிட்ட சொல்லனும்னு இருந்தோம். அதற்குள் சந்தியா எல்லாத்தையும் சொல்லிட்டாளா என்ற சந்தேகத்தில் வர்ஷாவையும் சந்தியாவையும் மாறி மாறி பார்க்க, இதை உடனே புரிந்து கொண்ட சந்தியா ‘ She wants you to get married to someone very nice, loving and pretty of course’ என சற்றே கிண்டலாக கூற ஆதித்யன் , வர்ஷா இருவரும் மெல்ல சிரித்தனர்.
Actually நான் கூட இது சம்பந்தமா ஒன்னு உன்கிட்ட சொல்லணும் வர்ஷா ன்னு ஆரம்பிக்க நினைத்து, ஆதித்யன் வாய் திறக்கும் போது, " நீ தானே ! நீ தானே ! என் நெஞ்சை தட்டும் சத்தம் ,..!" என்ற ரிங்க்டோன் சத்தமாக ஒலிக்க, who is this annoying others so much? என்று மனதிற்குள் நினைத்தவாறே சுற்றும் முற்றும் பார்க்க, சற்று தாமதமாக தான் அது தன்னுடைய மொபைல் என உணர்ந்து, சற்றே அதிர்ச்சியானார். சுற்றி மற்ற டேபிள்களில் இருந்தவர்களும், அதே மைண்ட் வாய்ஸோடு திரும்பி பார்க்க, என்னடா Dad இவ்ளோ ரொமான்டிக் ரிங்க்டோன் வைச்சிருக்காரே என வர்ஷா ஆச்சர்யப்பட, ரொம்பவே embarass ஆனார் ஆதித்யன். உக்கார்ந்து கொண்டே side pocket -ல் இருந்த மொபைல் எடுக்க முயல, சந்தியா அருகிலேயே உக்காந்து இருந்ததால் ஃப்ரீயாக கையை நீட்டி உள்ளே விட சிரமமாக இருந்தது ஆதித்யனுக்கு.ரிங்க்டோன் வேறு சத்தமாக தொடர்ந்து அலறிக்கொண்டே இருந்தது.வேகமாக எழுந்து அங்கிருந்து நகர்ந்தால் போதும் என நடக்க ஆரம்பித்தவாறே side pocket - ல் இருந்து மொபைலை வேகமாக உருவி எரிச்சலோடு போனை on செய்து, இந்த ரிங்க்டோன் எப்படி நம்ம போனில் வந்தது என யோசித்தவாறே அந்த இடத்தில் இருந்து அவசரமாக நகர்ந்து சென்றார்.

ஆதித்யன் நகர்வதை பார்த்த சந்தியாவுக்கோ சிரிப்பு கொஞ்சம் அதிகமாகவே வர, ஜன்னல் வழி பார்த்து, சிரிப்பை சிறிது மறைத்தாள். நேற்று registrar Office-ல் வெயிட் செய்யும் போது ஆதித்யன் மொபைலை நோண்டிக் கொண்டிருந்த சந்தியா ஆதித்யனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து தனக்கு பிடித்த இந்த ரிங்டோனை மாற்றிவிட்டு அதை பற்றி மறந்தே போய் விட்டாள். நேற்று இரவு சந்தியாவுடன் டின்னர் முதல் சரணம், பல்லவி எல்லாம் முடிக்கும் வரை மொபைலை பல மணி நேரம் switch off செய்தே வைத்திருந்தார் ஆதித்யன். காலையும் calls ஏதும் வராததால் இந்த ரிங்டோனை முதன்முதலாக தன் ஃபோனில் கேட்கும் வாய்ப்பு இப்போதே அமைந்தது. சந்தியா நினைத்து போல் ஆதித்யனுக்கு Surprise தான். என்ன அதில் கொஞ்சம் சங்கடமும் கலந்தே இருந்தது. இங்கே இருந்தால் ரொம்பவே சிரிப்போம் என்று நினைத்த சந்தியா , ரெஸ்ட் ரூம் போக முடிவு செய்து ‘I will be back Varsha’ என சொல்லி சிரித்துக் கொண்டே ரெஸ்ட் ரூம் நோக்கி வேகமாக நடந்தாள்.
ரெஸ்ட் ரூம் வந்ததும் வாய் விட்டு சிரித்து விட்டு, refresh செய்து கொண்டு கதவை திறந்து தூரத்தில் இருந்த டேபிளை பார்த்த போது ஆதித்யன் இன்னமும் வரவில்லை என்பதை உணர்ந்து மீண்டும் ரெஸ்ட்ரூமுக்குள் சென்று ஆதித்யனுக்கு call செய்தாள். ஆதித்யனோ அப்பொழுது தான் call முடித்திருந்தார். ஆதித்யன் call on செய்ததும்,
‘ Sorry ப்பா. நான் தான் நேத்து surprising ஆக இருக்கட்டும்னு ஒரு ரொமாண்டிக் டோனுக்கு மாத்தினேன். But totally forgot about it. Very sorry’ என கெஞ்சலாக பேசினாள்.
‘ It’s ok. It was embarrassing though. எங்கேயிருந்து பேசற?’
‘ From Rest room . சீக்கிரம் போயி வர்ஷாகிட்ட சொல்லிடலாம்ப்பா. எனக்கு discomfort ஜாஸ்தி ஆகிட்டே இருக்கு . Also வர்ஷாவை handle பண்றதும் டெலிகேட்டா இருக்கு.
‘ Yes. Next அதான் பேச போறோம். We will share everything before we leave the restaurant. Ok. Let’s go now’ என ஆதித்யன் சொல்லி கட் செய்து டேபிளுக்கு வர almost immediately சந்தியாவும் வர இருவரும் அமர்ந்து சொல்ல தயாரானார்கள்.
ஆதித்யன் தன் கைகளை டேபிள் மேல் நீட்டி வைத்து கொண்டு வர்ஷா முகத்தை நேரடியாக, குறிப்பாக அவள் கண்களை ஆழமாக பார்த்தார். அவர் முகத்தில் அமைதியும் நிதானமும் இருந்தது.
‘ So my bestie’s devil and darling is my own Dad’ என வர்ஷா படபடவென சொல்ல ஆதித்யன் சந்தியா இருவரும் மொத்தமாக உறைந்து போயினர். ‘And you both have been hiding it from me’.
கண்களில் நீர் துளிர்க்க சந்தியாவை வெறுப்போடு முறைத்து பார்த்த வர்ஷா ‘ I will wait near the car’ என்று சற்றே தழுதழுக்கும் குரலில் கூறி விட்டு அங்கிருந்து எழுந்து வேகமாக ரெஸ்டாரண்டை விட்டு வெளியேறினாள்.
சற்றே நிலைகுலைந்து தான் போயிருந்தார் ஆதித்யன். இத்தனை நாள் வர்ஷாவிடம் நடந்ததை சொல்லாமல் மறைத்த பாவம் , தான் சொல்ல முடிவு செய்த போதும் தன்னை சொல்ல விடாமல் தடுத்தது என்று சுளீர் என சுட்டது ஆதித்யனுக்கு.
‘ What an irony’ என மெல்ல முணுமுணுத்தார். ‘ என்னப்பா இப்படி ஆயிடுச்சு’ என சொல்லியவாறே சந்தியா அவர் தோளில் முகம் புதைத்தாள்.
*****
சந்தியா வந்தனம் ( சீசன் 1 ) அத்தியாயம் # 5:
அதிர்ச்சியிலிருந்து மீளாத சந்தியா ‘எப்படி தெரிஞ்சது? ‘ என ஆதித்யனிடம் கேட்டாள். ஒரளவு சுதாரித்திருந்த ஆதித்யன் நடந்தவற்றை ஒருவாறு ஊகித்திருந்தார். வர்ஷா அமர்ந்திருந்த இடத்தில் டேபிளின் மூலையில் இருந்த அந்த காகிதத்தை சந்தியாவிடம் கண்களாலேயே காண்பித்தார்.
அப்பொழுது தான் அதை கவனித்த சந்தியா அதை பிரித்து பார்க்க அது நேற்று தங்களுக்கு கொடுக்கப்பட்ட Marriage Certificate உடைய photocopy. ஆதித்யன் ஃபோனை வேகமாக உருவி கொண்டே நடந்து போன போது அவர் pocket-ல் இருந்து விழுந்தது இந்த காகிதம். இதை கவனித்த waiter இதை எடுத்து கொடுப்பதற்கு டேபிள் அருகே வந்த போது அங்கே இருந்தது வர்ஷா மட்டுமே.
கொஞ்சம் embarassment, கொஞ்சம் guilty feeling, கொஞ்சம் தன் மீதே கோபம், அடுத்து என்ன என்ற லேசான குழப்பம் என சில நிமிடங்கள் ஏதும் செய்ய முடியாமல் தவித்தார் ஆதித்யன்.
‘இது வர்ஷாவுக்கு எப்படி கிடைச்சது?’ என அந்த காகிதங்களை பார்த்து சந்தியா கொஞ்சம் puzzled ஆக கேட்க, ‘நான் அவசர அவசரமா ஃபோன் எடுத்து வேகமா நடந்து போனப்போ இது என் pocket-ல் இருந்து விழுந்திருக்கு. நான் notice பண்ணல. யாராவது பார்த்து வர்ஷாகிட்ட கொடுத்திருப்பாங்க I guess’.
‘ இது எப்படி உங்க shorts pocket -ல் வந்தது?’.
‘நான் தான் எடுத்துட்டு வந்தேன். வர்ஷாகிட்ட எல்லா விஷயத்தையும் முழுசா சொல்லிடனும். அப்போ இந்த marriage certificate-ம் காமிக்கனும்னு எடுத்துட்டு வந்தேன்’.
‘Evidence எல்லாம் submit பண்ண இது என்ன கோர்ட்டாப்பா?. ஏன் ஒரு file போட்டு கொண்டு வரவேண்டியதுதானே?‘ என மனைவியின் ஒருபுறத்தலிருந்து ஒரு விநாடி கடிந்து கொண்டாலும், அடுத்த விநாடியே மனைவியின் மறுபுறத்திலிருந்து சோர்ந்திருக்கும் தனது ஐம்பது வயது குழந்தையின் தோளில் கை வைத்து ‘Sorry ப்பா. நான் உங்க மேல தேவை இல்லாம கோப படறேன். நானும் ரிங்டோன் மாத்தி complicate பண்ணிட்டேன். You’re going through all this on my account only’ என ஆதித்யன் தோள் மீது தன் நெற்றியை பதித்து கண்களை இறுக்கினாள்.
மெல்ல எழுந்து bill settle செய்து காரை நோக்கி நடந்து வந்தனர். காரின் அருகில் கண்ணீர் துளிர் விட நின்று கொண்டிருந்த வர்ஷாவுக்கு அந்தக் கண்ணீர் துளிகளின் வழியே இவர்கள் இருவரும் ரொம்ப மங்கலாகவே தெரிந்தனர். ரிமோட்டாக கார் டோர் லாக்கை ஆதித்யன் ஓபன் செய்த அடுத்த நொடி வர்ஷா காரின் பின் சீட்டின் ஓரத்தில் தன்னை அடைத்துக் கொண்டு ஜன்னல் வழியே பார்வையை பதித்துக் கொண்டாள். பின் Seat-ன் மறு ஓரத்தில் சந்தியா சாதாரணமாக அமர்ந்து அடிக்கடி வர்ஷாவின் மீது பார்வையை வீசிக் கொண்டே வந்தாள். வர்ஷா தப்பி தவறி கூட சந்தியா பக்கம் பார்வையை திருப்பவில்லை.

‘வர்ஷா, It wasn’t intentional from my side all these days. Just that’ என சந்தியா சொல்லிக் கொண்டிருக்கும் போதே கையசைத்து நிறுத்திய வர்ஷா, ‘ Hiding, not sharing, not feeling guilty, breaking someone’s trust. It’s all so easy for you. Let me go through this alone.Please ‘ என முடிக்க சந்தியா அமைதியானாள். வர்ஷாவின் கோபம் நியாயமானதே என சந்தியா நினைத்தாலும் அவள் வார்த்தையில் இருந்த கடுமை ஏனோ அவளை அதிகம் Disturb செய்தது. ‘ஆதித்யனை திருமணம் செய்ததினால் கோபமா அல்லது சொல்லாமல் திருமணம் செய்ததினால் கோபமா ?’ என யோசித்தவாறே சந்தியா இருந்தாள். ஒரு understanding and doting Dad, ஒரு loving daughter இடையில் இருந்த அந்த Balanced equation இப்பொழுது தன்னால் முறிந்ததை உணர்ந்தாள். அவள் இத்தனை ஆண்டுகளாக இவர்களுடன் இருந்தாலும் இப்பொழுது தான் இந்த equation-க்குள் official ஆக வந்திருக்கிறாள். அது முறிந்து புது equation ஆக மாறும் வரை இந்த மூவர் இடையிலான chemical reaction முடியாது. அதன் final outcome எப்படியிருக்கும் என்றும் எளிதாக guess செய்ய முடியாது.
இந்த தருணத்தில் இத்தனை குழப்பங்களுக்கும் மூல காரணமாக ஆதித்யன் தன்னை நினைத்து ஒதுக்கி விடுவாரோ என திடீரென தோன்றியது சந்தியாவுக்கு. What’s this? அப்படி தன்னை வெறும் Use and throw ஆக நினைப்பவரா ஆதித்யன். No way. But still he can say something atleast to ease the tension right என ஏங்கியது மனம். உடனே ஆதித்யனின் முகத்தை பார்த்தாள். எந்த வித உணர்ச்சியும் இல்லை ஆதித்யன் முகத்தில். இது அவளை மேலும் குழப்பியது. வர்ஷாவிடம் சொல்லியதும் எப்படி handle பண்ண வேண்டும் என பல முறை மனதிற்குள் சந்தியா rehearse செய்திருந்தும் இவ்வளவு தடுமாற்றம். வருடம் முழுதும் public exam-க்கு படித்திருந்தாலும் பரிட்சை அன்று question paper கையில் கிடைத்த அந்த தருணம் ஒரு படபடப்பும் தடுமாற்றமும் ஏற்பட தானே செய்யும்?. இதில் சந்தியா எதிர்பார்க்காத வகையில் வர்ஷாவிற்கு தானாகவே தெரிந்தது ‘ Out of Syllabus’ வேறு.
மற்றொரு ஓரத்தில் வர்ஷாவோ தன் கோபம் சந்தியா மீதா அல்லது ஆதித்யன் மீதா அல்லது இருவரும் இத்தனை நாட்களாக மறைத்ததாலா அல்லது தன் Bestie தன் dad-யே date செய்ததா என தன் கோபத்தை define செய்ய முடியாமல் தவித்தாள். இதே காரில் நூறு முறையாவது மூவரும் சேர்ந்து பயணித்திருப்பார்கள். ஆனால் இப்போது அவர்கள் வெறும் மூவர் அல்ல முக்கோனத்தின் மூன்று புள்ளிகள் என வர்ஷாவிற்கு தோன்றியது. Or Am I just a third person here intruding in their lives? என பலமாகவே தன்னை தானே கேட்டு கொண்டாள். அடுத்த முறை சந்தியா காரில் ஆதித்யனோடு முன் சீட்டில் அமர்வாள். Dad will have her for company and I will be left out என சற்று குழந்தைதனமாக இந்த விஷயத்தை மேலும் காம்ப்ளிகேட் செய்தாள் வர்ஷா. இங்கே பிரச்சனை மனிதர்கள் இடமாறுவது அல்ல. இதயங்கள் இடம் மாறியிருப்பது. And Dad doesn’t seem to be bothered about my current state of mind என ஆதித்யனின் மௌனத்தை சாடியது அவள் மனம். வர்ஷா இவ்வளவு insecured ஆக யோசிப்பது நமக்கு சற்று ஆச்சரியமாக தான் இருக்கிறது. My relationship with both of them will never be the same again. Maybe I should go back immediately என முத்தாய்ப்பாக பட்டது வர்ஷாவிற்கு.
இந்த காட்சியை இயக்குனர் ஷங்கர் படமாக்கியிருந்தால் இப்படி computer graphics-ல் காண்பித்திருப்பார் என தோன்றுகிறது. சந்தியா மற்றும் வர்ஷாவை சுற்றி ஆயிரம் எண்ண ஓட்டங்கள் 360 டிகிரியிலும், பல நிறத்திலும் , Chemistry-யும் Maths-ம் கலந்து சுறுசுறுப்பாக இவர்கள் இருவரையும் வலம் வந்தன. இவர்கள் எண்ண ஓட்டம் உரசும் இடங்களில் தீப்பொறி பறந்தன. இந்த எண்ண ஒட்டம் ஏற்படுத்திய ஆற்றலின் வெப்பம் இந்த இளம் பெண்களின் சிந்தனையில் உஷ்ணத்தை ஏற்றி இவர்களை தன்னிலையற்று செய்தது. இந்த வெப்பமயமாதல் எல்லாம் பின் சீட்டில் மட்டும் தான். முன் சீட்டில் ஆதித்யனிடம் எவ்வித சலனமும் இல்லை.
சந்தியாவும், வர்ஷாவும் தங்கள் 24 வருட வாழ்க்கையில் சில அனுபவங்களை பெற்றிருந்தாலும் இந்த Tension-ஐ கையாளும் பக்குவம் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. அவர்கள் இருவரின் வயதை கூட்டினாலும் அது ஆதித்யனின் வயதை விட குறைவே. இந்த உறவுகள் தடம் புரண்டதில் ஆதித்யனுக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் இந்த தருணத்தில் ஆதித்யன் காண்பிப்பதோ ஒரு வித Withdrawal syndrome என்று சந்தியாவிற்கும் வர்ஷாவிற்கும் தோன்றியது. அவர் சந்தியா, வர்ஷா இருவருக்கும் எட்டாதவாறு தன் Shell-க்குள் தன்னை அடைத்து கொண்டு விட்டார் என சந்தியா, வர்ஷா போல் நீங்களும் நினைக்கலாம்.
ஆதித்யன் என்ன தான் நினைக்கிறார்?? பின் சீட்டின் வெப்பத்தை அவர் உணரவே இல்லையா? ஒரு catalyst ஆக இந்த chemical reaction-ஐ ஏன் influence செய்யாமல் இருக்கிறார்?
இந்த வெப்பம் ஆதித்யன் எதிர்பார்த்ததுதான். உறவுகளும் உணர்வுகளும் உரசி கொள்ளும் Chemical reaction அனேகமாக exothermic reaction தான். Definitely heat will be generated and released. அதிலும் இது வெறும் தொடக்கமே என்ற தெளிவும் இருந்தது அவரிடம். இருந்துட்டு போகட்டும். அதுக்காக அமைதியா இருந்தா பிரச்சனை தீர்ந்திடுமா? என்று நாம் கேட்கலாம். பெண்கள் ஆண்களிடம் ஆதங்கப்படும் போது பல ஆண்கள் செய்யும் முக்கியமான தவறே உடனடியாக problem solving mode-ற்கு மாறி பிரச்சனையை தீர்க்கிறேன் பேர்வழி என எதையாவது சொல்லி பெண்களை மேலும் எரிச்சல் படுத்துவது தான். இந்த மாதிரி தருணங்களில் ஆண்கள் listen செய்ய வேண்டும் என்பதே பெண்களின் உண்மையான எதிர்பார்ப்பு. ஆதித்யன் ஏதாவது சொல்ல வேண்டும் என சந்தியாவும், வர்ஷாவும் இப்போது நினைக்கலாம். ஆனால் இப்போது அவர் என்ன சொன்னாலும் இருவரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமே அது தவறாக படலாம். அதனால் அவர் அங்கு நிலவிய அமைதியை listen செய்து கொண்டிருந்தார். வீடு போய் சேரும் வரை அந்த அமைதி கொஞ்சம் சத்தமாகவே ஒலித்தது.
காலை 10:45:
Apartment பார்க்கிங்குள் கார் நுழைந்தது. ஆதித்யன் car trunk-ஐ திறந்து விட்டுவிட்டு மெல்ல எழுந்து வெளியே வருவதற்குள் வர்ஷா இறங்கினால் போதும் என அதிவேகமாக இறங்கி தனது பெரிய baggage-ஐ கஷ்டப்பட்டு எடுக்க முயற்சி செய்தாள். ஆதித்யன் அங்கே வந்து மெல்ல அவள் கையை பற்றி ‘நான் இங்கே தான் இருக்கேன். விட்டுட்டு எங்கேயும் போகலை’ என சொல்லாமல் சொல்வது போல் அழுத்தம் கலந்த பரிவோடு அவளை ஒரு பார்வை பார்த்தார். இந்த தருணத்தில் வர்ஷா ஆதித்யனின் தோள் மீது சாய்ந்து சுமூகமாகியிருந்தால், நாம் இந்த கதைக்கு முற்றும் போட்டு முடித்திருக்கலாம். ஆனால் வர்ஷாவோ அவர் கையை உதரி விட்டு ஒரு சிறிய Puller-ஐ இழுத்து கொண்டு Lift நோக்கி விருட்டென நடந்தாள். ஆதித்யனும் ஒரு பெரிய லக்கேஜை இழுத்து கொண்டு வர்ஷாவிற்கு ஈடு கொடுத்து அவளை வேகமாக பின் தொடர்ந்தார்.

அப்போதுதான் காரை விட்டிறங்கிய சந்தியாவுக்கு இதை பார்த்து வேதனை அதிகமானது. ஆளுக்கொரு லக்கேஜ் இழுத்து கொண்டு மூவரும் சிரித்து பேசி கொண்டே சந்தியாவும், வர்ஷாவும் கைகோர்த்து கொண்டே நடந்து போக வேண்டியது இப்படி சிதைந்து போனதே என்ற எண்ணம் அவளை மேலும் பலவீனமாக்கியது. இது என்ன இடம்? இந்த இடத்திற்கும் தனக்கும் என்ன தொடர்பு? Where have I come and why did I even come here? என்ற மிகவும் அடிப்படையான கேள்விகள் தன்னை துளைக்க, அந்த நூற்றுகணக்கான கார்களுக்கிடையில் தொலைந்து போனவளாய் தனியாக அங்கு நின்றாள் சந்தியா.

*****
சந்தியா வந்தனம் ( சீசன் 1) அத்தியாயம் #6 :
இன்னும் ஒரு லக்கேஜ் காரில் இருந்தாலும், அதை காவல் காப்பதற்கெல்லாம் சந்தியா காரின் அருகே நிற்கவில்லை. ஆதித்யன் வந்தால் தனியாக பேசி கொண்டே போலாமே என்றும் நினைக்கவில்லை. மாறாக ஆதித்யன் வந்து அடுத்து என்னவெல்லாம் நடக்குமோ என்ற apprehension சற்று அதிகமாகவே இருந்தது. அதனால் அந்த moment வராதவரை status quo நீடீக்கட்டும் என தோன்றியது சந்தியாவிற்கு. முக்கியமாக, வர்ஷாவுக்கு உரிமை இருப்பதால் தானே அவள் வேகமாக அபார்ட்மெண்ட் நோக்கி செல்ல முடிந்தது. அது இல்லாததால் தானே தான் இங்கு தயங்கி நிற்கிறோம் என்ற சிந்தனை அவளது Discomfort-ஐ அதிகரித்தது. இப்படி யோசித்தவாறே சந்தியா மெல்ல நடந்து lift அருகில் வந்து lift button அழுத்தினாள். Instead of staying here, Why can’t I simply go to my own place? Atleast that’s my place. May be Varsha will feel better. இங்கே இருந்து மேலும் misunderstanding வருவதற்கு பதில் நம்ம ரூமுக்கு போயிடலாம். ஆட்டோ பிடிச்சிக்கலாம். Two Wheeler அப்புறம் எடுத்துக்கலாம். ஆதித்யனுக்கு Message அனுப்புவோம் என பிளான் பண்ணி முடிக்க லிப்ட் கதவு திறந்தது. சந்தியாவால் உள்ளே தான் போக முடியவில்லை. லிஃப்டில் நின்று கொண்டிருந்தது ஆதித்யன்.
அங்கே நின்று கொண்டிருந்த சந்தியாவை ‘ நீ இன்னுமா பார்க்கிங்கில் இருக்க? ‘ என்ற அர்த்தத்தில் பார்த்த ஆதித்யன் வேறெதுவும் சொல்லாமல் மற்றுமோர் லக்கேஜை எடுக்க கார் நோக்கி நடந்தார். இப்போ இன்னும் அதிகம் குழம்பினாள் சந்தியா. So what. I can still tell him and leave. He will understand என முடிவெடுத்தாள் சந்தியா.

Lift பட்டன் அழுத்தி அவள் வெயிட் பண்ண ஆதித்யன் அங்கு வந்து சேர்ந்தார். அவர்களுக்கு இடையே ஒரு செயற்கையான இடைவெளி இருந்தது. காரின் மௌனம் தொடர்ந்தது. எப்பொழுது வெளிவருவது என அவளின் கண்ணீர் துளிகள் Waiting -ல் இருந்தது. Lift வந்து கதவு திறக்க இருவரும் ஏறி கதவு மூடியதுமே ஆதித்யன் சந்தியாவை பற்றி இழுத்து தன்னோடு சேர்த்து தன் இதழை அவள் இதழ் மீது அழுத்த, இதை சற்றும் எதிர்பாராத சந்தியா சற்று திக்குமுக்காடி தான் போனாள். சில விநாடிகளில் ஆதித்யனின் முழு அரவணைப்பிற்கு சந்தியாவும் ஈடு கொடுக்க waiting-ல் இருந்த கண்ணீர் ஆனந்த கண்ணீராக சந்தியாவின் கன்னத்தில் துள்ளி குதித்தது. மௌன ராகம் பாடி கொண்டிருந்த ஆதித்யன் திடீரென சந்தியா சற்றும் எதிர்பாராமல் பாடிய சந்தியா ராகம் ‘மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே,..’ என சந்தியாவின் இதயத்தில் ஒலித்தது. இந்த டைமிங் டூயட் எல்லாம் சில விநாடிகளே!! Eigth floor-ல் lift நிற்பதற்கு 1/4 நொடிக்கு முன் சந்தியாவை Release செய்த ஆதித்யன் relax ஆனார். சந்தியா தான் balance செய்து நிற்க கொஞ்சம் சிரமப்பட்டாள். ‘ You கள்ளா ! ‘ என செல்லமாக மனதில் திட்டியவாறே கொஞ்சினாள்( அல்லது கொஞ்சியவாறே திட்டினாள்).
Lift-ன் கதவு திறந்தவுடன் சந்தியாவின் வாழ்க்கை பாதையும் நல்ல வெளிச்சமாகவே தெரிந்தது அவளுக்கு. ஒரு அரை நிமிடத்துக்கு முன் தன் ரூமுக்கே போவது பற்றி சந்தியா யோசித்தது உங்களுக்கு வேண்டுமானால் ஞாபகம் இருக்கலாம். சந்தியாவுக்கு அதெல்லாம் இப்போது சுத்தமாக ஞாபகமே இல்லை. ஆதித்யனை பொறுத்தவரை சந்தியா விஷயத்தில் அவருக்கு குழப்பமே இல்லை. சந்தியாவின் மனநிலையை ஓரளவு யூகித்த ஆதித்யன் தன் வாழ்க்கையில் அவள் நிரந்தரமானவள் என்பதை தெளிவுபடுத்த சரியான தருணத்திற்கே காத்திருந்தார். சந்தியாவின் இதழை மென்று அவர் உதிர்த்த ‘Munch Dialogue’ செம impactful என்றே தோன்றுகிறது.
Lift -ல் இருந்து ஆதித்யனும் சந்தியாவும் வெளியேறியதை பார்த்த அங்கே நடந்து போய் கொண்டிருந்த, retired ஆகி இருபது வருடங்கள் ஆன ஒரு பெரியவர் ஆதித்யனிடம் , ‘ Mr. Aathithyan , Was that Varsha who entered your house? ‘ என கேட்க, ஆதித்யனும் சற்று பெருமையாக ‘ Yes. Varsha is here for vacation’ என கூறினார். பெரியவரும் சளைக்காமல் ‘ Who is this girl ?’ என சந்தியாவை பார்த்து கேட்க, தன்னை ஒரு 11th std பொண்ணு ரேஞ்சுக்கு கேட்ட பெரியவரை சந்தியா சற்றே முறைக்க, ஆதித்யன் கூலாக சந்தியாவின் தோளில் கைபோட்டு ‘She is my wife Sandhiya ‘ என தயங்காமல் கூறினார். சந்தியா இப்போ கொஞ்சம் கெத்தாக ‘ Hello. I’m Mrs. Sandhiya Aathithyan.’ என Introduce செய்து கொண்டாள். சந்தியாவின் இளமை தோற்றத்தை பார்த்து ஷாக்கான பெரியவர் ‘Then Varsha ?! ’ என சற்றே சங்கோஜத்தோடு சந்தேகமாக கேட்க, ‘She is my daughter ofcourse’ என தெளிவாகவே பதில் சொன்னாள் சந்தியா. ‘Oh I see’ என ரொம்பவே Confuse ஆகி நம்ம கண்ணில் தான் கோளாறா இல்லைனா நிஜமாவே சோப்பு விளம்பரத்தில் வருவது மாதிரியா என புரியாமல் நகர்ந்தார் பெரியவர்.
*****
வர்ஷா மூன்று வருடங்களுக்கு பிறகு இந்த வீட்டிற்குள் நுழையும் போது ‘இங்க வராமலேயே இருந்திருக்கலாம்’ என்ற மனநிலையோடு தான் நுழைந்தாள். தன் அம்மா வித்யா ஆதித்யனின் நினைவுகள் அவளை சூழ்ந்தன. அங்கே இருந்த ஒவ்வொரு பொருளிலும் அவளது அம்மாவின் ஏதாவது ஒரு நினைவு எழுதப்பட்டிருந்தது. இந்த நினைவுகளின் வலியில் இருந்து விடுபட தானா தன் தந்தை ஆதித்யன் சந்தியாவை நாடினார்? என்ற கேள்வி தானாக வந்து விழுந்தது. தன் தாயின் நினைவு வந்த அடுத்த நொடி சந்தியாவும் நினைவில் வருவது அவளுக்கு எரிச்சலூட்டியது. அவள் வீட்டில் நுழைந்ததுமே Shoe Rack-ல் சில ஜோடி Female Sandals and Slippers இருந்தது. அருகில் இருந்த Cushion மீது கொஞ்சம் சின்ன Size helmet -ம், அதனுள் Head Scarf Bandana-வும் இருந்தது. இதெல்லாம் யாருடைது என guess செய்வது சுலபம் தான் வர்ஷாவிற்கு. Dining table chair -ல் இருந்த Laptop bag (மற்றும் Laptop) தான் சந்தியாவிற்கு Gift ஆக கொடுத்தது தான் என உடனே வர்ஷா லிங்க் செய்தாள். சந்தியா Work from Home கூட இங்கே இருந்து தான் போல என நினைத்தாள். தனது Puller-ஐ இழுத்து கொண்டு தனது அறைக்கு போவதற்கு முன் Balcony அவள் கண்ணை பறித்தது.அங்கே சந்தியாவின் ஆடைகளும் ஆதித்யனின் ஆடைகளும் ரொம்பவே நெருக்கமாக உரசி கொண்டு Sun Dry ஆகி கொண்டிருந்தன. இவங்க Working Together from Home போல இருக்கு என தெளிவாகவே புரிந்தது வர்ஷாவிற்கு. இருந்தாலும் வர்ஷாவின் மூளையில், ஏதாவது ஒரு மூலையில் இவர்கள் எதையும் மறைக்க முயற்சிக்கவில்லை என்பது தோன்றாமலா இருந்திருக்கும்??

வீட்டு வேலை, சமையல் வேலை, Car cleaning என எதற்கும் ஆள் வைக்காமல் தன் கையே தனக்குதவி என்ற ஏழாங்கிளாஸ் பாடத்தை ரொம்பவே கெட்டியாக கடைபிடிப்பவர் ஆதித்யன். அவரது அந்த Reputation-ஐ ரொம்பவே பெருமையாக நினைப்பாள் வர்ஷா. இப்போழுது கூட வீடு அப்பழுக்கில்லாமல் Clean and neat ஆகவே இருந்தது. அனால் இப்போது ஆதித்யனுக்கு ‘கை கொடுக்கும் கையாக’ சந்தியாவும் அங்கேயே இருப்பது அவரது அந்த ரெக்கார்டில் ஒரு கீறலாக வர்ஷாவிற்கு பட்டது. எப்படியோ தனது அறையில் நுழைந்து கதவை சாத்தினாள் வர்ஷா.
அவள் மூன்று வருடங்களாக தங்காத அந்த அறை எப்படி இருந்தது? இரண்டு வாரங்களுக்கு முன் ஆதித்யனே தன் கையால் அதை பச்சை நிறத்தில் repaint செய்திருந்தார். புது Bedspread நீட்டாக bed-ன் மேல் போர்த்தப்பட்டிருந்தது. அவளது புத்தகங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததன. ஒரு Shelf -ல் அவளுக்கு தேவையான Toiletries மற்றும் Cosmetics அத்தனையும் இருந்தன. இந்த Toiletries எல்லாம் சில நாட்களுக்கு முன் ஆதித்யன் Shelf இல் அடுக்கி வைத்து கொண்டிருந்த போது வேடிக்கை பார்த்து கொண்டருந்த சந்தியா, ‘ நல்ல வேளைப்பா. பொண்ணுக்கு Sanitary napkin எல்லாம் வாங்கி வெச்சு ஓவரா Scene போடாம அடக்கி வாசிச்சீங்களே. சந்தோஷம்’ என வேடிக்கையாக சலித்து கொண்டாள். இன்னொரு Shelf -ல் புதிய Co-Optex Towelகள் அரை டஜன் இருந்தது. அதற்கு அருகில் டிஸைன் டிஸைனாக புதிய bed spread மற்றும் blankets சிலதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததன. கீழ் shelf -ல் ஒரு டஜன் Bottled water இருந்தது. Bed lamp அருகில் புது Battery போடப்பட்ட Air Conditioner remote இருந்தது. அதன் அருகில் புதிய Thermos water bottle இருந்தது. ‘உங்க பொண்ணு என்ன புதுசா ஸ்கூலுக்கா போகப்போறா இப்படி புது Water bottle எல்லாம் வாங்கறதுக்கு?. ஏன் School bag, Pencil box வாங்கறது தானே’ என இரண்டு நாட்களுக்கு முன் கடையில் சந்தியா ஆதித்யனிடம் கிண்டலாக கேட்டாள். அந்த ரூமில் வர்ஷாவின் கட்டளைகளை நிறைவேற்ற ஆதித்யனின் பிரதிநிதியாக அந்த Bedlamp டேபிளின் மூலையில் காதுகளை தீட்டி கொண்டு தயாராக இருந்தது Alexa Echo Device. இதை பார்த்து tension ஆன சந்தியா ‘ Alexa வேறயா!! ரொம்ப தான். முடியலைப்பா’ என சொல்ல, அதை கேட்டு ‘ I don’t understand வேறயா!! ரொம்ப தான். முடியலைப்பா’ என கறாராக பதிலளித்தது Alexa-வின் பெண் குரல். ‘ Including Alexa you have to listen to three women in this house Mr. Aathithyan ‘ என பரிதாபப்பட்டாள் சந்தியா.
இப்படி ஆசை ஆசையாய் எல்லாம் வாங்கி வர்ஷாவின் ரூமை ஒரு ஸ்டார் ஹோட்டல் ரூம் போல் பக்காவாக செட் செய்திருந்தார் தாயும் ஆனவரான ஆதித்யன். தமிழில் உள்ள இந்த ‘தாயுமானவர்’ என்ற சொல்லுக்கு இணையான ஆழமான சொல் நமக்கு தெரிந்து ஆங்கிலத்தில் இல்லை. Single Dad , Motherly என shallow வாக தான் சொல்ல முடியும். வர்ஷா ஆதித்யனை ‘தாயும் ஆனவராக’ பார்த்தாளா அல்லது வெறும் Single Dad ஆக பார்த்தாளா என்பதை காலம் தான் நமக்கு சொல்ல வேண்டும்.
தனது அறையில் எதையும் appreciate செய்யும் மனநிலையில் வர்ஷா இல்லை. அங்கே சுவற்றில் இருந்த அந்த நான்கு போட்டோக்களை மட்டும் ஒரு விநாடி பார்த்தாள். மேல் முனையில் வர்ஷா, வித்யா மற்றும் ஆதித்யன். இடது புறத்தில் வித்யா மற்றும் வர்ஷா. வலது புறத்தில் வர்ஷா மற்றும் ஆதித்யன். கீழே சந்தியாவும் வர்ஷாவும். ஒரு விநாடி இந்த Configuration பெரிதாக மாறவில்லை என பட்டது. மறுவிநாடி அது தலை கீழாக மாறியதாகவும் தோன்றியது. இப்படி மாறி மாறி தோன்றிய அந்த தருணம் Jetlag, Stress, confusion எல்லாம் கலந்து உறக்கத்தின் விளம்பில் இருந்தாள் வர்ஷா.
*****
சந்தியா வந்தனம் ( சீசன் 1) அத்தியாயம் # 7 :
சந்தியா சில முறை வர்ஷாவின் அறைக்கு சென்று அவள் விழித்து விட்டாளா என check செய்தவாறே இருந்தாள். கொஞ்ச நேரம் அவள் அருகில் மெத்தையிலேயே அமர்ந்து laptop-ல் ஏதோ செய்து கொண்டிருந்தாள். அடிக்கடி அவள் உறங்குவதையே பார்த்து கொண்டிருந்தாள் . காரில் தான் ‘Insecured’ ஆக feel செய்து தன் ரூமிற்கே போக வேண்டும் என்றெல்லாம் exaggerate செய்ததை எண்ணி தன் மீதே எரிச்சல் அடைந்தாள். Should be more matured என பலமுறை நினைத்து கொணடாள். ஆதித்யனும் ஏதோ பிஸியாக செய்து கொண்டே இருந்தார். வீட்டில் நுழைந்ததிலிருந்து ஆதித்யனும், சந்தியாவும் ‘சாப்பிடலாமா’ என்பதை தவிர்த்து எதுவும் பேசி கொள்ளவில்லை. அந்த அமைதி இருவரின் ஒற்றுமையில் விளைந்தது. ஒரே மெத்தையில் ஓருடல் இரு உயிர்களாக பிணைந்திருக்கும் நிலையிலும் இருவருக்கும் தனி தனி Personal Space உண்டு என்ற தெளிவு அனுபவ ரீதியாக ஆதித்யனுக்கு உண்டு. அந்த எண்ணம் இயல்பாகவே சந்தியாவுக்கு உண்டு. Between them, their personal space was not granted by their partner. It’s existence was simply recognized by each other.
சுமார் 4:30 மணியளவில் balcony-க்கு இரண்டு cup Masala Chai யோடு வந்தாள் சந்தியா. அங்கே ஆதித்யன் தரையில் அமர்ந்து தனது சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டி கொண்டிருந்தார். ஒரு புன்முறுவலோடு செய்து கொண்டிருந்ததை Pause செய்து grease படிந்த கைகளை துடைத்து கொண்டு சந்தியாவிடமிருந்து Cup-ஐ வாங்கி கொண்டார். இருவருக்கும் பழக்கப்பட்ட அந்த மௌனம் தொடர்ந்தது. இருவரின் பார்வையும் ஆங்காங்கே Intersect ஆகியது. ஆதித்யனின் அந்த மௌனத்திலும் அவரின் பார்வையிலும் ஒரு சிறு கண்டிப்பும் , ஒரு பெரிய ஏக்கமும் இருந்தது. அது சந்தியாவுக்கும் புரிந்தது. அந்த பதினைந்து நிமிடத்தின் முடிவில் ஆதித்யனின் Cup-ஐ வாங்கி கொண்ட சந்தியா, ‘ I felt insecured in the car. Should have trusted your silence’ என்றாள். ‘It’s ok’ என்ற அர்த்தத்தில் லேசான புன்னகையோடு தலையசைத்தார் ஆதித்யன்.

‘And don’t worry. வர்ஷா எழுந்ததும் கண்டிப்பா பேசுவா’ என கூறி ஆதித்யனின் தலையை லேசாக கோதிவிட்டு நகர்ந்தாள். இம்முறை தனது மௌனத்தை சந்தியா சரியாக புரிந்து கொண்ட திருப்தி ஆதித்யனுக்கு. மௌனமாக நம் Spouse அல்லது partner இருந்தால் நம்மோடு பேசவில்லை தான். ஆனால் Communicate செய்கிறார்கள் தானே?
வர்ஷாவுடன் time spend பண்ண வெயிட் செய்து கொண்டிருந்த சந்தியாவுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இரவு மணி 9:30 வரை வர்ஷா நிஜமாகவே உறங்கிக் கொண்டிருந்தாள். வர்ஷா எழுந்த போது தன் அறை இருட்டாக இருந்தது. எழுந்து மவுத் வாஷ் செய்து ஹாலுக்கு வந்த போது dining table hot pot-ல் தோசையும் மிளகாய்பொடி எண்ணெயும் இருந்தது. ‘ அப்பா சமையல் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு’ என நினைத்த அடுத்த கணமே இது அப்பா தான் cook பண்ணினாரா என்ற சந்தேகமும் சேர்ந்தே வந்தது. சந்தியா இங்கே தான் இருக்காளா என உறுதி படுத்த சுற்றும் முற்றும் பார்க்க நாம் முன்பே சொன்ன சந்தியாவின் Belongings எல்லாம் We belong here ‘ என வர்ஷாவிடம் சொல்லாமல் சொன்னது. ஆதித்யனின் பெட்ரூம் கதவு almost சாத்தியிருந்தது. சந்தியா உள்ளே இருக்கிறாள் என எளிதாகவே guess செய்தாள் வர்ஷா. எத்தனையோ நாட்கள் தன்னுடன் தங்கியிருந்த போது சந்தியா தனது பெட்ரூமில் தன்னுடன் தூங்குவாள். Now she has easily shifted to Dad’s bedroom என நினைக்கும் போது ஓர் இனம் புரியாத உணர்ச்சி ஏற்பட்டது. அந்த இரவின் இருட்டில், பெரிய living room-ன் தனிமையில் அந்த உணர்ச்சி இன்னும் Multiply ஆனது.
மெல்ல தோசையை மென்று கொண்டே தான் third year college tour முடித்து வந்ததும் தன் அப்பாவிடம் ‘ I had sex for a first time’ என கூறிய போது ‘ It’s a natural urge for two adults to have sex. And it is legal too. But make sure you take all precautions in every way’ என உணர்ச்சிவசப் படாமல் dignified ஆக ஆதித்யன் பதில் சொன்னது ஞாபகம் வந்தது. Ofcourse Sandhiya and Dad are two adults and they can have a natural urge but again did Sandhiya simply use me as a context to meet my dad and spend time with him. Did she really consider me as her bestie என யோசிக்கத் தொடங்கிய போது சற்றே அழுகை வந்தது.
அப்போது வர்ஷா என குரல் கேட்க, திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் வர்ஷா.
‘Shall I join you?’, கேட்டது சந்தியா.
வர்ஷா தலையாட்டி சந்தியாவின் முகத்தை பார்க்காமல் yes சொன்னாள்.
‘ You need anything else for dinner?’. சந்தியா சாதாரணமாக கேட்டாலும், தன் வீட்டில் தன்னையே உபசரிப்பது சந்தியாவின் புதிய status-ஐ எடுத்து காட்டுவது போல் வர்ஷாவிற்கு பட்டது.
‘ I’m good.’
‘ Can we talk for sometime?’.
‘ Are there any more surprises? ‘.
‘ வர்ஷா, உனக்கு நல்லாவே தெரியும். Generally I’m not very comfortable sharing anything about myself. That’s why I’m not even in Social Media. இந்த விஷயத்தை எப்ப share பண்ணியிருந்தாலும் misunderstanding வரலாம். Better Logical end வரை போகட்டும்ன்னு தான் சொல்லலைப்பா. May not be convincing from your end. But that’s what it is.’
‘ You can effortlessly conceal truth about yourself and feel no remorse about it.’ என வர்ஷா சொல்லியபோது கொஞ்சம் sarcasm இருக்கத்தான் செய்தது.
‘ Not sharing and concealing are two different things ப்பா. நான் share பண்ண மாட்டேன். I grew up like that. உனக்கு seventeen years வரை share பண்ண parents ரெண்டு பேரும் இருந்தாங்க. You still have a very understanding Dad. But நான் நாலு வயசா இருந்தப்போ lost my mom. நாலு வயசில் இருந்து I grew up in a hostel. I used to meet Dad once or twice in a year. Summer vacation கூட ஹாஸ்டலில் இருந்திருக்கேன். Till Dad passed away last year நான் அவர் கூட என் life பூரா பேசின மொத்தத்தையும் பத்து tweet-ல் Fill பண்ணிடலாம். அப்போ share பண்ணனும்னு ஆசை இருந்தப்போ யாரும் இல்லை. I gradually lost that need to share ப்பா. ‘ இதை சொல்லிவிட்டு சந்தியா சற்றே அமைதியானாள். தன்னை பற்றி தவறாக நினைப்பவர்களிடம் தன்னை பற்றி சொல்லி justify செய்து கொள்ள வேண்டும் என நினைத்ததே இல்லை. இது கொஞ்சம் புதுசாக இருந்தது. ரொம்பவே கஷ்டமாகவும் இருந்தது.
சந்தியா தொடர்ந்தாள். ‘ நீ ரெஸ்டாரண்டில் பேசும் போது Periods பத்தி சொன்ன. No woman is fullly comfortable with that. When I had my periods for the very first time, நான் என்னன்னு சரியா புரியாம யாருகிட்ட சொல்றதுன்னு தெரியாம ஸ்கூல் போக முடியாம ஹாஸ்டல் பெட்ல படுத்து அழுதுட்டு இருந்தேன். என் ஹாஸ்டல் clean பண்ணற lady தான் நான் அழறதை பார்த்து help பண்ணினாங்க. Nice soul. Periods னாலே எனக்கு அந்த பன்னிரண்டு வயசு பொண்ணு யாருமில்லாம அழுதுட்டிருந்தது தான் ஞாபகம் வரும். Certain things I go through every day. Certain things every month. That’s all ‘ என சொல்லி முடிக்கும் போதே குரல் தழுதழுக்க கண்ணீர் துளிர்த்தது.
சந்தியா தன்னையே recover செய்து கொண்டு ‘ Movies-ல ஹீரோ கொலை கொள்ளை அடிதடி எல்லாம் பண்ணிட்டு ஒரு flashback சொல்லி justify பண்ணற மாதிரி நானும் flashback சொல்றேன். Honestly I don’t see any need to justify myself or express regret. My conscience is clear ப்பா’.
‘ Conscience is clear? Aren’t you ashamed? ‘
‘About what?’
‘ About marrying your bestie’s Dad’.
சந்தியாவிற்கு சற்றே அதிர்ச்சியானது. வர்ஷாவை முற்போக்கு சிந்தனையுடையவளாய் தான் இந்நாள் வரை பார்த்திருந்தாள். ‘ ப்பா , please புரிஞ்சுக்கோ. Varsha’s Bestie did not fall in love with Varsha’s Dad. Sandhiya fell in love with Aathithyan. முறை பையன் , மாமன் பையன் , Bestie Dad மாதிரி context -ல் I don’t have faith ப்பா. Aathithyan and Sandhiya have their own lives too ‘ என அழுத்தந்திருத்தமாக சொன்னாள்.

வர்ஷா சற்றே உரத்த குரலில் ‘ Please don’t oversimplify it. I always wanted him to get married. I’m also a stakeholder in it.’
‘அப்போ நீ கல்யாணம் நடந்திருக்குன்னு சந்தோஷம் தானே படனும்?. What are you upset about?’
‘ என்னன்னு சந்தோஷபடறது? Four years யாரும் சொல்லலை. நான் வர்றதுக்கு just one day முன்னாடி you get married to my Dad. You both thought I will be a nuisance at your wedding right.’
‘ I thought this whole wedding thing is a nuisance. I considered it as yet another visit to a government office or just a legal procedure. But I was wrong. Signing the papers has given me a sense of belongingness which I never experienced before. இப்போ ஒரு identity கிடைச்சது போல் இருக்கு. First time என்னை பத்தி சொல்லிக்கனும்னு தோனுது. I used to mock at தாலி சென்டிமெண்ட் in movies. இப்போ இந்த wedding ring ரொம்ப பிடிச்சிருக்கு. இதை அடிக்கடி தொட்டு பாத்துக்கறேன். No wonder women all over the world cherish these wedding symbols.Maybe I was naive.Glad that Aathithyan insisted on wedding. ‘
‘ You found yours but I lost my sense of belongingness completely . My Bestie used to be exclusively mine. But now she is my Dad’s extension. நான் அவள் மேல வெச்சிருத்த trust போயிடுச்சு. She is no longer in my bedroom. Instead of chatting with me the whole night she is ...with my dad. My Bestie can become my Dad’s wife. But my Dad’s wife cannot be my Bestie anymore . I lost my mom earlier. I’ve lost you. I lost my Dad to you . Lost everything and I’m all alone. I will have ..to....manage alone‘ என சொல்லிக் கொண்டே இரண்டு கைகளையும் வர்ஷா முகத்தில் வைத்துக் கொண்டு அழத்தொடங்கினாள்.
கடைசி வரியை கேட்டதும் ‘ ஏன்ப்பா பழைய பாக்யராஜ் பட டையலாக் எல்லாம் சொல்லி குழப்பிக்கற?’. என சொல்லிக் கொண்டே மெதுவாக எழுந்து வர்ஷா அருகில் அமர்ந்தாள். ‘ I was never your exclusive property. And I will never be Aathithyan’s exclusive property. I’ve not signed any lease with your family ப்பா. It’s demeaning to me. இவ்வளவு வருஷமா நீ சொல்றதை பொறுமையா கேட்டுட்டு இருக்கறதால நான் உன் chatbot ன்னு நினைச்சியா? I’m nobody’s extension. நீ சொன்னதை ஒண்ணு கூட நான் ஆதித்யன் கிட்ட share பண்ணினதில்லை and vice versa. I choose my bedroom and I don’t feel obligated to one .’ சந்தியா முதன் முறையாக கோபமடைந்தாள்.
‘ Whatever. I’m all by myself. That’s it’. டேபிளில் முகம் புதைத்து அழுதவாறே ‘ Leave me alone Sandhiya . Go back to wherever you belong to ‘
தான் மிக முக்கியமாக கருதிய இந்த உரையாடல் இப்படி முடிந்ததில் வருத்தத்தோடும் வர்ஷாவின் நிலையை பற்றிய கவலையோடும் உறங்க சென்றாள். ஆனால் உறங்க தான் முடியவில்லை.
*****
சந்தியா வந்தனம் ( சீசன் 1) அத்தியாயம் #8 :
தான் மிக முக்கியமாக கருதிய இந்த உரையாடல் இப்படி முடிந்ததில் வருத்தத்தோடும், வர்ஷாவின் நிலையை பற்றிய கவலையோடும் உறங்க சென்றாள். மறுநாள் காலை எழுந்த போது ஆதித்யன் அருகில் இல்லை. அனேகமாக Jogging போயிருப்பார் என ரெடி ஆனாள்.Office கிளம்பும் போது ஆதித்யன் ஹாலில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். தனது laptop bag-ல் எதையோ எடுத்து வைத்துக் கொண்டே ஆதித்யனிடம். ‘நீங்க work from home தானே?. Cook பண்ணிடுவீங்கல ?’ என கேட்டு தானே நிம்மதி அடைந்து கொண்டாள்.
‘ஆம்’ என தலையாட்டினார் ஆதித்யன்.
‘இன்னிக்கு Resignation submit பண்ணினா ok தானே? ‘ என எதற்கும் confirm செய்து கொண்டாள் சந்தியா. இன்னும் ஓரிரு மாதத்தில் Australia shift ஆக வேண்டுமென்றால் இப்போது resign செய்தால் தான் சரியாக இருக்கும் என்ற கணக்கு சந்தியாவுக்கு.
👍 என கையை உயர்த்தி காண்பித்தார் ஆதித்யன்.
‘I didn’t make much headway yesterday ப்பா. I’m sure you will speak to Varsha today’ என மெதுவாக சொல்லிவிட்டு ஆதித்யனின் தலையை கோதிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு படு வேகமாக ஆதித்யன் நெற்றியில் முத்தமிட்டு ஒரு மெல்லிய புன்னகை உடன் சென்ற சந்தியா தனக்கு பிடித்த cotton புடவையில், நெற்றி வகிட்டில் சின்னதாக குங்குமத்தோடு சற்றே பூரிப்போடு இருந்தாள்.

ஒரு பத்து மணியளவில் எழுந்த வர்ஷாவுக்கு அன்று பழைய comfort feel திரும்ப வந்திருந்தது. காரணம் ஆதித்யன் மட்டுமே வீட்டில் இருந்தது. சந்தியா வீட்டில் இல்லை என்று உறுதி செய்து கொண்ட வர்ஷா, கிச்சனில் நுழைந்த போது ஆதித்யன் மிகுந்த மும்முரத்தோட சமைத்து கொண்டருந்தார்.
‘Are you on vacation today?’.
‘Nope. I’m working from home.’ என சலனமில்லாமல் சொன்னார். Work from home என்றால் 9 to 5 தொடர்ந்து 8 மணி நேரம் laptop முன் அமர வேண்டும் என்பதில்லை. முடிக்க வேண்டிய வேலையை timeline படி செய்ய வேண்டும். அவ்வளவே.
Coffee Pot-ல் வர்ஷாவிற்காக வைத்திருந்த சூடான காஃபியை வர்ஷாவிடம் கொடுத்து விட்டு ‘Hope you had a good sleep’ என்றார்.
‘ I thought Sandhiya was like another daughter to you’ என சம்பந்தமே இல்லாமல் வர்ஷா கூறிய பதிலில் சற்றே முகம் சுளித்தார் ஆதித்யன்.
‘நான் அப்படி நினைக்கலைன்னு you would have realized by now’ என எந்த expression-ம் இல்லாமல் பதிலளித்தார் ஆதித்யன்.
‘So you felt the need for a younger Woman’ என வர்ஷா சொன்ன போது need என்ற வார்த்தை விரசத்தின் வாடையை கிளறுவதாக பலருக்கு படலாம். அது ஆதித்யனுக்கு எப்படி பட்டது?
‘ I definitely like Sandhiya as my Companion’ என கூறி ‘need’ என்பதற்கு பதிலாக ‘ Companionship’ என வாதத்தின் தரத்தை உயர்த்தினார். ‘ It’s not the journey. It’s not the Destination. It’s the company that matters’ என்ற உண்மை வாழ்க்கையில் ஒரு புரிதலான துணைக்கு ஏங்குபவர்களுக்கும், தேடுபவர்களுக்கும் நன்றாகவே தெரியும். Companionship என்பது friend++ or spouse++ or partner++. அது இல்லாத போது வாழ்க்கை சுமையாகிறது. சாதாரண வலியும் வேதனையாகிறது. வர்ஷாவிற்கு ஆதித்யனின் பதில் அவளது தனிமையை highlight செய்வது போல இருந்தது.
‘Why did you hide this from me Dad? Were you ashamed ? ‘
இப்படி ஒரு accused போல் வர்ஷா கேட்டது அவரது மௌனத்தின் கனத்தை அதிகமாக்கியது. வர்ஷாவிடம் தான் இத்தனை நாள் காட்டிய gentleness, decency, respect for her privacy போன்ற எந்த courtesy-யும் தனக்கு வர்ஷா காட்டவில்லை என்பது வருத்தமளித்தது.
‘Have I ever probed your private affairs Varsha? என்று கேட்ட ஆதித்யனின் குரலின் உறுதியில் லேசான ஆதங்கம் இருந்தது.
‘அப்போ 2 days wait பண்ணி நான் வந்ததும் கல்யாணம் பண்ணிருக்கலாமே? I didn’t matter right?’ என மீண்டும் குத்தினாள் வர்ஷா.
ஆதித்யனின் மௌனம் அங்கே பலமாக ஒலித்தது. அந்த நெருடல் அவருக்கும் இருந்தது. சில நிமிடங்களுக்கு பிறகு ‘ Maybe we should have waited. Informed you before the wedding. Even if you were unhappy, atleast you would have been less disappointed. I’m sorry dear’ என்று ego ஏதுமில்லாமல் வர்ஷாவின் கையை பற்றி apologetic tone-ல் வர்ஷாவின் முகத்தை பார்த்து ஆதித்யன் கூறியதில் இருந்த genuineness வர்ஷாவிற்கு புரிந்தது.
சற்றே இளகிய வர்ஷா, ‘ No Dad. நான் இப்படி கேட்டிருக்க கூடாது. ஒரு வேளை நான் US-லேயே உங்க age-ல் ஒருத்தரை கல்யாணம் பண்ணிட்டு just inform மட்டும் பண்ணியிருந்தா நீங்க இப்படி Scene create பண்ணாம அதை accept பண்ணியிருப்பீங்க தானே?’ என்றாள்.
வர்ஷா இப்படி சட்டென realize செய்ததில் ஆதித்யனுக்கு மகிழ்ச்சியை விட பெருமிதமாக இருந்தது.
' But... ', தொடர்ந்த வர்ஷா I’ve decided to be a single mom and now I’m carrying my baby ன்னு தெரிஞ்சா என்னை accept பண்ணிப்பீங்களா Dad?’
ஆதித்யனுக்கு ஒரு விநாடி முன் வர்ஷா இளகிய போது Anti Climax ஆக தோன்றியது இப்போது எதிர்பார்க்காத Climax ஆக வெடித்தது.
‘How about Viktor, your Russian Boy Friend’
‘ He is the real Dad. But he has disowned the baby. He says he is not responsible’ என விம்மினாள் வர்ஷா. ‘ I can prove his paternity. But I don’t care Dad. He doesn’t deserve to be my Child’s Dad’.
ஆதித்யன் சற்றே மெல்லிய குரலில், ‘ Are you sure you want the baby?’
‘As much as you want me Dad’ என வர்ஷா கூறிய அடுத்த நொடி வர்ஷாவை embrace செய்தார் ஆதித்யன்.
‘How many weeks?’
‘Almost 8’
‘ ஏன் travel பண்ணின ? You could have waited’
‘ I wanted to be with you Dad . I had anyway planned this trip in advance’.
‘ ஏன் இவ்வளவு நாள் சொல்லலை?’
‘ Why did you hide it? Were you ashamed ன்னு நான் கேட்டது உங்களை மட்டுமில்ல. என்னையும் சேர்த்து தான்.
தனி ஒருவனாக kitchen-க்கு சென்ற ஆதித்யன், மூவராக வெளியே வந்தது எதிர்பாராதது தான்.
*****
வீட்டிற்கு வந்த சந்தியா அங்கு நிலவிய அமைதியை வித்தியாசமாக பார்க்கவில்லை. Dinner-ஐ தாண்டியும் அமைதி நிலவியது. முன்பை விட வர்ஷா அதிக இடைவெளியை maintain செய்தாள்.
அன்று இரவு ஆதித்யன் மெத்தையில் கண் மூடி யோசித்திருந்தார். Pregnancy-ன் முதல் trimester-ல் ரிஸ்க் எடுத்து வர்ஷா travel செய்த வருத்தம், அவளின் தற்போதைய உடல்நிலை, அவள் இறங்கியதும் தன்னால் அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி, வர்ஷா இன்று தன்னிடம் கேட்ட கேள்வியில் இருந்த சில நியாயங்கள், பிறக்க போகும் குழந்தையை வளர்க்க வேண்டிய பொறுப்பு, நாளை தனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கான பொறுப்பு என அழுத்தங்கள் அவரது நெற்றியின் சுருக்கங்களை அதிகமாக்கின. ‘ என்னப்பா. பேசினீங்களா வர்ஷாகிட்ட?’ என யோசனையை களைத்தாள் சந்தியா.
‘நேத்து பேசினது wasn’t typical Varsha. Very surprised. உங்க கிட்ட எப்படி பேசினா?’
‘ Lets move to US சந்தியா’
‘ பொண்ணு sentiment எல்லாம் போட்டு உங்க மனதை மாத்திட்டாளா. நல்ல வேளை முதல்லயே கல்யாணம் பண்ணிட்டோம்’ என கேலியாக சொன்னாள் சந்தியா.
‘ She will be a single mom in another 8 months ’ என ஆதித்யன் கூறியது இடியாக இறங்கியது சந்தியாவிற்கு. வர்ஷா அவள் Russian boy friend குறித்து பிடி கொடுக்காமல் பேசியது இப்போது புரிந்தது. அதே போல் ஒரு Matured woman தான் தன் தந்தைக்கு சரியான match என வர்ஷா நினைத்ததற்கும் இது காரணமாக இருக்குமோ என்று ஒரு சிறு flashback சந்தியா மனதில் ஓடியது.
‘ It is possible that my child and grand child might grow up together in US’ .
‘ We can postpone ours indefinitely dear’
‘ No Sandhiya. Let things take its natural course. உன் life வேற யாருக்காகவும் compromise ஆக கூடாது. We will have children whenever that happens. என்னை கல்யாணம் பண்ணியதால் unfortunately you will be a grandma first. World’s youngest and most pretty grandma ‘ என கூறியவாறே சந்தியா மடியில் தலை வைத்து முகம் பதித்து கொண்டார் ஆதித்யன். இன்று தனக்கிருந்த அழுத்தத்தை எல்லாம் அவர் சந்தியா மடியில் கொட்டியது போல் இருந்தது.
இந்த நேரத்தில் வர்ஷாவிற்கு supportive ஆக இல்லாமல் disturbance ஆக இருந்தோமே என்ற குற்ற உணர்வும், தான் நேற்று இன்னும் கனிவாக பேசியிருக்கலாமோ என்ற குழப்பமும் சந்தியாவை வர்ஷாவின் அறையை நோக்கி இழுத்தது.
ஷர்ஷா அறை கதவை லேசாக திறந்து சந்தியா உள்ளே நுழைய, ‘ No Sandhiya. Leave me alone. ’ என பளீரென பதில் வந்தது வர்ஷாவிடமிருந்து.
( Season 1 முடிவடைந்தது).
Season 2 -வில் மீண்டும் சந்திப்போம்.!!!