வாழ்க்கை வாழ்வதற்கே ! -சிறுகதை
vazhkai vazhvatharke ! -siru kadhai
![]() |
வாழ்க்கை வாழ்வதற்கே ! |
AOB ன்னா Arthi Online Boutique ன்னு அர்த்தமா? or Arthi online b***h?. இப்படி காலையில தன் husband கேட்டது ஆர்த்தி தலையில இடிச்சிட்டே இருந்தது. ஸ்கூல் படிக்கிறப்போலேருந்தே Stitching, designing-ல் தான் ஆர்வம். Fashion Designing படிக்கனும்னு பேரண்ட்ஸ் கிட்ட சொன்னப்போ ‘வீட்டு கிட்ட இருக்கிற காலேஜில் அதெல்லாம் இல்லை. இங்க இருக்கிறதை ஏதாவது படி’ என்ற சிம்பிள் லாஜிக்கில் சம்பந்தமே இல்லாமல் Bsc Chemistry படித்தாகி விட்டது. ஸாரி Degree வாங்கியாகி விட்டது. ஃபைனல் இயர் எக்ஸாம் முடித்த அறுபது நாட்களுக்குள் திருமணம். அட அதிலாவது நாமளே டிஸைன் செய்த பிளவுஸ் போடலாம் என்றால் மாமியார் அந்த டிஸைன் எல்லாம் advertisement-க்கு தான் லாயக்கு என நிராகரித்ததால் வாழ்க்கை முழுதும் மாமியாருக்கு பிடித்த பிளவுஸ் டிசைனில் கல்யாண ஃபோட்டோவை பார்த்து கொண்டிருக்க வேண்டிய நிலை.
பக்கத்தில் கட்டப்படும் கட்டிடத்துக்கு கொட்ட பட்டிருக்கும் மணலில் அங்கு கட்டிட வேலை செய்யும் ஒருவரின் குழந்தையோடு சேர்ந்து விளையாடி கொண்டிருந்தான் மகன் வேதாந்த். அவனை பார்த்து கொண்டே தன் கனவுகளின் இடிபாடுகளை புரட்டலானாள். 21 இல் கல்யாணம், 22 இல் குழந்தை, 24 இல் ‘B***h’ பட்டம்.
YouTube இல் AOB ன்னு ஒரு சேனல் தொடங்கி நம்ம Design Thinking பகிர்ந்துக்க தான் தைத்த சுடிதார்களை தானே உடுத்தி வீடியோ எடுத்து போட்டதில் ஒரே மாதத்தில் சம்பாதித்தது சில ஆயிரம் Subscribersகளும் online b***h பட்டமும். நமக்கு தான் எதுக்குமே தைரியம் இல்லையே. மூனு வேளை சாப்பிட, வாழ்க்கை முழுதும் ரெண்டும் ஒன்னும் நாலுன்னு புருஷன் கணக்கு சொல்லதானே லாயக்குன்னு தன்னை நினைத்து கோபமும் அருவருப்பும் ஏற்பட்ட அதே நேரம் கட்டிடத்துக்கு அருகே இருந்து வந்த ஒருவன் வேதாந்தோடு விளையாடிய அந்த குழந்தையை தூக்கி ‘வித்துடுவேன் கொடு நாயே’ என கூச்சல் போட உள்ளே இருந்து ஓடி வந்த கட்டிட வேலை செய்யும் வைதேகி தன் புடவை நுனி முடிச்சை அவிழ்க்க தொடங்கியதுமே அந்த குழந்தையை மணலிலேயே போட்டுவிட்டு அவள் புடவை நுனியில் இருந்த பணத்தை பிடுங்கி கொண்டு வேகமாக நடந்தான்.
இதை எல்லாம் பார்த்து உறைந்து போன ஆர்த்தி ‘திருடன் திருடன்’ ன்னு மெல்லிய குரலில் பரிதாபமாக கத்துவதை பார்த்த வைதேகி ‘ சரியா தான் சொல்றீங்க. இதுக்கு மேலேயும் இவனை புருஷன்னு ஏன் சொல்லனும்?. இவன் குடிக்க நான் உழைக்கற காசை தரலைன்னா என்னை தே*** நாயேன்னு சொல்றான். ரெண்டும் ஒன்னும் நாலுன்னு சொல்ற கேனச்சின்னு நினைச்சானா? சொந்தமா உழைச்சு பிழைக்கறேன் நான். நடுவுல இவன் எதுக்கு?’ என ஆர்த்தியை பார்த்து சொல்லியவாறே மணலில் சுருண்டு விழுந்த தன் ஒரு வயது மகன் அருள்ராஜை வேகமாக தூக்கி கொண்டு ‘என் பிள்ளைய எப்படியாவது படிக்க வைக்கிறேனா இல்லையான்னு பாருங்க’ என விம்மல் கலந்த வைராக்கியத்தோடு அங்கிருந்து நகர்ந்தாள் வைதேகி.
இது எல்லாம் மூன்று, நான்கு நிமிடங்களில் நடந்து முடிந்தது. இந்த கூச்சலில் பயந்து போன வேதாந்த் ஓடி வந்து மெல்ல ஆர்த்தியின் கால்களை கட்டி கொண்டான். ஆர்த்தியோ மெல்ல தன் கால்கட்டு தளர்வதை உணர்ந்தாள்.
பதினாறு ஆண்டுகள் உருண்டோடின. வைதேகி ஆனந்த தழுவலின் இடையே மெல்ல கண் விழித்தாள். கட்டிலோரத்தில் தன் புடவை குவியல் இருப்பதை உணர்ந்தாள். மெல்ல எழுந்து கட்டிலில் அமர்ந்து கொண்டே தன் தலை முடியை வாரி கட்டினாள். “இன்னிக்கு ஸ்கூலுக்கு நீயே போயிட்டு வந்திடு. சாயங்காலம் பீச்சுக்கு கட்டாயம் வருவேன். கொஞ்சம் லேட்டா வருவேன். பீச்சுக்கு போயிட்டு டின்னர் போலாம்.’ படுக்கையில் இருந்து வந்த குரலை கேட்டு ‘ம்ம்’ என்ற புன்னகையுடன் தலையாட்டி தன் ஆடைகளை எடுத்து கொண்டு நடந்தாள். அவளது அழகிய வளைவுகள் குளியலறைக்குள் மறைந்தன.
அருள்ராஜ் பள்ளி படிப்பின் இறுதி தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று இருந்தான். இந்த மகிழ்ச்சியோடு நண்பர்களை கண்டு பேசிவிட்டு ஒரு வெற்றி களிப்பில் மாலை மெரினாவில் காத்து வாங்கி கொண்டிருந்தனர் வைதேகியும் அருள்ராஜும். அந்த மாலை தென்றலை கிழித்து கொண்டு மெரினா மணலில் அழுத்தமாக கால் பதித்து வேகமாக நடந்து வந்து அருள்ராஜை கட்டி தழுவி ‘Congrats my boy, very proud of you!‘ என்றபடியே அமர்ந்தாள் சொன்னபடியே தாமதமாக வந்த வைதேகியின் வாழ்க்கை துணைவி ஆர்த்தி. இன்று ஆர்த்தி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வேலை செய்யும் boutique chain நடத்தும் வெற்றிகரமான Entrepreneur. வைதேகி பிள்ளைகளை வளர்க்க, AOB என்ற சிறிய மகளிர் தையலகத்தை சில கோடிகள் புரளும் நிறுவனமாக வளர்த்தெடுத்தாள் ஆர்த்தி. AOB இன்று சென்னையில் பெண்கள் மத்தியில் நல்ல பிரபலம். ‘Vedanth wants me to join him in BITS Pilani’ அருள்ராஜ் சொன்னதும் ‘You have a good score.May be you should join him in BITS’ என்றாள் ஆர்த்தி. வைதேகி ஆர்த்தியின் அருகில் அமர்ந்து ஆர்த்தியின் தோளில் தலை சாய்க்க, ஆர்த்தி வைதேகியின் தலையை மெல்ல வருடினாள் .
இந்தியா உள்பட பல நாடுகளில் இன்று LGBT சமூகத்தை சட்டரீதியாக அங்கீகரித்து, அரவணைத்து ஏற்று கொள்ளும் பக்குவம் மேலோங்கி வருவதை காணலாம். புது அர்த்தம் கண்ட சமுதாயமும், புது திருத்தம் கண்ட சட்டமும் ஆர்த்தியையும் வைதேகியையும் வாழ்க்கை துணைகளாக இணைத்தன.
அன்று இரவு ஆர்த்தியும் வைதேகியும் ஈருடல் ஓருயிராய் கட்டிலின் மேல் பிணைந்திருந்தனர். கட்டிலுக்கு அருகே இருந்த Bedlamp-ன் கீழ் ஆர்த்தியும், வைதேகியும் புன்னகையோடு தோளில் கைகோர்த்திருந்த Photo இருந்தது.
அந்த ஃபோட்டோவில் அவர்கள் அணிந்திருந்த ஆடை டிசைனும் அவர்கள் இருவரின் விருப்பபடியே இருந்தன.
பின் குறிப்பு :