கோழி கிறுக்கல்

கோழி கிறுக்கல்

ஒரு கதை கருவின் பயணம் - 3 / Oru kathai karuvin payanam part-3

     

ஒரு கதை கருவின் பயணம் - 3 

Oru kathai karuvin payanam part-3



    நாம் சென்ற அத்தியாயத்தை முடித்தது இந்த இடத்தில் தான். 1934-ல் வெளிவந்த It Happened One Night மற்றும் 1953-ல் வெளிவந்த Roman Holiday படங்களின் கதை கரு என்ன? ஏதோ ஒரு காரணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் பணக்கார வீட்டு பெண், தன் அடையாளத்தை மறைத்தோ மறைக்காமலோ  அங்கு தான் சந்திக்கும் ஒருவரோடு காதல் வசப்படுகிறார்.   நாம் இங்கே தொகுத்திருக்கும் திரை படங்களில் இந்த கதை கரு மையமாகவோ அல்லது பல கூறுகளில் ஒன்றாகவோ வெவ்வேறு கதைகளில் கையாளப்பட்டிருக்கும். ஒரு சில படங்கள் ‘Roman Holiday’, ‘It Happened One Night’ படங்களின் நேரடி தழுவல் என சத்தியமே செய்யலாம்


1956 -ல் AVM தயாரிப்பில் வெளிவந்த ஹிந்தி படம்  Chori Chori . Raj Kapoor - Nargis என்ற செம ஃபேமஸ் நிஜ ரொமாண்டிக் ஜோடி இணைந்து நடித்த கடைசி படம் இது. கதை/திரைகதை இரண்டும் அப்படியே It Happened One Night படத்தை தழுவி எடுக்கப்பட்டது. Nargis பணக்கார வீட்டு பெண் - ராஜ்கபூர் பத்திரிக்கையாளர். படம் ஹிட்டடித்தது. ( இப்படத்தின் டைட்டிலில் Editing Assistant என S P முத்துராமனின் பெயரை காணலாம்). 


1956-ல் வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த அமரதீபம். பணக்கார கதாநாயகி சாவித்திரிக்கு கோபக்கார முறைமாமன் நம்பியாரோடு கல்யாணம் ஏற்பாடாகிறது. இந்த Arranged Marriage பிடிக்காத கதாநாயகி வீட்டை விட்டு வெளியேறி ஏழையான சிவாஜியை மீட் பண்ணி காதலிக்கிறார்.இந்த கதை கரு ஏனோ கதாசிரியருக்கு வீக்காக பட துணைக்கு Random Harvest என்ற படத்தின் கருவையும் சேர்த்து  ஒரு தலை சுற்றலான கதையை புனைந்திருப்பார். இன்னொரு கதாநாயகி பத்மினி வேறு. படம் சுமாராக தான் போனது. ஆயினும் சிவாஜியும் சாவித்திரியும் ஒரு வேனில் தங்கி காதல் வயப்படும் அந்த ஆரம்ப கட்ட போர்ஷனில் நல்ல ரசனையும் ஃபரெஷ்னஸ்ஸும் இருப்பதை காணலாம். இந்த வேன் காட்சிகளே பின்னாளில் வறுமையின் நிறம் சிகப்பு படத்தின் climax வேன் காட்சிக்கும் , குங்கும சிமிழ் படத்தின் goods வண்டி காட்சிகளுக்கும் inspiration என தோன்றுகிறது. இன்றைய Live In relationship கதைகளுக்கும் இது ஒரு முன்னோடி. படத்தின் கதாசிரியர் பின்னாளில் தமிழ் சினிமாவை புரட்டி போட்ட ஶ்ரீதர்.  ( இந்த வீனஸ் பிக்‌ஷர்ஸ் அதிபர் கிருஷ்ணமூர்த்தியின் தம்பி கோபால்ரத்தினத்தின் மகன் தான் சுப்பிரMani கோபால்Ratnam. )


1958 ஆம் ஆண்டு Dev Anand - Waheeda Rahman நடிப்பில் வெளிவந்த ஹிந்தி படம் Solva Saal. தந்தை ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நகைகளோடு, தன் காதலனுடன் இரவில் வீட்டை விட்டு வெளியேறுகிறார் கதாநாயகி. வழியில் கதாநாயகியை அம்போவென விட்டுவிட்டு காதலன் நகைகளோடு தப்பி ஓட, அந்த இரவில் அவருக்கு உதவுகிறார் பத்திரிக்கையாளரான( அடடே !) ஹீரோ. இறுதியில் பார்த்தால் அந்த arranged marriage மாப்பிள்ளையே நம்ம ஹீரோ தான்( அடடடடே !). படம் சுமாராக போனது என்றாலும் இப்படத்தில் Hemant Kumar பாடிய ‘ Hai apna dil awara,...’ இன்றும் ஒரு  Chartbuster. 


1958 ஆண்டில் நாம் மேலே சொன்ன அமரதீபம் படம்Amardeepஎன்ற பெயரில் ஹிந்தியில் சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வெளியிட்டது. இதில் வைஜெயந்திமாலா வீட்டை விட்டு வெளியேறி  Dev Anand- காதலிப்பார்



1965-ல் தமிழில் வெளிவந்த படம்நவராத்திரி’. இதிலும் Arranged marriage பிடிக்காமல் கதாநாயகி தன் காதலனை தேடி வீட்டை விட்டு வெளியேறுகிறார். இந்த கருவை வைத்து கொண்டு வேறு ஒரு கதையை பின்னியருப்பார் A.P. நாகராஜன்ஒன்பது நாட்கள் கழித்து அந்த Arranged marriage மாப்பிள்ளையே அந்த காதலன் தான் என தெரிய வரும்.


1966 வெளிவந்த தமிழ் படம்சந்தரோதயம்’. மறுபடியும் Arranged Marriage பிடிக்காததால் ரொம்பவே  பணக்கார வீட்டு கதாநாயகி வீட்டை விட்டு வெளியேறி on the way-ல் ஹீரோவை சந்திக்கிறார். அந்த ஹீரோ அநீதியை எதிர்க்கும் ஒரு பத்திரிக்கையாளர். இந்த பத்திரிக்கையின் முதலாளி மோசமானவர். அவரால் ஒரு காலத்தில் பாதிக்கப்பட்டவர் கதாநாயகியின் Caretaker. மீதி கதையை நீங்களே  fill up பண்ணி கொள்ளுங்கள்


1966. - ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ - சினிமாவில் ஹீரோயினாக ஆசைபடும் நம்ம கதாநாயகிக்கு கல்யாணம் ஏற்பாடு செய்கிறார்கள். Arranged Marriage பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறும் கதாநாயகி ‘by mistake’ ஒரு கொலையை பார்த்து விடுகிறார். வில்லன்கள் துரத்த  ஒரு பஸ்ஸில் ஏற வில்லன்களும் அதே பஸ்ஸில் ஏறி விடுகின்றனர். ஒரு செம coincidence ஆக கதாநாயகியை காப்பாற்ற போகும் ஹீரோவும் அதே பஸ்ஸில் . இறுதியில் நீங்கள் எதிர்பார்த்த ட்விஸ்டாக அந்த Arranged Marriage மாப்பிள்ளை யாரென்று நினைக்கறீர்கள்? ( இந்த படம் தமிழின் சிறந்த காமெடி படங்களில் ஒன்று. ஒரு proper road genre படமும் கூட. இப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றது).


1967-ல் வெளிவந்த வங்காள மொழி படம் Nayika Sangband. ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் நல்ல வசதி படைத்த பிரபல சினிமா கதாநாயகி இரவில் ஒரு ஸ்டேஷனில் இறங்க தவறுதலாய் ரயிலை மிஸ் செய்து விடுகிறார். அந்த இடத்தில் அதுவரை சினிமா பார்த்திராத ,அந்த பிரபல சினிமா கதாநாயகியை அடையாளம் தெரியாத நம்ம ஹீரோவை சந்திக்க, அப்பாவியான ஹீரோவும் எளிமையான அந்த ஊரும் பிடித்து போக தன் அடையாளத்தை மறைத்து அங்கேயே தங்கி ஹீரோவை காதலிக்கிறார்


1971 - நாம் மேலே சொன்ன படத்தை அப்படியே தமிழில் சித்ராலயா கோபு வசனம் எழுதசுமதி என் சுந்தரிஎன்ற பெயரில் எடுத்தார்கள். படம் ஹிட்


1972 - நாம் மேலே சொன்ன ‘Madras to Pondicherry’ படம் ஹிந்தியில்Bombay to Goa’ வாக ஹிட்டடித்தது. ( இந்த படத்தின் தயாரிப்பாளர் பிரபல ஹிந்தி காமெடி நடிகர் Mehmood. ஹீரோ அப்போது அவ்வளவாக புகழ் பெறாத இளம் நடிகர் Amitabh. ஒரு நாள் படபிடிப்பிற்கு அமிதாப்புடன் வந்திருந்த அவரது நண்பரை Mehmood இடம் அறிமுகம் செய்து வைத்தார். நண்பரும் பார்க்க எளிமையாகவும், அமைதியாகவும் இருந்தார். சற்றே மது போதையின் உற்சாகத்தில் இருந்த Mehmood , அமிதாப்பின் நண்பரிடம் உனக்கு பணம் ஏதும் வேணுமா என கேட்டாராம். அமிதாப் மெல்ல அவர் காதில்இவர் பெயர் ராஜீவ். இவர் தாயார் தான் இந்தியாவின் பிரதம மந்திரி இந்திரா காந்திஎன கூற சற்றே ஆச்சரியத்துடன் போதை தெளிந்தவராய் அங்கிருந்து நகர்ந்தாராம் Mehmood.)


1985 - ‘குங்கும சிமிழ் படத்தில் தன்னை காப்பாற்றி கொள்ள வீட்டை விட்டு தப்பித்து பஸ்ஸில் ஏறி சென்னைக்கு போகும் வழியில் ஹீரோ மோகனை சந்திக்க ஒரு சிறிய மோதலுக்கு பிறகு காதல். இந்த படத்தில் இருந்த எளிமையும் , goods வண்டி மற்றும் கடற்கரை காட்சிகளின் சுவாரஸ்யமும், இசை ஞானியின் இசையும் படத்தை ஹிட்டாக்கின.



1986 - ‘உயிரே உனக்காக’ - ஒரு ராஜ வம்சத்து பெண்ணுக்கு ராஜ வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட அரண்மனையிலிருந்து வெளியேறி தென் கோடியில் உள்ள கன்னியாகுமரிக்கு வருகிறார். அங்கே தன் அடையாளத்தை மறைத்து அங்கே உள்ள ஒரு டூரிஸ்ட் கைடான நம்ம ஹீரோ வீட்டில் தங்கி அவரையே லவ் பண்ணி இறுதியில் உண்மை வெளிவந்து, helicopter fight எல்லாம் நடந்து சுபம். இது Roman Holiday வின் கதை (கரு) தான்.நேர்த்தியாக சொல்லப்பட்ட விதம், Laxmikant-Pyarelal-ன் ஹிட் பாடல்கள், நதியா/மோகன் மீதான craze என இப்படம் ஹிட்டானது. (இந்த படம் வந்த காலகட்டங்களில் நான் தென்தமிழ்நாட்டில் ஓரளவு பெரிய கிராமத்தில் Primary ஸ்கூலில் படித்து கொண்டிருந்தேன். வீட்டு பக்கத்தில் இருந்த ஃபேன்சி ஸ்டோரில் பேனா நிப்பு வாங்கவோ, நோட்டு புக் வாங்கவோ போனால் அங்கே ஒரு girls group ஒரு பெட்டியில் இருக்கும்  பிளாஸ்டிக் தோடு, செயின், வளையல், hair clip போன்றவற்றை புரட்டியவாறே அதை வாங்குவதா? வேணாமா? என அலசி கொண்டிருப்பார்கள். ஒரு ரெண்டு மணி நேரம் கழித்து வேறொரு ஜோலியாக நாம் அந்த கடை பக்கம் போனால் அதே girls group அதே பிளாஸ்டிக் தோடு, வளையலை வாங்குவதா வேணாமா என இன்னமும் பேசி கொண்டிருப்பார்கள். கடைக்காரர்வேணாம், அழுதுருவேன்ரேஞ்சிற்க்கு ஓரத்தில் நின்று கொண்டிருப்பார். அந்த பிளாஸ்டிக் நகைகளுக்கெல்லாம் அப்போது நதியா வளையல், நதியா தோடு, நதியா hairclip என்று தான் பெயரே. அந்த அளவுக்கு நதியாவின் வீச்சும், அவரின் Dressing sense-ன் தாக்கமும் கிராமங்கள் வரை பரவி இருந்தது. ‘Modern dress’-ன் dictionary யாகவே நதியா அப்போது பார்க்கப்பட்டார்இந்த படத்தில் வரும்பன்னீரில் நனைந்த பூக்கள்என்ற solo பாடலில் அவரின் costume பெரிதும் ரசிக்கப்பட்டது. நமது லட்சகணக்கான(😆) வாசகிகள் சிலருக்கு கூட இந்த நதியா விஷயமெல்லாம் தெரிந்திருக்கலாம்).


1988 - பாட்டி சொல்லை தட்டாதே - இதில் கதாநாயகி கட்டாய திருமணம் பிடிக்காமல் ரயிலேறி அதில் ஹீரோவை மீட் பண்ணி தன் கடமையை செய்கிறார், ஸாரி லவ் பண்ணுகிறார். பிறகு ஆச்சி takeover செய்து கதையை வேறு தளத்துக்கு கொண்டு சென்றிருப்பார். மெகா ஹிட் படமான இது தெலுங்கிலும் ரீமேக் ஆனது. இதே ஆண்டு வெளியானபுது புது அர்த்தங்கள்திரை படத்திலும் சித்தாராவின் கிளை கதையும் நம் கதை கருவை ஒட்டியதே.


1991 - Dil hai ki ye manta nahinநாம் ஏற்கனவே சொன்ன Chori Chori படத்தின்( அதாவது It Happened One Night படத்தின் ) ரீமேக் இது. படம் பெரிய ஹிட்.


1993 - அமராவதி - வீட்டை விட்டு ஓடி வரும் கதாநாயகி ஹீரோவை சந்தித்து லவ் பண்ணுகிறார். Nth time சொல்லப்பட்ட இந்த கதை interesting ஆக சொல்லப்பட்டதால் மீண்டும் ஹிட்டானது


1993 - நான் பேச நினைப்பதெல்லாம் - நாம் மேலே சொன்ன one liner தான் கதாநாயகியின் கதை என்றாலும் அதை கண்டுபிடிக்க முடியாத அளவு அதற்கு முன்னும் பின்னும் சைடிலும் இடையிலும் சம்பவங்களை கோர்த்து வெற்றி கண்டிருப்பார் விக்ரமன்


1994- மே மாதம்- கதைக்காக இவர்கள் ரூம் போட்டெல்லாம் யோசிக்கவில்லை (அல்லது ரூம் போட்டும் யோசிக்கவில்லையா?? ). அப்படியே Roman Holiday தான். படத்தில் சுவாரஸ்யம் கண்டிப்பாக மிஸ்ஸிங். லவ் செய்பவர்கள் சோகத்திலும் சந்தோஷத்திலும் பாட இரண்டு நல்ல பாடல்கள் கிடைத்தது.


2003 - தெலுங்கில் வெளியாகி எக்கசக்கமாக கலக்கியது ‘ஒக்கடூ’. செம ரௌடியான அமைச்சர் மகனோடு வலுகட்டாயமாக திருமணம் ஏற்பாடாக பெற்றோரே கதாநாயகியை வீட்டை விட்டு வெளியேற சொல்கின்றனர். கதாநாயகியை வில்லன் துரத்த On the way ஹீரோ காப்பாற்ற , ஒரு கட்டத்தில் காதல் இறுதியில் சுபம். இந்த ஹீரோயின் based கதை கருவை Heroism பொங்க கபடியாட வைத்தது கதாசிரியரின் சாமர்த்தியம். ‘யோவ் !, இது எங்க தளபதியோட கில்லி  கதைய்யா ’. (அவுனு, அயித்தே ஒரிஜினல் தெலுங்கு பாபு)


2004 - ஒக்கடூ தமிழில் கில்லி யாக மீண்டும் ஹிட்டடித்தது. 1950-களில் வெறும் கையோடு ஓடிய கதாநாயகிகள் ஐம்பது வருடங்கள் கழித்து கையில் Degree Certificate உடன் வீட்டை விட்டு வெளியேறியது பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது என ..... தம்பி சுப்பா !, ரொம்ப உணர்ச்சி வசபடாத. அதெல்லாம் நாங்க யோசிச்சுகறோம். நீ இந்த எபிஸோடு முடிப்பா.....அதுவும் சரிதான். 


2006 - ஒக்கடூ கன்னடத்தில் ‘அஜய்’ ஆனது.ஒக்கடூவையும், கில்லியையும் கர்நாடகத்தில் எல்லோரும் பார்த்தாகி விட்டது என confirmed ஆக தெரிந்தும் மீண்டும் அதே போல் கபடியாட வைத்தார்கள் கன்னடத்தில். 


2008 - வங்காளத்தில்  ஒக்கடூ ‘ஜோர்’ ஆகி ஜோராகவே ஓடியது.


2015 - ஒக்கடூ ஹிந்தியில் ‘Tevar’( அதாவது திமிரு)  என ரீமேக் செய்யப்பட்டு படு தோல்வியடைந்தது. 


இந்த கதை கரு இதற்கு மேலும் பயணமானது. மீண்டும் ஹாலிவுட்டிலும், பிலிபைன்ஸ் மொழியிலும், தமிழ் மொழி உட்பட பல இந்திய மொழி படங்களிலும் இன்று வரை கையாளபடுகிறது. நாம் மேலே கூறியது கண்டிப்பாக முழுமையான லிஸ்ட் கிடையாது


இந்த கதை கருவின் வெற்றிக்கு காரணம் என்ன ? ஒரு ஆண் வீட்டை விட்டு ஓடினால்உருப்படாதவன்என அலட்டி கொள்ளாமல் கடந்து போகும் நம் சமுதாயம், ஒரு பெண் வீட்டை விட்டு போனால் ஆச்சரியம், ஆர்வம், அனுதாபம், வம்பு, கவலை, விஷமத்தனம்  என பல விதங்களில் ரியாக்ட் செய்யும். அது கட்டாயம் ஒரு பேசும் பொருள் ஆகும். சமுதாயத்தின் இந்த மனநிலையே இந்த கருவை மீண்டும் மீண்டும் நாம் திரையில் பார்ப்பதற்கு காரணம் என்று தோன்றுகிறது


                                                                                      (பயணம் தொடரும்) 


இதன் முந்தைய கதை கருவின் பயணம் பகுதி #2படிக்க👇,


பகுதி #2


கதை கருவின் பயணம் பகுதி #1படிக்க👇,


பகுதி #1





Previous
Next Post »