சந்தியா வந்தனம் அத்தியாயம்
1
Sandhiya vandhanam -Episode1
சந்தியா வந்தனம் அத்தியாயம் 1-ல் ,
விடியற்காலை 4:00 மணி
“நான் ஏர்போர்ட்க்கு வரலைப்பா.நீங்க மட்டும் போங்க”,
தனது கலைந்த கூந்தலை தூக்கி வாரி கட்டிகோண்டு மெல்ல ஆதித்யனின் மார்பில் கை வைத்து தனது தாடையை தன் கை மேல் வைத்து அவனுடைய கூர்மையான பார்வைக்கு பதில் பார்வை வீசினாள் சந்தியா.
கடந்த நான்காண்டு கால கோர்ட்ஷிப்பில் தனது உள்விவகாரங்களை மறைக்காமல் அவள் உரித்த தோழியாய் அவனுடைய அரவணைப்பில் பல இரவுகள் கழித்திருந்தாலும் இன்று சற்றே வித்தியாசமானது.
கடந்த பதினான்கு மணி நேரமாக ஆதித்யனின் மனைவி அவள்.
தனது ஐம்பதாவது வயதில், முதல் மனைவி மறைந்து ஏழு ஆண்டுகளுக்கு பின் ரேஜிஸ்ட்ரார் முன் நேற்று, Widower என்ற அடையாளத்தை துறந்தார் ஆதித்யன். அந்த நிகழ்வு இன்று ஃப்ளைட்டில் வந்து கொண்டிருக்கும் தனது ஒரே மகளுக்கு இன்னமும் தெரியாது.
சொல்லாமல் மறைக்கும் எண்ணமும் இருவருக்கும் இல்லை.
தனது புருவத்தை உயர்த்தி என்ன யோசனை? என ஜாடையில் கேட்டவாறே, மெல்ல அவனது ‘சால்ட் அண்டு பெப்பர்’ தாடியை தடவினாள்.
‘இன்னிக்கே நியூஸ் ஷேர் பண்ணிடலாமா?’ சந்தியா கேட்க,
‘Definitely!’
என தீர்க்கமாக பதில் வந்தது ஆதித்யனிடமிருத்து.
மெல்ல ஆதித்யனின் உதடுகளை வெற்றிலையை போல் தனது விரல்களில் பிடித்து தன் நாக்கால் சுண்ணாம்பு தடவி தனது உதடுகளை அதன் மேல் அழுத்தி அதை மடித்து மென்று எச்சில் விழுங்கி "கொட்டபாக்கு பாடலை"யே தன் இதழ்களால் பாடிய சந்தியா,
சரணம் முடிந்ததும் பல்லவி தானே ???
என்ற ரீதியில் ஆதித்யனை பார்த்தாள்.
சந்தியாவின் இதழை சுவைத்த ஆதித்யன், அவளது பின்வளைவுகளோடு அவளை அள்ளி எடுத்து தன் மேல் படர விட,
அரைகுறையாக இருந்த அவர்கள் முழுமையானார்கள் .
காலை 6 :00 மணி
ஆதித்யன் தன் மகள் வர்ஷாவை ரிசீவ் செய்ய பலத்த சிந்தனையோடு ஏர்போர்ட் லாபியில் இருந்த காஃபி ஷாப்பில் நின்று கொண்டிருந்தார்.
இம்மிக்ரேக்ஷன் முடிஞ்சிருக்குமா ???
மெஸேஜ் வரலயே? என்ற செயற்கை படபடப்பு ஏதுமின்றி காஃபி வாங்கி கொண்டு நடந்தார்.
அங்கே வெயிட் செய்து கொண்டிருந்த சந்தியாவிடம் ஒரு கப்பை நீட்ட புன்முறுவலோடு வாங்கிய சந்தியாவின் தோளில் கை போட்டவாரே இருவரும் அன்யோன்யமாக காஃபி குடிக்கலானர்.
‘ I’m glad that you finally agreed to come with me’ ஆதித்யன் சொல்ல,
மெல்ல தலையை நிமிர்த்தி,
ஆதித்யன் முகத்தை பார்த்து ‘May be you’re right dear. I should not be avoiding this moment’என்றாள் சந்தியா.
ஆதித்யன் கலியபெருமாள்
வயது : ஐம்பது.
உயரம்: 6 அடி
ஜிம்மிற்க்கு போவதில்லை என்றாலும் வீட்டிலேயே தினமும் உடற்பயிற்சி செய்தும் அடிக்கடி டென்னிஸ் விளையாடியும் சீரான உணவுபழக்கத்தாலும் ஃபிட்டான தேகம்.
குறிப்பாக flat belly.
ட்ரிம் செய்யபட்ட சால்ட் அண்டு பெப்பர் தாடி மீசை.
க்ரீம் கலர் கார்கோ ஷார்டஸ், கருப்பு கலர் ஷார்ட் ஸ்லீவ் போலோ டீ ஷர்ட் , வலது கையில் ஆப்பிள் வாட்ச், சாக்ஸ் போடாத பிராண்டட் ஷூஸ் என இளசுகளுக்கு சவால்விடும் தனி ஸ்டைல்.
கூர்மையான பார்வை,
குறைவான வார்த்தைகள்,
அலட்டிக் கொள்ளாத யதார்த்தம்.
அமெரிக்காவில் வசித்த போது பிறந்த மகள் வர்ஷா.
ஏனோ அங்கே சிட்டிஸன்ஷிப் வாங்கியதும் வர்ஷாவின் பதிமூன்றாவது வயதில் சென்னை திரும்பிய நான்கு வருடத்தில், Breast cancer-க்கு மனைவியை பறிகொடுத்ததும் வாழ்க்கையின் ஒரே அர்த்தம் வர்ஷா என்றானது.
அந்த புரிதலில் புது புது அர்த்தத்தை சேர்த்தது சந்தியாவின் நட்பு.
Immigration has just got over. She is in baggage claim’ என்றாள் சந்தியா.
தனக்கு வராத மெசேஜ் சந்தியாவுக்கு மட்டும் வந்திருப்பதை பொருட்படுத்தாமல் காஃபியிலும், தன் சிந்தனையிலும் மூழ்கினார். ஆதித்யன்.
ஆம்!! வர்ஷாவின் பெஸ்டீ சந்தியா!!! வர்ஷாவிற்க்கு இந்தியாவில் இருந்த போது தாயின் இழப்பை தாங்கிக் கொள்ள ஓரளவு உதவியது சந்தியாவின் நட்பு. பள்ளியில் சக மாணவியாக தொடங்கிய நட்பு, இவர்கள் லெஸ்போவோ என்று சிலர் சந்தேகிக்கும் அளவு இருக்கமான straight நட்பாக தொடர்கிறது. வர்ஷா இன்ஜினியரிங் முடித்து தன் தாய் நாட்டிற்க்கே திரும்பி மேற்படிப்பு முடித்து செட்டில் ஆக முடிவு செய்ய,
சந்தியா இங்கேயே M.A.( Journalism) முடித்து ஒரு ஆங்கில நாளிதழில் staff reporter ஆக பணிபுரிய,
இந்த பயணத்தில் இருவரும் 24 வயதை எட்டி பிடித்துள்ளனர்.
வர்ஷா தந்தையோடு வாரம் இரு முறை வீடியோ கால் செய்வாள் என்றால் சந்தியாவோடு வாரம் பல முறை வீடியோ காலில் பேசுவாள்.
வர்ஷா நிறைய பேசுவாள் என்றால் சந்தியா சளைக்காமல் கேட்டுக் கொண்டிருப்பாள்.
வர்ஷா தான் எடுக்கும் முடிவுகளுக்கு சந்தியாவின் ஒப்புதலை எதிர்பார்க்காவிட்டாலும் அங்கீகாரம் கிடைத்தால் மகிழ்வாள்.
சந்தியாவோ தன் முடிவுகள் பற்றி வர்ஷா உள்பட யாரிடமும் தானாக
விவாதிக்க மாட்டாள்.
வர்ஷாவிற்கு இன்ஜினியரிங் விருப்பம் என்றால்
சந்தியாவிற்க்கு ஆர்ட்ஸ் அண்டு ஹுமானிட்டீஸ்.
வர்ஷா Tom Clancy போன்று Light Fiction தேடினால்,
சந்தியா Ayn Rand போல் Heavy Fiction இல் மூழ்குவாள்.
Opposite poles definitely attract each other. இந்த இரு துருவங்கள் இப்படி ஒரு முக்கோணத்தில் சிக்கியிருப்பது சற்றே விந்தையானது.
இந்த ஃபளாஷ்பேக்குள் எல்லாம் போகாமல் ஆதித்யன் ஸ்மார்ட் ஃபோனில் சந்தியா சிலநாட்களுக்கு முன் தன் காதலியாக தனக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை மீண்டும் வாசித்துக் கொண்டிருந்தார்.
தான் டென்னிஸ் ஆடி திரும்பும் இடைவேளையில் காத்திருந்த போது அனுப்பிய,
‘காரா! ஆட்டக்காரா! காத்திருக்கேனே 💗😉!!!!’
என்ற வரிகளை படித்து உதிர்த்த புன்முறுவலை கலைத்தது "Varsha is here!" என்ற சந்தியாவின் குரல்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் வர்ஷாவும் சந்தியாவும் ஆரத்தழுவி லேசாக துளிர்த்த கண்ணீரோடும், மலர்ச்சியான புன்னகையோடும் கண்களாலேயே ‘lm so glad..I missed you so much’ என்று பரிமாறி கொண்டனர்.
![]() |
சந்தியா வந்தனம் அத்தியாயம்:1 |
ஆறு மாதத்திற்கு முன் தனது அமெரிக்கா பிஸினஸ் ட்ரிப்பின் போது வர்ஷாவோடு ஒரு வாரம் தங்கியிருந்திருந்தாலும், தன் மகளை பார்த்த மகிழ்ச்சியில் மெல்லிதாக ஒரு Hug செய்து,
‘How was your flight?’ என்றார் ஆதித்யன்.
‘Good Dad. Uneventful’ என்ற பதிலுடன் லக்கேஜ் கார்ட்டை தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு சந்தியாவுடனான உரையாடலில் முழுவதும் கரைந்தாள்.
சந்தியா மெல்ல ஆதித்யனை ஓரக்கண்ணால் பார்க்க
Just Carry on ! என்ற ரீதியில் ஆதித்யன் கண் ஜாடை செய்ய,
வர்ஷாவிடம் எப்படி சொல்வது? என்ற போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டியது.
(தொடரும் .....!)
சந்தியா வந்தனத்தின் அடுத்த அத்தியாயம் படிக்க👇,
பின் குறிப்பு :
---------------------
இந்த கதையும் , கதையில் வரும் கதா பாத்திரங்களும் சுப்பனின் கற்பனையே தவிர யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை என தன்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்.
4 comments
Click here for commentsBeautiful writing....:)
ReplyJust wow.....now eagerly waiting for the next episode
ReplyKozhi Nalla dhan kirukki irukku.Character sketch video maadhiri odudhu.Amazing to see some pics pertaining to scenes in the story.Chinna vishayam....Breast cancer is not fatal.Thappana seidhi parappa vendam.disease Peru maatha mudiyuma please.Rajesh Kumar crime novel padikkum bodhi yerpatta feelings varudhu ,novel padikkum bodhi.Aavaludan adutha episode yedhirparkirom kozhi.Seekiram kirukku
Replykozhi kuzhambai vida kozhi kirikku arumai
Reply