கோழி கிறுக்கல்

கோழி கிறுக்கல்

கதை கருவின் பயணம் பகுதி-1 / kadhai karuvin payanam part-1


                     கதை கருவின் பயணம் பகுதி-1 

                              kadhai karuvin payanam part-1  


கதை கருவின் பயணம் பகுதி-1/ kadhai karuvin payanam part-1, kozhi kirukkal
கதை கருவின் பயணம் பகுதி-1



           

    இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்காவில் வெளி வந்த விவசாயிகளுக்கான பத்திரிக்கை ‘The Country Gentleman’. இதில் ஒரு பகுதியாக கிராமப்புற சிறுகதைகளும் வெளிவரும். இதில் பிரபல கதாசிரியரும் ஹாலிவுட் இயக்குனருமான James Edward Grant எழுதிய Journal of Linnett Moore என்ற கதை 1947ஆம் ஆண்டு அப்பத்திரிக்கையில் வெளிவந்தது.

கதை இதுதான். American Civil War இல் பங்கேற்க சிப்பாய் ஒருவர் சென்று விட அவரது மகனும் மனைவியும் தனியாக இருக்கின்றனர். அவர்களுக்கு துணையாக அவர்கள் வளர்க்கும் நாயும் இருக்கிறது. அப்போது ஏற்படும் ஒரு தீ விபத்தில் சிப்பாயின் மனைவி இறந்து விட அந்த அதிர்ச்சியில் மகனும் ஊமையாகி விடுகிறான். போர் முடிந்து ஊருக்கு திரும்பும் சிப்பாய் துயரமடைந்து மகனுடைய மருத்துவ சகிச்சைக்காக வேறு ஊருக்கு நாயுடன் பயணப்படுகிறார்.வழியில் ஒரு இரக்கமற்ற பண்ணையாரோடு தகராறு ஏற்பட அவருக்கு அந்த ஊரை சேரந்த ஒரு பெண் உதவுகிறார். அந்த பெண்ணுக்கு இவர் மேல் ஒருதலை காதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அப்பண்ணையாருடனான மோதலில் இவருக்கு நியாயம் கிடைக்க அந்த மோதல் தந்த அதிர்ச்சியில் மகனுக்கு பேச்சு வர இறுதியில் அந்த பெண்மனியை சிப்பாய் ஏற்று கொள்ள எல்லாம் சுபம் !!!

1958 - இந்த கதை 1958ஆம் ஆண்டு ‘The Proud Rebel’ என்ற Western (Cowboy) படமாக புகழ்பெற்ற MGM நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றது. இதில் பிரபல ஹாலிவுட் நடிகர் Alan Ladd -ம் அவரது நிஜ மகன் David Ladd -ம் நடித்திருந்தனர். அந்த காலத்தில் இந்த Alan Ladd ஹாலிவுட்டில் ஓரு முக்கிய கதாநாயகன். Western genre படங்களில்  (cowboy padangal) John Wayne க்கு அடுத்து புகழ்பெற்றவர். இவர் நடித்த Shane படம் அடுத்து வந்த பல படங்களுக்கும் Cowboy பாத்திரங்களுக்கும் பெஞ்ச்மார்க். Sergio Leone தனது Cult Western படமான Once Upon a Time in the West-க்கு Shane படத்தையே இன்ஸ்பிரேஷனாககூறியுள்ளார். இந்த Alan Ladd உடைய வாழ்க்கை கொஞ்சம் சோகமானது. Shane படத்தை பற்றியும் Alan Ladd பற்றியும் வேறொர் blog-ல் பேசுவோம். 

இந்த MGM நிறுவனம் தான் James Bond, Pink Panther, Tom and Jerry, Robocop வகையறாக்களை தயாரிக்கும் ஹாலிவுட்டின் பிரபல நிறுவனம். சிங்கம் உறுமும் இவர்களது லோகோ உலகம் முழுதும் மிக பிரபலம்.

1964 - இந்தியின் பிரபல பாடகர் கிஷோர் குமார் நம்ம ஊர் கங்கை அமரனை போன்று ஒரு பன்முக திறமை பெற்ற கலைஞர். பிண்ணனி பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர், கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல தளங்களில் இயங்கியவர். இவர் இந்த The Proud Rebel படத்தின் கதையை ஹிந்தியில் Dhoor Gagan Ki Chaahon Mein என்ற பெயரில் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்து வெளியிட்டார். இவருடன் இவருக்கும் இவர் முதல் மனைவி பாடகி ரூமாவிற்க்கும் பிறந்த மகன் அமித் குமாரும் நடித்திருந்தார். (கிஷோர் குமார் மொத்தம் நான்கு முறை திருமணம் செய்தவர்). இந்த அமித்குமாரும் ஹிந்தியில் பிரபல பாடகர். Ek do teen பாடலின் ஆண் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான். அதெல்லாம் சரி. படம் என்ன ஆனது? விமர்சகர்களால் பாராட்டபட்டு ரசிகர்களால் நிராகரிக்கப்பட்டது. கிஷோர் குமாருக்கு நஷ்டம் ஏற்பட்டது.படத்தை பற்றிய எந்த Talk -ம் தியேட்டரை விட்டு வெளியே வரவில்லை. கிஷோர் குமார் இந்த கதையின் உரிமையை ஹாலிவுட்டில் இருந்து முறையாக வாங்கி படமாக்கினாரா என்பது குறித்த தகவல் நம்மிடம் இல்லை.

1965 - AVM நிறுவனம் தயாரித்த குழந்தையும் தெய்வமும் படம் வெளிவந்து பெருவெற்றி அடைய அதை ஹிந்தியில் எடுக்க முடிவு செய்தனர். (குழந்தையும் தெய்வமும் கதைக்கும் நீளமான வரலாறு உண்டு. அதை பற்றி வேறோர் பக்கத்தில் பார்ப்போம்). 

ஹிந்தியில் நடிகர்களை ஒப்பந்தம் செய்ய AVM சரவணன் அவர்கள் பம்பாய்க்கு சென்ற போது கிஷோர் குமார் படத்தின் போஸ்டர் அவர் கண்ணில் பட்டது. சோகமாக தந்தை, மகன் , நாய் நின்று கொண்டிருப்பதில் ஏதொ ஒரு ஈர்ப்பு இருப்பதாக பட பலரின் எதிர்ப்பை மீறி அந்த படத்தின் உரிமையை கிஷோர் குமாரிடம் இருந்து வாங்கினார்(ஒரு அமெரிக்கா பத்திரிக்கையில் வெளிவந்த கதையை எதற்கு கிஷோர் குமாரிடம் இருந்து விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று நீங்கள் யோசித்தால் அதில் தவறில்லை). AVM நிறுவனத்தின் ஆஸ்தான கதாசிரியரான ஜாவர் சீதாராமன் தமிழுக்கு ஏற்றார் போல் திரைக்கதையை மாற்றி அமைத்தார். 60 களின் துவக்கத்தில் ஜெமினி கணேசணுக்கும் AVM நிறுவனத்திற்குதம் ஏற்பட்ட மனக்கசப்பால் சில ஆண்டுகள் AVM நிறுவனம் ஜெமினியை வைத்து படம் எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில ஜெமினிக்கோர் தேக்க நிலை ஏற்பட தானே முன் வந்து AVM நிறுவனத்தோடு சமரசம் ஆனார். அதன் பலனாக அவர் தந்தை வேடத்தில நடிக்க 1966 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ராமு’ மிகபெரிய வெற்றி பெற்றது. 1967 - அதை தொடர்ந்து 1967 ஆம் ஆண்டு AVM இதை NTR நடிக்க தெலுங்கில் ரீமேக் செய்து வெளியிட மீண்டும் பெரிய வெற்றி. அந்த காலத்தில் AVM நிறுவனம் தங்கள் தயாரிப்பில் தமிழில் வெற்றி பெற்ற படத்தை சர்வசாதாரணமாக தெலுங்கிலோ ஹிந்தியிலோ குறைந்த காலத்திற்குள் ரீமேக் செய்து வெளியிட்டனர். அதற்கான கட்டமைப்பையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் அவர்கள் பெற்றிருந்தது அவர்களின் சாதனையே. இந்த டிரெண்ட் ‘பிரியமான தோழி’ வரை தொடர்ந்தது.(இன்று நம் தயாரிப்பாளர்கள் ஒரு மொழியில் படம் எடுக்கவே இவ்வளவு திணறுகிறார்களே என நீங்கள் யோசித்தால் அதிலும் தவறில்லை).1975 - மலையாளத்தில் பிரேம் நசீர் நடிக்க ‘பாபுமோன்’ என்ற பெயரில் வெளிவந்த இக்கதை மீண்டும் பெரிய வெற்றி பெற்றது. இதில் மகனாக நடித்தவர் நடிகர் கரண் என்பது உபரி தகவல்.

இப்படி பல படங்களாக வெளிவந்த கதையின் கரு இதுதான்: 

மனைவியை இழந்த ஆண் , பிள்ளையை காப்பாற்ற வேறு ஊருக்கு செல்ல அங்கே இன்னொரு பெண் இவரை ஒரு தலை பட்சமாக விரும்ப , ஆரம்பத்தில் அதில் விருப்பமில்லாத ஆண் இறுதியில் ஏற்றுக்கொள்ள அந்த பிள்ளைக்கும் ஒரு தாய் கிடைக்கிறார். 1983 - AVM பாக்யராஜை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்த போது பாக்யராஜ் சொன்ன கதை முந்தானை முடிச்சு. இதன் கதைகரு நாம் மேற்சொன்னது தான். இதை பாக்யராஜும் சமீபத்தில் ஹிந்து தமிழ் திசைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். பாக்யராஜ் என்ற மிக சிறந்த
திறமைசாலி இந்த கதை கருவை முற்றிலும் வேறு விதத்தில் அற்புதமாக கையாண்டிருப்பார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு( மூடு முல்லு), ஹிந்தி( மாஸ்டர்ஜி), கன்னடம் (ஹல்லி மேஸ்துரு) என இந்த கதை கரு பயணமானது.

2020 - இப்போது முந்தானை முடிச்சு மீண்டும் தமிழில் பாக்யராஜ் இயக்கத்தில் சசிகுமார் நடிக்க ரீமேக் ஆகிறது.

1958-ல் MGM நிறுவனம் இக்கதையை தயாரிக்க முன் வந்த போது விநியோகஸ்தர்கள் பலர் ஆர்வம் காட்டவில்லை. ஆயினும் இக்கதை கருவின் பயணம் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்வது ஆச்சர்யமே!! நேரடியாகவோ மறைமுகமாகவோ, தெரிந்தோ தெரியாமலோ, முழுதுமாகவோ அல்லது எந்த ஒரு பகுதியாகவோ இந்த கருவின் சாயல் சத்ரியன், ஒருவன், கேளடி கண்மனி, மகாநதி, தெறி, Andaz ( ஷம்மி கபூரின் கடைசி வெற்றி படம் ) என பல படங்களில் காணலாம்.

(தொடரும்) 



கதை கருவின் பயணம் பகுதி #2படிக்க👇,


பகுதி #2



                                                                                                   

Previous
Next Post »

3 comments

Click here for comments
subhaganesh
admin
25 July 2020 at 00:03 ×

நல்ல analysis....தெளிவான writeup...

Reply
avatar
Unknown
admin
25 July 2020 at 00:28 ×

Very interesting facts.enjoyed reading.karu onru kadhaigal veru,padam paarkaravangalum vera generation,adhan panam panrangha

Reply
avatar
Anonymous
admin
23 August 2020 at 07:28 ×

நல்ல தகவல்கள்������

Reply
avatar